(Reading time: 20 - 40 minutes)

ப்ரியாவோ உட்கார்ந்திருந்த நிலையிலேயே கண் உயர்த்தி கண்மணியைப் பார்த்தாள்…..தாக்கப்படும் அத்தனை தடயமும் அவள் தவித்திருந்த பார்வையில்…..அன்பெனும் ஆயுதம் கொண்டு அத்தனை ஆழமாய் தாக்க முடியும் போலும்….

கூடவே விவன் மேல் இன்னுமாய் கோபம் கூடிக் கொண்டு போகிறது… நேத்து கல்யாணம் ஆன பொண்ண அவ மாமியார் வீட்ல போய் பார்த்து நீ சமச்சு சாப்பாடு கொண்டு போன்னு சொல்லி இருக்கானே அவன  என்ன செய்யனும்…???!!!!

“அப்றம்தான் மெல்ல புரிஞ்சுது…..கூட ஆள் இல்லைனா நீங்க சாப்ட மாட்டீங்கன்றத தான் அவன் இப்டி சொல்லி இருக்கான்னு…. அது உண்மை அண்ணி  தனியா இருந்தா சாப்டவே தோனாது….சீக்கிரமா வீட்டுக்கு வந்துடுங்க…..” கடகடவென மூன்று வகை சட்னிகளை எடுத்து வைத்த கண்மணி

இப்போதுதான் இவளையே விழுங்கப் போவது போல் பார்த்திருக்கும் ப்ரியாவை கவனித்தவள்…”என்னாச்சு அண்ணி ?” என விசாரித்தாள்.

“அது…” என ஆரம்பித்த ப்ரியாவின் பார்வை கண்மணியின் மாமியாரை தேடியது…..

ஹாலில் கிடந்த சோஃபாவில் அமர்ந்திருந்த அவர்….. ராகா வீட்டில் கிடைத்த எதோ மகசீனை தீவிரமாய் பார்த்துக் கொண்டிருந்தார்.

“நேத்து தான் மேரேஜ்னு சொன்னாங்க….. வீட்ல கெஸ்ட்லாம் இருப்பாங்கல்ல…….நீங்க இங்க வந்தா அவங்க…?.....உங்க அண்ணா வேற நேத்தே வந்துட்டாங்க….யாரும் எதுவும் நினச்சுக்க மாட்டாங்களா…?” மாமியாரையும் மருமகளையும் மாறி மாறிப் பார்த்தபடி அருகில் நிற்கும் கண்மணிக்கு மட்டும் கேட்கும் வண்ணம் சிறு குரலில் ஒரு வழியாய் தயங்கி தயங்கி கேட்டாள் ப்ரியா……

குளித்து விட்டு வந்த இவளைப் பார்க்கவுமே இனிமையும் இனிப்புமாய் நிறைந்திருந்த கண்மணியின் முகத்தில் இன்னுமாய் ஒரு இன்பமும் சிறு சிரிப்பும்….. கூடவே குட்டியாய் ஒரு பெரிமிதமும்….

“அத்த வீட்ல இன்னும் சின்னத்த ஃபேமிலி இருக்காங்க……ஆனா வீட்ட பார்த்துக்க ஆள் இருக்காங்க….அதோட சின்னத்தயே வர்றவங்க எல்லோரையும் கவனிச்சுப்பாங்க….அதனால ஒன்னும் ப்ரச்சனை இல்ல…. அங்க நம்ம வீட்ல அண்ணா தவிர இப்ப யாரும் இல்ல….. மேரேஜாகி வாங்க அண்ணி உங்களுக்கே புரியும்….. எங்க பெரியப்பா தவிர நம்ம ரிலடிவ்ஸ் எல்லோரும்  பர்னிசர் ஷோரூம், மரகடை, ஜ்வல்ரி ஷாப்., டெக்‌ஸ்டைல்னு எதாவது ஒரு  ஷாப் மாதிரி தான் பிஸினஸ் வச்சுருக்காங்க…..வெட்டிங்காக ஒரு நாள் விட்டுட்டு வரதே கஷ்டம்…. அதிலும் நிறைய பேர் திருநெல்வேலி தூத்துகுடி நாகர்கோவில்னு எல்லாம் தெற்க இருந்து இங்க வரனும்….முந்தா நாள் நைட் வந்து சேர்ந்தாங்க……நேத்து மதியம் கிளம்பிட்டாங்க……அப்படின்னா இன்னைக்காவது  ஷோரூம் போய்டலாம்னு பார்ப்பாங்க…… என்னதான் ஆள்கள் வேலைக்கு இருந்தாலும் நாம அங்க இருக்க மாதிரி வராதும்பாங்க…. “ ரகசியம் போன்ற குரல் இல்லை என்றாலும் சின்ன குரலில்தான் பேசினாள் கண்மணி…

