(Reading time: 8 - 16 minutes)

"மா!உயிரோட எரித்து கொன்னுட்டான்!இப்போ ச்சீப் யார் கூடவும் பேசுறதில்லை!அவங்க அம்மாவை கூட வெறுத்துட்டார்!அவங்க எல்லாம் அமெரிக்காவுல தான் இருக்காங்க.இன்னிக்கு என் ச்சீப்போட நிழலில் தான் இருக்காங்க மறைமுகமா!!"

"எனக்கு இவ்வளவு தான் அவரைப்பற்றி தெரியும்!"

"குழந்தையை பிரித்து கூட்டிட்டு வந்தாரு!எதுக்காக அவனை ஒதுக்கி வைத்தாரு?"-கோபமாக கேட்டாள் அவள்.

"என்ன சொல்ல?விஷ்வாவை பார்க்கும் போதெல்லாம் தன்னோட கசப்பான கடந்தக்காலம் அவர் நினைவுக்கு வரும்!நடந்ததை மாற்ற முடியாது!அதான்..ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டார் மேடம்!  யோசித்துக் கூட பார்க்க முடியலை!"-அவன் கண்கள் கலங்கின.

"ஓ.கே.ரிலாக்ஸ்!ப்ளீஸ்!"

"ஸாரி மேடம்!"

"இப்போ உங்க ச்சீப் வேற எங்கே போக போறாராம்?"

"இந்தியாவுக்கே போறதா இருக்காரு!எல்லாம் விஷ்வாக்காக!நான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டு இருக்கேன்.உங்களால தான் ச்சீப் மனசுல மாற்றம் வந்ததுன்னு தோணுது!இல்லைன்னா,விஷ்வாவை பற்றி இப்போதும் கவலைப்பட்டிருப்பார்னு தோணலை!"-அவள் தன் கண்கள் இறுக மூடி திறந்தாள்.

"நான்!உங்க ச்சீப்கிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு!டைம் கிடைத்தால்,என்னை ஒருமுறை வந்து பார்க்க சொல்லுங்க!"

"கண்டிப்பா!நான் அவர்கிட்ட சொல்றேன்!"

"தேங்க்யூ!"-அவள் மனதில் அதுவரையில் நீண்டிருந்த ருத்ராவின் மேலான தவறான எண்ணம் சற்றே தளர்ந்தது.

"ம்..நமஸ்தே அஸ்து பகவன் விஷ்வேஸ்வராய...!"-என்ற மந்திரம் அக்குளக்கரையில் திக்கெட்டிலும் ஒலித்தது.

கரத்தில் தர்ப்பையோடு தர்ப்பனம் கொடுத்துக் கொண்டிருந்த முகம்,அது ஆதித்யா தான்!

"பெயர் சொல்லுங்கோ!"

"மதுபாலா!"

"தோப்பனார் பெயர்!"

"மகேந்திரன்!"-மீண்டும் மந்திரங்கள் ஓதப்பட்டன.

சிறிது நேரம் கழித்து....

"இந்த பிண்டத்தை கரைத்துட்டு வாங்கோ!"-என்று புரோகிதர் கூற அதை வாங்கிக் கொண்டு சென்றார் ஆதித்யா.

மனம் முழுதும் வலி நிறைந்திருந்தது.தனது அர்த்தாங்கினியாக விளங்கியவள் தன்னை நீங்கி சென்று வருடம் பத்தை கடந்தும்,அவரால் ஆதியில் தோன்றிய பவித்ர பந்தத்தை மறக்க இயலவில்லை.குளத்தில் பிண்டங்களை கரைத்து ஆதவனை நோக்கி கரம் கூப்பினார் அவர்.தொண்டை அடைத்தது!!!

"ஸ்ரீராமர் வனவாசம் போன போது சீதைக்கு கூட தான் அது பாதுகாப்பில்லை.ஆனா,தன்னவருக்காக அவங்க துன்பங்களை தாங்கலை?"-என்றோ அவள் கூறிய வார்த்தைகள் இதயத்தை நொறுக்கின.

"வேலைக்கு சாப்பிட சொன்னா சாப்பிடுறது இல்லை!நான் இருக்கும் போதே இப்படி,எனக்கு அப்பறம் யார் உங்களை கவனிப்பா?"-கண்ணீர் பெருக்கடுத்தது கடந்த காலம் குறித்து சிந்திக்கும் சமயம்!!

மனம் நொந்த நிலையில்,தன் தோள்களை ஏதோ மென்மையான கரம் ஸ்பரிசிப்பதை போன்று உணர,திரும்பி பார்த்தார்.

கடந்த காலத்தில் கண்ட அதே மதுபாலா!!இளமையான தோற்றம்!!முதல்முதலில் தான் கண்ட அதே முகம்!!

"அம்மூ!"-அவர் கண்கள் கரைந்தன.அக்கன்னிகை அவரது கண்ணீரை துடைத்தாள்.

அழ வேண்டாம் என்பது போல தலையசைத்தாள்.

ஒரு இனிய புன்னகையை விடுத்தவள்,அவரது நெற்றியில் இதமாக முத்தமிட்டாள்.

காண்போரின் நெஞ்சை உருக்கும் காட்சி!!!

மீண்டும் புன்னகையை சிந்தியவள்,காற்றோடு காற்றாய் கலந்தாள்.

"அம்மூ!"-பலனில்லை...அவள் சென்றுவிட்டாள்!!!

"அப்பா!"-பிரிய புதல்வனின் குரல் கேட்க கண்ணீரை துடைத்துக் கொண்டார் அவர்.

"ராகுல்!வாப்பா!"-அவனது கண்களும் கலங்கிவிட்டன.

"அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன்பா!வலிக்குது...அவங்க இல்லைங்கிற விஷயம் நிஜமாவே வலிக்குதுப்பா!"

"ப்ச்...விடு கண்ணா!அவ சந்தோஷத்தை தேடி போயிட்டா!"

"இல்லைப்பா!அவங்க நம்ம கூடவே தான் எப்போதும் இருப்பாங்க!நான் என் அம்மாவை எந்த சூழ்நிலையிலும் என்னைவிட்டு போக அனுமதிக்க மாட்டேன்!"-அவன் மாறவில்லை!சிறிதும் அவன் மாற்றம் கொள்ளவில்லை.

மீண்டும் தனது இளமைக் காலம் திரும்பாதா என்றிருந்தது சரணுக்கு!!ஈன்ற புதல்வனை போல் வளர்த்தவனை மீண்டும் நெஞ்சிலிட்டு கொஞ்ச மனம் விழைந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.