(Reading time: 20 - 40 minutes)

ன் அண்ணா பேரு மஹிபால்” என இவளுக்கு ஒரு இன்ஃபோவும் அவரிடமிருந்தே….. அதாவது கண்மணி தன் கணவன் பெயரை சொல்ல கூடாது என்கிறார்….

ப்ரியாவுக்கு இது டிஞ்சர் எஃபெக்ட் கொடுக்கிறதென்றானால் கண்மணியோ முகத்தில் இருந்த சந்தோஷம் கொஞ்சமும் குறையாமல் “சரிங்க அத்தை….தேங்க்ஸ்” என இங்கிருந்தே பதில் கொடுத்தாள்.

ப்ரியாவுக்கு கண்மணி சூழலை சமாளிக்கும் விதம் பிடிக்கிறதென்றாலும்….இந்த மாமியார் மருமகள் டக் ஆஃப் வார் பயத்தை வாரி வழங்குகிறது… அதோடு ‘அம்மாடி இந்த ஓல்ட் லேடிக்கு காது எப்படி கேட்குது’ என அது வேறு டென்ஷனாக்குகிறது.

“உங்க அண்ணா என்ன ஒரு கல்யாண வீட்ல 2இயர்ஸ் முன்ன பார்த்தாங்க போல….பட் எங்க மேரேஜ் அரேஞ்ச் செய்தது எல்லாம் என் அண்ணாதான்.” என ஆரம்பித்த கண்மணி “அது கொஞ்சம் பெரிய கதை….கண்டிப்பா நான் உங்கட்ட சொல்லனும்….ஆனா அப்றமா…” என்றாள். ஒரு நொடியாய் அவள் கண் சற்று தள்ளி அமர்ந்திருந்த அவளது மாமியாரின் புறம் சென்று வந்ததை ப்ரியா கவனித்தாள்.

இப்போது ப்ரியாவுக்கு ரொம்பவும் சோர்ந்து போகிறது….. இவட்ட பேசவே கண்மணிக்கு இத்தனை தடை இருக்குதே…..இதுல ஒரே வீட்ல இருந்துட்டு இந்த மாமியார் தன் மகன்ட்ட கண்மணியா ஒழுங்கா பழக விடுமா என்ன?

கண்மணிக்குதான் லவ்னு எதுவும் இல்லைனு சொல்றால்ல…. அப்றம் இந்த வீட்ல போய் கண்மணிய இந்த விவன் ஏன் மேரேஜ் செய்து கொடுத்தான்…. ? சும்மா ஒருத்தன் வந்து லவ் பண்றேன்னு சொல்லிட்டா….உடனே பொண்ண தூக்கி கொடுத்துடுவானாமா…போய் அவ அங்க வாழ வேண்டாமா?

இவளுக்குள் இன்னும் இன்னுமாய் எரிச்சல் மண்டிக் கொண்டு போகிறது தன்னை மணக்க இருப்பவன் மேல்…

அடுத்து இவள் சாப்பிட்டு முடிக்கவும்

“சரி போய் புடவை கட்டிட்டு வா…முறை செய்யனும்…” தன் கட்டளை நம்பரை இன்னுமாய் இன் க்ரீஃஸ் செய்த அந்த மாமியார்….

”இங்க பாரு இன்னும் கல்யாணம் எண்ணி ஏழு நாள்ள…..ஒழுங்கா தினமும் குளிச்சு புடவை கட்டி இரு…..” என அடிஷனல் ஆர்டர் கொடுத்து அனுப்பி வைத்தார்.

அடுத்து இவள் உடை மாற்றி வரவும்  கண்மணி இவள் தலையில் பூ சூட… அடுத்து தாம்பாள தட்டில் இருந்த எல்லாவற்றையும் இவளிடம் கொடுத்து என எதை எதையோ கண்மணி அவ்ளது மாமியாரின் சொல்படி செய்து முடிக்க….. அன்றைய இவளுடனான கண்மணி மீட்டிங் முடிவு பெற்றது….

விவனைப் பார்த்தால் கண்டிப்பாக இந்த மாமியாரிடம் அவன் தங்கையை மாட்டி விட்டதற்காக நல்லா நாலு வாங்கு வாங்கனும் என்ற நினைவுடன் இவள் கண்மணிக்கு விடை கொடுத்தாள்.

