(Reading time: 20 - 40 minutes)

தோ ஒரு உணர்வில் தூக்கத்தில் புரண்டு படுக்கும் போதுதான் வீட்டின் காலிங் பெல் அடிப்பதே புரிந்தது ப்ரியாவுக்கு…. மெல்ல திரும்பி சுவரிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள்…. மணி 10 என்றது அது…..

அவ்வளவு நேரமா தூங்கிட்டோம்….?! யார் வந்திருப்பா இங்க…..? ஒரு வேளை அந்த விவனா? தூங்குறப்ப ஏன் இப்படி படுத்துறான்…? என என்னவெல்லாம் முடியுமோ அனைத்தையும் நினைத்துக் கொண்டு  போட்டிருந்த பைஜாமாவில் அப்படியே சென்று கதவிலிருந்த பீப் ஹோல் வழியாக பார்த்தவளுக்கு ஒரு கோணமாய் தெரிந்த முகம்  யார் என புரியவில்லை….

பார்வைக்கு தெரிந்த முகம் ஒரு பெண்ணுடையது என்பதோடு…..உள்ளிருந்த மரக் கதவுக்கு அடுத்து க்ரில் கேட்டும் உண்டு என்பதால் எந்த தயக்கமும் இன்றி  மரக் கதவை திறந்தவளுக்கு… அங்கிருந்த பெண்களைப் பார்க்கவும் எதோ புரிந்தும் புரியாமலும்…. பக்கென்றும் திருதிருவென்றும் இவள்…

வெளியே இரண்டு பெண்கள் நின்றிருந்தனர்….ஒருத்தி இவள் வயதை ஒத்த இளம் பெண் என்றால் மற்றவரோ 50 வயது மதிக்க தக்கவர்.

அந்த இளம் பெண் பார்க்க சற்று தெரிந்த முகமாக…’விவன் சாயலோ…? அச்சோ அவனோட தங்கச்சியா…? நேத்து தான் மேரேஜ் நடந்துச்சுனான்… இன்னைக்கு இங்க வந்து நிக்குது இந்த பொண்ணு… ‘ இவ்வளவு கூட நினைத்து முடிக்கவில்லை இவள்…

“சாரி அண்ணி… தூங்கிட்டு இருந்தவங்களை டிஸ்டர்ப் செய்துட்டேன் போல… என் பேரு கண்மணி……விவனோட சிஸ்டர்…. இவங்க என் மதர் இன்லா….நாங்க மட்டும்தான் வந்துறுக்கோம்….நீங்க தாரளமா இந்த ட்ரெஸ்ல கதவ திறக்கலாம்….” கொஞ்சமே கொஞ்சம் பார்மலாக ஆரம்பித்த அந்த கண்மணியின் பேச்சு  ரொம்பவும் ஃப்ரெண்ட்லியாக மாறிக் கொண்டு போக…

ப்ரியாவுக்கோ கை காலெல்லால் உதறாத குறைதான்….. ‘கூட வந்திருப்பது மாமியாராமே…. இவ 10 மணிக்கு நைட் ட்ரெஸ்ல போய்  ப்ரெஷ் கூட செய்யாம கதவ திறந்திருக்காளே…. இவள என்னன்னு நினைப்பாங்க….?  இனிமே வெயிட் செய்ங்க ப்ரெஷ் செய்து ட்ரெஸ் மாத்திட்டு  கதவ திறக்கிறேன்னா சொல்ல முடியும்…?

அவசர அவசரமாய்  சாவியை தேடி எடுத்து  பதற்றத்தில் பூட்டிற்குள் நுழைய மாட்டேன் என ஸ்ட்ரைக் அடித்த அதை ஒருவழியாய் நுழைத்து திறந்த போது சற்றாய் வியர்த்திருந்தாள்…

“டென்ஷனாகாதீங்க அண்ணி…. நாங்க என்ன சொல்லிட்டா வந்தோம்…. எதுவும் வித்யாசம நினச்சுக்க மாட்டோம்….நீங்க முதல்ல ரிலாக்ஸாகுங்க” இவள் கதவை திறக்கும் முன் அந்த கண்மணி இவ்வளவு பேசி முடித்திருந்தாள் எனில் அந்த மாமியாரோ இன்னும் வாயை திறக்காமல் இருப்பதே இவளுக்கு நிம்மதியாய்  இருக்கிறது….

