(Reading time: 20 - 40 minutes)

08. அதில் நாயகன் பேர் எழுது - அன்னா ஸ்வீட்டி

Athil nayagan per ezhuthu

ப்படி ஒரு வார்த்தைகளை அந்த நேரத்தில் ப்ரியா சொல்வாளென விவன் எதிர்பார்த்தானா என்ன?

அவள் சொன்னதை கேட்கவும் அவளைப் பார்த்திருந்த அவன் கண்களில் ஒரு ஃபயர் க்ராக்கர் பட்டென தலை காட்டினாலும்…. அடுத்த நொடி அவனுக்கு நடந்தது புரிந்து போயிற்று…..

கட்டையெடுத்து சாத்துவேன் என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு, சரி உன்ன கல்யாணம் செய்து தொலைக்கிறேன்னு சம்மதம் சொல்ற அவ மனசுக்குள்ள என் மேல சின்னதா  ஒரு நல்ல ஃபீல் வந்திருக்குது போல….. கனவு  கண்டிறுக்கிறாள்…..

விஷயத்தை இவ்வாறு புரிந்து கொண்டான் அவன்.

விவனைப் பொறுத்தவரை அவனும் ப்ரியாவும்  இருக்கும் சூழ்நிலைக்கு அவனது இந்த திருமண முடிவு  நியாயமாய் பட்டாலும், அவள் கொஞ்சமும் விருப்பம் இல்லாமல் இந்த முடிவுக்கு வந்திருக்கிறாள் என்பது ரொம்பவுமே மனதை உறுத்திக் கொண்டிருக்கிறது….

என்னதான் நியாயமான காரணம் இருக்கட்டுமே, பொண்ணுக்கு இஷ்டம் இல்லாமல் சூழ்நிலை கட்டாயத்துக்காக மட்டுமே செய்ற மேரேஜை எப்படி மேரேஜ்னு சொல்றதாம்…..? அவன் திருமணம் குறித்து  வளர்த்து வைத்திருந்த நம்பிக்கைக்கு, தேவைக்குன்னு போடுற ட்ராமாவா கல்யாணம் என கணத்துப் போகிறது மனம்…. 

ஒருவேளை ப்ரியா மேல உள்ள விருப்பத்தில் இந்த சிச்சுவேஷனை இப்படி ஹேண்டில் செய்றனோ? உண்மையில் இதைவிட பெட்டரான வழி எதுவும் இருக்குமோ?  என ஏதேதோ  வேறு அடுத்தபக்கமாக அலையடித்துக் கொண்டிருக்கிறது….. 

இது எல்லாவற்றிற்கும் மேலாக அவள் நிலையைப் பார்க்க பார்க்க மிகவுமே தவித்துப் போகிறது இவனுக்கு…

ஏன் எப்படி நடந்துச்சு என பதறுவாளா? இல்லை வரப்போற குழந்தையை, அவளோட எதிர்காலத்தை நினச்சு கதறுவாளா….? ஏற்கனவே அவ நார்மலுக்கும் கொஞ்சம் அதிகமாவே சாஃப்ட் நேச்சர்ட் அண்ட் சென்சிடிவ்….இதுல இதையெல்லாம் எப்படி தாங்கப்போறா?

என்ன வகையான நிலை இது…?  எப்படி  தாண்டி வரப் போறா? இதில் அவளுக்கு  கொஞ்சமும் பிடிக்காத இவனோடு கல்யாணம் வேற….

இவன் அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்ள தயார்தான்…. ஆனால் அவளைப்பொறுத்த வரைக்கும் பிடிக்காத கல்யாணம்றது தானே fact….

கட்டாயத்துக்காக  கல்யாணம் செய்துடலாம்….. ஆனா கட்டாயத்துக்காக பிடிக்காத ஒருத்தன் கூட தினம் தினம் எப்படி இருக்க போறா?

இவனுக்கு அவளை பிடித்திருக்கும் அளவில் ஒரு பெர்சென்ட் அவளுக்கு இவனைப் பிடித்தா கூட அவ லைஃப்ப ஸ்மூத்தாக்கிடுவானே இவன்…..