இதில் கிளம்பும் நேரம் கண்மணி காரில் ஏறிய பின் அவர்கள் வந்திருந்த காரிலிருந்து இறங்கி வழியனுப்ப நின்றிருந்த இவளிடம் தனியாக வந்த அந்த மாமியார் “ உன் மாப்ள ஒத்தைக்கு ஒத்தயா தனியாளா நின்னு இந்த மணிய வளத்து ஆளாக்கின ஆள்….அவர பட்னி போடாம நீ பார்த்துக்க…… அதுதான் இப்ப உன் வேலை….மணிய நாங்க பார்த்துபோம் ” என ஒரு விதமான தொனியில் அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு போனார்…

இதை என்னதாக எடுக்க வேண்டும் என்றே இவளுக்கு புரியவில்லை…… உன் வேலய மட்டும் பார்த்துட்டு சும்மா இருன்னு சொல்றாரா? மணி விஷயத்துல மூக்க நுழைக்கதன்றாரா? அதுவும் அந்த பட்னி போடாத…..அது இன்னும் கோபமும் கொதிப்புமாய் இவளுள் இறங்குகிறது….. ஆனால் அந்த ஒத்தைக்கு ஒத்தையா தனியா நின்னு வளத்த ஆள்….. அது எல்லாவற்றையும் விட இவள் மனதை அதிகமாய் ஆட்டி படைக்கிறது…

அது உண்மையா…? விவனுக்கு பேரென்ட்ஸ் இப்ப இல்லன்னு இவளுக்கு தெரியும்….ஆனா இது ரொம்ப ஒரு மாதிரி இருக்குது அவளுக்கு…. அதெப்படி அவனை விட ரெண்டு மூனு வயசு சின்ன பொண்ண அவன் வளக்க முடியும்…?  அவ்ளவு சின்ன வயசிலயே அவனுக்கு பேரேண்ட்ஸ் இல்லையா…?

என்னவெல்லாமோ தோன…… எல்லாவற்றையும் விவனிடம் விசாரிக்க வேண்டும் என தோன்றுகிறது இவளுக்கு….

ஆனால் அடுத்து வந்த ஏழு நாட்களும் விவன் இவள் பார்வையில் படவே இல்லை…. கண்மணி தான் எல்லாவற்றிற்கும் வந்து போனாள்…..

 புடவை எடுக்க….பத்திரிக்கை செலக்ட் செய்ய…அது இது என பெரும்பாலும் கண்மணி இவளை தனியாக இருக்காதவாறு பார்த்துக் கொண்டாள்…

 மூனு வேளை சாப்பாடும் கண்மணியுடந்தான்…. ப்ரியாவுக்கு கண்மணி இப்படி இவளே கதி என சுற்றுவது சுத்தமாய் பிடிக்கவில்லை……இதற்காக கண்மணிக்கும் அவளது மாமியாருக்கும் இடையில் எத்தனை சண்டை நடக்கிறதோ இல்லை நடக்கப் போகிறதோ என பயம்…

ஆனால் நேருக்கு நேராய் உன் மாமியார்தான் சரி இல்லையே நீ ஏன் வர்ற என கண்மணியிடம் பேசவும் இவளுக்கு தயக்கம்…. அது இன்னுமாய் கண்மணிக்கும் அவளது மாமியாருக்கும் இடையில் ப்ரச்சனை ஆகுமோ என தவிப்பு….

ஆக விவன் கையில் கிடைத்தால் அடித்து துவைக்கலாம் எனும் மன நிலையில் இவள் காத்திருக்க….. அவன் இவளை இவர்களது சோ கால்ட் கல்யாணத்தில்தான் சந்தித்தான்…  அதுவும் ஆல்டரில் வைத்து… மோதிரம் மாற்றும் போது மட்டும் இவளை ஒரு கணம் பார்த்தவன்….

அடுத்தாய் தாலி அணிவிக்கும் போது கூட இவள் முகத்தைப் பார்க்கவில்லை….

இதில் பெண் வீட்டாராய் சிற்பியும் ராகாவும் நின்று செய்ய, அழகாய் அத்தனை முறைகளோடும் இவள் முன்பு ஆசைப் பட்டபடியாய் நடந்தேறியது திருமணம்.

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1063}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.