(Reading time: 20 - 40 minutes)

தற்குள் இவளின் இரு கரங்களையும் தன் இரு கைகளால் பற்றிப் பிடிக்கிறார் அந்த மாமியார்….

டென்ஷன் டென் கிரேட் ஸ்கேலில் டென்னை எட்டியது…..

‘மாப்ள சொன்னார்…” அவர் ஆரம்பிக்க…..யார் அந்த மாப்ள…..என்ன சொன்னார்…  எதுக்குப் போய் வேலவெட்டியில்லாம இவங்கட்ட போய் சொன்னார்… ‘ ஆன்சைட்டி அதுபாட்டுக்கு அவள் சங்கடப்பட்ட மனதிற்குள் சைக்கிள் ஓட்டியது…..

“எதுக்கு இவ்ளவு பயந்துட்டு இருக்க….?” என்ன பார்த்தா பயப்படுற மாதிரியா இருக்கு?” அந்த கடுத்த குரலில் அவர் சொன்ன மாப்ளையை அங்கயே அப்படியே விட்டுட்டு இவ பயத்துக்கு உரம் வச்சு தண்ணி பாய்த்தார் அந்த மாமியார்….

பார்த்தா தெரியுற அளவுக்கா பயப்படுறேன் என இவள் அதற்கும் பயப்பட…..

அவரோ “ எங்க பக்கம் இதெல்லாம் யாருக்கும் பிடிக்காது…..கன்னா பின்னானு பேசும் ஜனங்க….….” என விஷயத்தை வலிக்க வலிக்க ஆரம்பித்தார்.

 “ ஆனா உனக்கு இப்படின்றப்ப, இப்படி சீக்கிரமா கல்யாணம் செய்துக்கிறது தேவைதான்….” அவர் அடுத்ததாய் இதைச் சொல்ல ஆடிப் போனாள் இவள்….

எதைப் போய் இவங்கட்ட சொல்லி வச்சுறுக்கான் இந்த விவன்….?!!!!!!

அந்த நொடியே அவரது மாப்பிள்ளை சொன்னார்  முதல் எல்லாம் புரிய… அப்படியே அரண்டு போய் நின்றாள்….

இந்த சவுக்கடிய இவ இனி தினம் தினம் ஃபேஸ் செய்யனுமா? கண்கள் அது அதாக சிவந்து… உடல் சுட சுட சூடாகி….. நொடிக்கும் குறைவான நேரத்தில் விழியின் விளிம்பு தாண்ட கிளம்பி வந்து நிற்கிறது கண்ணீர்…

பதற்றமும் கனிவுமாய் இப்போது இவளிடம் ஓடி வருகிறாள் கண்மணி…

“மணி…” கிட்டதட்ட அது கட்டளை…..” நீ உள்ள போய் ஆக வேண்டியத பாரு….. ” அதட்டலாய் தன் மருமகளை விரட்டிய அவர், வேகமாய் கண்மணிக்கும் இவளுக்கும் இடையில் குறுக்காக நின்று கொண்டார்….

ப்ரியாவுக்கு ரொம்பவுமே ஒரு மாதிரி ஆகி விட்டது.

அதற்குள் “என்ன நீ….?  இறப்புன்றது எல்லாருக்கும் வர்றதுதான்…..உன் அக்காவுக்கு அவளோட வீட்டுகாரரோடயே சேர்ந்து போக கிடச்சிறுக்குன்னு நினச்சு நிம்மதியாகிக்க…..” இப்போது அவர் இப்படி சொல்லவும்தான் அவர் பூர்விக்காவைப் பத்தி பேசுகிறார் என புரிகிறது இவளுக்கு.

 ‘ஓ ப்ரெக்னன்ஸி பத்தி பேசலையா இவங்க…’ என  ஆசுவாசப் படவா இல்லை பூர்விக்கா பத்தி அழவா என இவள் மனது இரண்டுக்குமாயும் இப்போது நொறுங்க தொடங்கிய நேனோ நொடியில்

“கல்யாணம் நிச்சயமான பொண்ணு இப்டியா அழுவா….?  அதுவும் மாப்ள வீட்ல இருந்து முதல் முதல்ல ஆள் வந்திருக்கப்ப..?” என முன்பை விட கடுத்தவர்….. “இது என் மருமக கல்யாணத்துக்கு பிறகு முதல்ல வர்ற இடம்….” என கடுகடுப்பாயே முடித்தார்.

எல்லாத்தையும் தாண்டி இது ப்ரியாவுக்கு உறைக்கிறது…. அந்த மாமியார் சொன்ன விதம் எப்படியோ….. கல்யாணம் முடிஞ்சு முதல் முதல்ல கண்மணி வெளிய வந்திறுக்கிறது இவளைப் பார்க்கத்தானே…..அதுல இவ அழுதுட்டு வேற நின்னா….?

இவள் முடிந்த வரை முயன்று முகத்தை இயல்பாக்க

 “முதல்ல போய் முகம் கழுவி உடை மாத்திட்டு வா…. “என  சொல்லி இவளுக்கு வழி விட்டார்.

அடுத்து இவள் அவசரமாய் குளித்து கிளம்பி கையில் கிடைத்த சல்வார் அணிந்து வருகையில் மூன்று தாம்பளங்களில் எதெதோ எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது…..

ப்ரியாவுக்கு அதைப் பார்க்கவும்தான் சேரி கட்டிருக்கனுமோ என ஒரு தர்மசங்கட தாட் வந்து நிற்கிறது….. கண்மணியின் மாமியாரும் அதைத்தான் நினைக்கிறார் என்பது அவர் இவளை பார்த்த பார்வையிலேயே புரிகிறது…

ஆனால் கண்மணியோ “முதல்ல சாப்டுங்க அண்ணி…..ரொம்பவே லேட்டகிட்டு பாருங்க “ என அதற்கு மேல் எதையும் அவள் மாமியார் சொல்லும் முன்  இவளை இழுத்துக் கொண்டு போய் அங்கிருந்த குட்டி டேபிளுக்கான சேரில் உட்கார வைத்தாள்...

ப்ரியாவுக்கு தன்னால் கண்மணிக்கும் அவளது மாமியாருக்கும் முதல் நாளே ப்ரச்சனையாக தொடங்குகிறது என வலிக்க தொடங்குகிறது மனது.

ஆனால் அதைப் பற்றி கண்மணி முகத்தில் எதுவும் சிறு சலனம் கூட காணப்படவில்லை…..

இவள் முன் ப்ளேட், குடிக்க தண்ணி என ஏற்கனவே எடுத்து வைக்கப் பட்டிருக்க…

“ப்ரேக்ஃபாஸ்ட்ன்றதால இட்லியும் இடியாப்பமும் மட்டும் தான் எடுத்துட்டு வந்தேன்….” என்றபடி அவைகளை பரிமாறத் தொடங்கிய இவளது வருங்கால நாத்தனார்……

“அண்ணிய பார்க்கப் போறப்ப அப்டியே சாப்பாடும் எடுத்துட்டுப் போய்டுன்னு அண்ணா சொன்னான்….. இல்லனா ஹோட்டல்ல வாங்கி அவனே அனுப்பி இருப்பானே…… வீட்டு சாப்பாடு வேணும் போலன்னு வீட்ல செய்து எடுத்துட்டு வந்தேன்….. அதான் வேற எதுவும் ஸ்பெஷலா கொண்டு வரலை……” குருமாவை எடுத்து வைத்தவள் அடுத்திருந்த பாத்திரத்தை எடுத்து திறக்க…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.