இப்படி என்னவெல்லாமோ அவனை ஆகாயத்துக்கும் அடி பாதளத்துக்குமாய் இழுத்தடித்துக் கொண்டிருந்த போதுதான் காதில் விழுகிறது அவளது “ எனக்கு உங்களை ரொம்பவுமே பிடிச்சிறுக்குது விவன்…”

சடசடவென சத்தமின்றி மொட்டவிழ்கின்றன சில கோடி சிறு மலர்கள் ஜிலீர் குளுமையுடன் இவன் இதயத்துள்….  விதையின்றி செடியின்றி திடுமென ஒரு பூக்காடு உயிர் தோட்டத்தில்…..

சின்ன ஆரம்பம் தானே எல்லா பெரிய விஷயத்துக்கும் தொடக்கம்….. அவள் மனதிற்குள் இருக்கும் இந்த சின்ன அன்பு சீக்கிரத்தில் வேர் விட்டு விருட்சமாகும்…. அப்போது அனைத்தும் இவர்கள் வாழ்வில் இன்பமாகும்….

‘இந்த அன்எக்‌ஸ்பெக்டட் ஐ லவ் யூக்கு, அப்ப சொல்ல வேண்டிய விதத்தில பதில் சொல்லிக்கிறேன் ஜிலேபி கெண்ட….’ மனைவியாக போகிறவளிடம் மானசீகமாய் சொல்லிக் கொண்டவன்

இப்போது இதழ்களில்  ஒரு இதமான புன்னகையை மட்டும் கசியவிட்டவன்….

“கனவு கண்டியா ரியு…? அவ்ளவு டயர்டாவ இருக்க….சட்டு சட்டுன்னு தூங்கிடுற….? சீக்கிரம் கிளம்பு…..வீட்ல போய் தூங்கி  நல்லா ரெஸ்ட் எடு….” என அவள் சொன்ன வார்த்தைகள் அவள் மனதை மீண்டும் தாக்காதவாறு அதன் அத்தனை கோணத்தையும் மாற்றிவிட்டான்.

எப்படினாலும் எம்பரஸிங்கா ஃபீல் பண்ணுவா….இதுன்னா கொஞ்சம் கம்மியா எடுத்துப்பால்ல….

ஆனால் அப்பொழுதுகூட வாங்கினது பல்ப் பார்சல் என பாய்ண்ட் புரியாத ப்ரியா…….என்ன எங்க இருக்கிறோம்….ஏன் என்னாச்சு என எல்லாவற்றையும் ஸ்லோமோஷனில் ஸ்டடி செய்துகொண்டே…..

கெஞ்சலாக “தென்காசி கூட்டிட்டுப் போவீங்கதானே….?” என மானகவசனிடம் கேட்க வேண்டியதை கரெக்டா  மாத்தி விவனிடம் கேட்டு வைத்தாள்…. முன்பு செண்பகப் பொழில் என பெயர் கொண்டிருந்த தென்காசிதான் பாண்டிய மன்னன் பராக்கிரமனின் தலைநகரம் என்பது அவளுக்கு நியாபகம் இருந்த அளவு எதிரில் நிற்பவனின் இன்றைய சூழல் எதுவும் அவளுக்கு இன்னும்  மனதில் தோன்றி இருக்கவில்லை…

விவனைப் பொருத்தவரை தென்காசி அருகில் அவனது பூர்வீகம்…. அதை போனதடவை ப்ரியா கனவு கண்டு உளறினபோதே கேட்டிருந்தாளே……ஆக அவன் ஊரைப்பத்தி ஏதோ கேட்கிறாள் போல என நினைத்தவன்

“கண்டிப்பா கூட்டிட்டுப் போறேன் ரியு….உனக்கு ட்ராவல் செய்ற அளவு ஹெல்த் வரவும் போய்ட்டு வரலாம்….” என  ஒத்துக் கொண்டவன்,