“இந்த விஷயத்துல மட்டும் அண்ணா  சொதப்புவான் அண்ணி….அத மட்டும் நீங்க கொஞ்சம் பார்த்துக்கோங்க…. அங்க  அவன் மெயின் ஆஃபீஸுக்கு பின்னாலயே நம்ம வீடு…. அதனால நான் சேஃபா இருக்கேன்னு நினைப்பான் போல….நைட் சாப்பாட்டுக்கு அப்றம் ஆஃபீஸ்ல போய் இருப்பான்….. நான் போய் இழுக்காத குறையாதான் இழுத்துட்டு வருவேன்….

காலேஜ் படிக்கிறப்ப நிறைய நாள் அசைன்மென்ட் நைட் அவன் ஆஃபீஸ் ரூம்ல போய் உட்கார்ந்துதான் எழுதுவேன்……முடிச்சு கிளம்புறப்பகூட வரமாட்டான்….தலையில நங்குன்னு நாலு கொட்டு கொடுத்துட்டு வருவேன்…. “ அவளது அண்ணன் பற்றிய பேச்சு  என்பதால் போலும் இப்போது கலகலத்தாள் அவள்…

ஆனால் ப்ரியாவுக்கோ கண்மணி சிரித்துப் பேசவும் பரவ தொடங்கிய இதம் இப்போது பக் பக் என மாறுகிறது…… அடுத்த ப்ரச்சனை அருகில் வருவது போல் உணர்வு….… அந்த விவன் என்ன வேலை செய்றான்????!!!! இவட்ட அதப் பத்தி யாராவது எதாவது கேட்டா என்ன உளறி வைக்க? அதை கூட தெரிஞ்சுக்காமலா கல்யாணத்துக்கு சம்மதிச்சான்னு கேள்வி வருமே..

ஆக அவசரமாய் கண்மணியின் கணவரைப் பற்றி பேச்சை திருப்பினாள்…..அதுவும் தெரிய வேண்டிய விஷயம் தானே…. கல்யாணம் ஆன மறுநாளே அவரவிட்டுட்டு இந்த பொண்ணு இங்க வந்து நிக்குதே…. அவர் அதை எப்படி எடுத்துப்பாரோ???

“உங்க…..அவங்க….?” அதற்கு மேல் எப்படி கேட்க என தெரியவில்லை இவளுக்கு…” அவங்க எப்டி இருக்காங்க…?”

கண்மணியின் முகம் இன்னுமாய் பூத்து பூரித்துக் கொண்டு போன விதத்தில் இவள் கேட்டே விட்டாள் “லவ் மேரேஜா…?”

“அச்சோ….. நான் இல்ல, அவங்க தான்…” ரொம்பவுமே மெலிந்து மென்பட்டாகிப் போனது கண்மணியின் குரல்….காது வரை சிவந்து அவள் மனநிலையை  அது காட்டிக் கொடுக்க….

ப்ரியாவுக்கு உண்மையிலேயே சந்தோஷமாயிருக்கிறது.

அதற்குள் “அது என்ன அவங்க….உங்க அண்ணானு பேசிப் பழகு மணி…. என் மகன் உன் அண்ணிக்கு அதானே முறை…” என ஒரு கடுத்த குரல் கட்டளை மணியின் மாமியாரிடமிருந்து ஆஜர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.