இப்போது ஆண்கள் மூவரும் கொலை வெறி ஆனார்கள்..
“ஹலோ.. நீங்க உலக அழகியா.. உள்ளூர் கிழவி மாதிரி இருந்துகிட்டு.. பேச்சை பாரு “ என்று மிதுன் பதில் கொடுத்தான்..
அர்ஜுனும், ராகுல் இருவருக்கும் அதே கருத்து தான் என்றாலும் அவன் நாளைக்கு கிளம்பிடுவான்.. நாம இங்கேதானே குப்பை கொட்டியாகனும் என்று சிரிப்பை அடக்கி இருந்தார்கள்..
“ஹலோ.. MR. வடிவேல்... உங்கள யாரும் பஞ்சாயத்துக்கு கூப்பிடல.. ஏதோ கேப்டன் friend என்பதால் மன்னிச்சு விடறோம்.. “ என,
மிதுன் முறைத்தான்.. சில வினாடிகளுக்கு பிறகு எல்லோருமே சிரித்தனர்..
“போங்க உலக அழகிகளே.. போய் மேக் up ஸ்டார்ட் பண்ணுங்க.. அப்போதான் நீங்க நைட் எட்டு மணிக்கு பார்ட்டிக்கு உள்ளூர் அழகி ரேஞ்சுக்கு ரெடி ஆகி வருவீங்க” என்று மீண்டும் அவர்களை வாரி விட்டு அனுப்பி வைத்தான்..
அவர்கள் சென்றதும் சற்று நேரம் பார்த்துக் கொண்டு இருந்த அர்ஜுன் & கோ தங்கள் பேச்சை தொடர்ந்தனர்.
என்னதான் சுபாவ பிடிச்சுருக்கு என்றாலும் , அவள் பிளஸ் ஒன் படிக்கும்போதே அர்ஜுன்க்கு அவள் மேல் ஏற்பட்ட ஈர்ப்பை அவனாலேயே ஜீரணிக்க முடியவில்லை. இது எப்படி சாத்தியம், ஏன் என்றும் அவனுக்கு புரியவில்லை. அதற்கு பின் கிட்டத்தட்ட இந்த ஐந்து வருடத்தில் எத்தனையோ பெண்களை பார்த்து இருந்தாலும் , அவள் மேல் ஏற்பட்ட அந்த ஈர்ப்பு வேறு யாரிடமும் தோன்றவில்லை.
மேலும் அவனுக்கு ஒரு குற்ற உணர்வும் கூட... இவனை பார்த்து மிதுனும் மகிமாவை எண்ணிக் கொண்டிருந்தது .. அதை அவ்வப்போது வெளிபடுத்தினான்.. அதற்காக அவன் படிக்காமல் இல்லை.. ஆனால் அவன் disturb ஆனது என்னவோ உண்மை..
அவர்கள் காதல் கனவுகள் காணவில்லைதான்.. என்றாலும் பெண்களின் எண்ணம் வேறு திசையில் சென்று விட்டால் என்ன செய்வது என்ற கவலை இருந்தது.
இந்த மாதிரியான எண்ணங்களை தவிர்ப்பதற்காக மேலும் படிப்பில் ஆழ்ந்து இன்று அவரவர் துறையில் முன்னேறி இருந்தனர்.
மீண்டும் இவர்களை பார்க்கவும் , அவர்களின் ஆசை இப்போது மேலும் வளர ஆரம்பித்து விட்டது.
இதை எல்லாம் ராகுலிடம் சொல்லி முடிக்கவும், ராகுல்
“எல்லாம் சரி .. உங்க ரெண்டு பேரையும் அவங்க யாருக்கும் எப்படி அடையாளம் தெரியல?”
“அதுவா.. நாங்கதான் காலேஜ் final இயர் வரைக்கும் height தவிர ரொம்ப ஒல்லியாதானே இருந்தோம்.. இந்த கேம்ப்க்கு அப்புறம் தான் .. நல்லா exercise செய்து physical பிட்நெஸ் கொண்டு வந்தோம்.. அதோட .. சுபாவோட activities எங்கள அவள கவனிக்க வைத்தது.. ஆனால் எங்கள அவங்க கவனிக்க மாதிரி எதுவும் நாங்க பண்ணலையே.. அவங்க கொட்டமடிக்கவே அவங்களுக்கு சரியா இருந்தது. “ என்றான் அர்ஜுன்.
ராகுல், “சரி.. இப்போ என்ன பிளான் வச்சு இருக்கீங்க..?” என,
“அர்ஜுன் .. இப்போ வருண் கிட்ட பேசி பார்க்கலாமாடா?”
“இல்லை.. இப்போ எதுவும் பேச வேண்டாம். மிதுன் .. வருண் இப்போ என்ன பண்ணிட்டு இருக்கான்னு சொன்னான் அல்லவா ?”
“ஹ்ம்ம்.. வருண். மகிமா ரெண்டு பேரும் எம்.எஸ்.சி விஸ்காம் ..சேர்ந்து இருக்கங்கடா... “
“குட்.. அதோட அவங்க நோக்கம் எல்லாம் அட்வெர்டைசிங் agency ஆரம்பிக்கணும் .. இதுதான் அவங்க பிளான்.. சோ நீ கொஞ்ச நாள் வருண் கூட டச்லே இரு.. அப்புறம் நெக்ஸ்ட் இயர் ப்ராஜெக்ட் இருக்கும்.. அப்போ நம்ம கம்பனிலே குடு.. எப்படியும் ரெண்டு பேரும் சேர்ந்துதான் வருவாங்க.. அதுக்கு அப்புறம் நாம மத்தத பார்த்துக்கலாம்..”
ராகுல் “சூப்பர் பிளான் டா அர்ஜுன் .. அதுதான் உன்னை நம்ம பிரிகடியர் தூக்கி வைக்கிறார்.. “ என, ராகுலும், மிதுனும் hifi கொடுத்துக் கொண்டனர்.
அவர்களை அர்ஜுன் துரத்த சற்று நேரம் வேடிக்கை செய்து கொண்டு இருந்தனர்.
பிறகு மிதுன் அவன் மாமா quarters செல்ல, ராகுல் அர்ஜுன் இருவரும் celebration க்காக ரெடி ஆக ஆரம்பித்து இருந்தனர்.
ஹாய் friends... போன எபிசொட்லே .. சுபத்ரா ஸ்கூல் போற பொண்ணு.. அவ மேலே அர்ஜுன்க்கு ஒரு attraction வரது சரியா என்பது மாதிரி கொஞ்சம் பேர் பீல் பண்ணினாங்க.. எனக்குமே அது அவ்ளோ பிடிக்காத விஷயம் தான்.. எப்படியோ அந்த மாதிரி கொண்டு வர மாதிரி ஆகிடுச்சு. இனிமேல் இதை தவிர்த்து எழுத முயற்சிக்கிறேன்..
இந்த எபிசொட் இவ்ளோ குட்டியா கொடுத்ததுக்கு மன்னிச்சுடுங்க.. நெக்ஸ்ட் வீக் தீபாவளி celebration ஓட சேர்த்து பெரிய எபிசொட் கொடுக்கலாம் நு முடிவு பண்ணிருக்கேன்.. வில் ட்ரை மை லெவல் பெஸ்ட்.. நன்றி friends
மழை பொழியும்
{kunena_discuss:1031}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.