 “என்னாச்சு ரியா…..அடிக்கடி தென்காசி பத்தி கேட்கிற….. அந்த ஊர் பிடிக்குமோ…..? எனக்கும் பிடிக்கும்…. முன்னால மே மாசம் தவிர அங்க வெதர் எப்பவுமே ரொம்பவும் ப்ளசண்டா இருக்கும் இப்ப எப்படி இருக்குதுன்னு தெரியலை…” என முடிந்த வரை பேச்சை மிக மிக இயல்பாக்க முயன்றான்…

ஆனால் இத்தனை நேரத்துக்குள் முக்காலுக்கும் முழுசுக்கும் இடையான அளவில் இயல்புக்கு வந்துவிட்ட ப்ரியாவுக்கு மெல்ல மெல்ல தன் உளறலின் மொத்த அளவும் புரிய…. தன் நெற்றியை இரு விரலால் முதலில் பிடித்தவள்....

.கடைசியில் உங்கள ரொம்ப பிடிச்சுறுக்குது விவன்….நியாபகம் வரவும்….. அவமானத்தில் வெடித்துக் கொண்டிருந்த தலையை இரண்டு கைகளால் இறுக்கிப் பிடித்த படி ஒரு கணம் அதை தாங்கியவள்,

அடுத்து வேகமும் விடு விடுப்புமாய் முழு வீச்சில் அவனை விலகி .நடக்க தொடங்கினாள்….

அவளது இந்த செயலை வெகு சாதாரணம் போல் எடுத்துக் கொண்டு அவளைப் பின் பற்றிய விவனுக்கு தெளிவாகவே தோன்றுகிறது……இவளோட  கனவுகள் இவங்க ரெண்டு பேருக்கும் இடையில் ரொம்பவுமே ரோல் ப்ளேபண்ணப் போகுது…..

அடுத்து அவளை ராகாவின் அப்பார்ட்மென்டில் கொண்டு ட்ராப் செய்தது விவன்தான்…..

“எங்க வீட்ல சமையல கவனிச்சுகிட்ட ஒரு ஆன்டி இருக்காங்க…..ரொம்ப வருஷம் வேலை செய்தவங்க…..ரொம்ப பாசமா இருப்பாங்க……நல்ல டைப்…..நம்பலாம்…..அவங்களுக்கு குழந்தையும் கிடையாது…..கொஞ்சம் முன்னால இருந்து விடோ…… அவங்கள உன் கூட வந்து தங்க சொல்லட்டுமா ரியா?” அவளை  அந்த அப்பார்ட்மென்ட் காம்பவ்ண்ட் கேட்டில் விட்டு கிளம்பும் போது விளக்கமாய் சொல்லி கேட்டுப் பார்த்தான் இவன்…

அடிக்கடி மயங்கி விழுபவளை தனியாய் விடுவது அவனுக்கு சரியாய் படவில்லை…. அதோடு அவள் இருக்கும் நிலையில் தானே பார்த்து சமைத்து சாப்பிடுவாள் எனவும் படவில்லை அவனுக்கு….

“ஏன் அப்பதான் எல்லோருக்கும் நான் மேரேஜுக்கு முன்னமே இப்படின்னு….” என வெட்டலாய் ஆரம்பித்த ப்ரியா…..அதோடு எதுவும் சொல்லாமல் கண்ணில் மட்டும் நீர் காட்டவும்… அவனுக்குமே இந்த விஷயத்திற்கு பதில் இல்லை என்பதால்

“சாரிமா……சரி எதையும் போட்டு மனச குழப்பிக்காம தூங்கு….இதுக்கு என்ன சொலியூஷன்னு அப்றம் பார்ப்போம்…” என விட்டுவிட்டு கிளம்பிவிட்டான்…

அப்படி என்ன சொலியூஷன் பார்த்துட போறான் இதுல ?! என ஒரு எரிச்சல் நினைவுடன்தான் இவள் அன்று தூங்கப் போனாள்…. ஆனால் மறுநாள் விழிக்கும் போதே அப்படி என்ன பார்க்க முடியும் என காண்பித்திருந்தான் அவன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.