“வாங்க..” ப்ரெஷ் செய்ய முன்ன எப்பவாவது இவ பேசி இருக்கிறாளா என்ன…? கஷ்டபட்டு இந்த வாங்கவை இவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது திறந்திருந்த வாசல் வழியே முதலில் கண்மணியும் அடுத்து அந்த மாமியாரும் உள்ளே நுழைகின்றனர்…

ஒருவித பிஸ்தா க்ரீனும் அதில் அடர் நவாப்பழ நிற பார்டருமாய் ஓரளவு வேலைப்பாடுள்ள ஒரு புடவை அணிந்திருந்த கண்மணிக்கு அந்த பேர் வைக்க காரணம் அவளது கழுவி வைத்தது போன்ற  கண்கள்தான் என்பது போல் பெரிய கண்களும் அந்த கண்களுக்கு பொருந்தும் வட்ட முகமும் அதில் அப்படி ஒரு துள்ளலும் சந்தோஷமும் கூடவே தூக்கி சுமக்க முடியாத அளவு நட்பும் காணப்படுகிதென்றால்…

இவளை கடந்து உள்ளே நுழைந்த அந்த மதர் இன்லாவோ…….படு உயரமாய் அதற்கு ஏற்றது போல் ஓரளவு தடிமானாக இருந்தவர்….. ஒரு காஃபி நிற புடவையை கிராமங்களில் அணியும் முறையில் உடுத்தி…..பத்துப் பதினைந்து கல் பதித்த அந்த கால மூக்குத்திகள் இரண்டு அணிந்து….காதில் பரும் கம்மல்களும்…..இழுத்துப் போட்ட கொண்டையுமாய் ….. பக்கா பழைய கால லுக்கில்…..

ப்ரியாவுக்கு இவ்ளவு கட்டுபட்டியா அந்த கால ஆளா இருக்காரே….இவர் எதை எப்படி புரிந்துகொள்வாரோ…? உன் அண்ணி என்ன இத்தன மணி வரைக்கும் இப்டி தூங்கிட்டு இருக்கா….? இவளையா உன் அண்ணனுக்கு பார்த்திறுக்கு என  என்னவெல்லாம் சொல்வாரோ என பயங்கர பதற்றத்தை தருகிறார்.

எச்சில் விழுங்கி……முகம் சுருங்க செய்யும் பயம் மறைத்து இயல்பாய் இருப்பது போல்  காட்டிக் கொள்ள முயன்றாள் இவள்…  

இதற்குள் இவளை நேருக்கு நேராய் பார்த்தபடி உள்ளே வந்த அவரோ இவள் சற்றும் எதிர்பாராத விதமாய் இரு கையையும் குவித்து “வணக்கம்” என்றார் ஒரு அழுத்த குரலில்.

அவர் அதை சொன்ன தொனியில் கண்மணி சற்று அதிர்ந்து போய் அவசரமாய் திரும்பிப் பார்க்கிறாள் எனில்

ப்ரியாவுக்கோ பய ஜில்லிப்பு… அப்பொழுத்தன் இவளுக்கு தான் பதற்றத்தில் இன்னுமே அவரை வரவேற்காதது புரிய….. அவசரமாய் இவள் கை கூப்ப…

“இப்பதான் எந்திரிச்சியா நீ?” அவர் அதே குரலில் அடுத்த கேள்வி….

இவளுள் பிபி குறைந்து ரத்தம் தலைக்குப் போகாமல் சட்டென ஸ்ட்ரைக் அடிக்கும் உணர்வு….

இவ சரி இல்லைனு இன்னும் என்னலாம் சொல்லுவாரோ???

இருங்க இப்ப வந்துடுறேன் என தப்பி ஓட ஒரு இஸ்டென்ட் ப்ளான் உதிக்கிறது இவளிடம்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.