(Reading time: 7 - 14 minutes)

07. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai

                 

லசலப்பு ரசிகர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில், நிசப்தம் நட்சத்திரங்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் ! அந்த அனல் பறக்கும் சூழ்நிலையில் அசால்ட்டாய் புன்னகைத்தபடி எழுந்தான் சத்யன். அவன் எழுந்து நின்ற மறுகணமே கேமராக்கள் கண்சிமிட்டிட விசில் சத்தம் பறந்து.

“பெண்ணின் காதல் என்பது, அவளது புன்னகையில் தெரியும்

ஆணின் காதல் என்பது, அவனது பார்வையில் தெரியும்” என்ற ஆங்கில வாசம் ஒன்றை அர்ப்பணா, சத்யனின் புகைப்படத்தோடு இணைத்து சுட சுட மிமீஸ் போடும் அளவிற்கு ரசிகர்கள் அதிவேகமாய் செயல் பட்டனர். அத்தனை ஆரவாரங்களுக்கு நடுவில், ஸ்டைலாய் மேடையில் ஏறினான் சத்யன்.

மரியாதை நிமித்தமாய் அனைவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு, அர்ப்பணாவிற்கு கொடுக்க வேண்டிய விருதை அவளுக்கு அளித்தான் சத்யன். எதுவும் பேசாமல், அவன்  மேடையிலிருந்து இறங்க முயற்சிப்பதற்குள் பேசத் தொடங்கியிருந்தாள் அந்நிகழ்வின் தொகுப்பாளினி.

“சத்யன் சார், வழக்கமாக கேட்குற எந்த கேள்வியும் கேட்க மாட்டோம்.. ப்ளிஸ் நில்லுங்க சார்” என்று ஸ்னேகமான புன்னகையுடன் கூறினாள் அவள். தலையை ஸ்டைலாய் கோதிவிட்டவன், “சொல்லுங்க” என்றான். அவனது ஒவ்வொரு அசைவும் பார்ப்பவர் கண்களுக்கு விருந்தானது.

“ சத்யன் சார், உங்க கிட்ட கேள்வி கேட்குறதுக்கு முன்னாடி நாம, அர்ப்பணாஅ கிட்ட வருவோம்.” என்று ஊக்குவிக்கும் தொனியில் அவள் கூறவும் மைக் இப்போது அபியின் கைக்கு வந்தது.

“ இந்த படத்துக்கான விருது மட்டுமில்லை.. நான் எந்த படத்துக்கு விருது வாங்கினாலும், அதை நான் சத்யன் சாருக்கு தனியாக டெடிகேட் பண்ணுவேன். அதற்கு காரணம், நான் கடந்து வந்த பாதை.. சினிமாவிற்குள் நான் எப்படி வந்தேன்னு எல்லாருக்கும் தெரியும். இன்று எனக்கு கிடைத்த அங்கீகாரம் நானே பெற்றுக்கொண்டது அல்ல, பலரும் சேர்ந்து தூக்கி விட்டதினால்தான் நான் இங்க இருக்கேன். அந்த வகையில் மனதளவில் சோர்ந்து போயிருந்தபோது என்னை தூக்கி விட்ட நட்புக்கு நான் கொடுக்கும் மரியாதை இது” என்று கூறினாள் அவள். “நட்பு” என்று அவள் வாய்மொழிந்ததுமே மலர்ந்து புன்னகைத்தான் சத்யன். மகனை கீழிருந்து ரசித்துக்கொண்டிருந்த சுலோட்சனாவும் மனம் நிறைய புன்னகைத்தார்.

“ என்னடா இது கதையில ட்விஸ்ட்டு?” என்று பார்வையாலேயே நண்பனை வினவினாள் கண்மணி. வெற்றியோ எந்த நாட்டின் கொடியை பிடிக்கலாம் என்பது போல சிந்தனை படிந்த முகத்துடன் அமர்ந்திருந்தான். இந்த ஷாக்கு போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என்பது போல தொகுப்பாளினி கேட்ட அடுத்த கேள்வியின் பதில் வெற்றி, கண்மணி இருவரையும் ஸ்தம்பிக்க வைத்தது/

“ சத்யன் சார், இப்போ எங்கள் கேள்விக்கு பதில் சொல்லுங்க! நீங்களும் அர்ப்பணாவும் இணைந்து ஒரே ஒரு படம் தான் நடிச்சீங்க. ஆனால் உங்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ட்ரிக்கு நாங்க எல்லாருமே ரசிகர்கள்” என்று அவள் கூறவும் விசில் பறந்தது.

“ உங்க இருவரையும் ஒரே படத்துல மீண்டும் நாங்க எப்போ  பார்க்கலாம்?” என்று தொகுப்பாளினி வினவிட, வெற்றியும் கண்மணியும் பார்வையாலேயே பேசிக்கொண்டனர்.

ஆம், வெற்றி தனது முதல் படத்தில் சத்யனையும், அர்ப்பணாவையும் நடிக்க வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தான். மற்றவர்களைப் போல, அவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரியை பார்த்து அவன் இந்த முடிவை எடுக்கவில்லை. சொல்லப்போனால் அவனது கதைப்படி, சத்யன் அர்ப்பணா இருவருமே விவாகரித்தின் பின் தத்தம் வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை கதையாக எடுக்க நினைத்திருந்தான். அவனுடைய கதாப்பாத்திரங்களுக்கு இவ்விருவர்களால் மட்டும்தான் உயிர் கொடுக்க முடியும் என்பது வெற்றியின் அசைக்க முடியாத நம்பிக்கை! இதை கண்மணியும் நன்கு அறிந்திருந்தாள்.

மிகுந்த எதிர்ப்பார்ப்புடன், அனைவரும் பார்த்திட,

“நானும் அர்ப்பணாவும் ஒரே படத்தில் நடிக்க கூடாதுன்னு ஏற்கனவே முடிவெடுத்திருக்கோம்!” என்று ஒரே போடாய் போட்டான் சத்யன். அங்கு நிலவிய சலசலப்பு அவன் எதிர்ப்பார்த்தது தான்! அதனால் ஒரு மென்னகை சிந்திவிட்டு , அடுத்த கேள்விக்கு வழிவிடாமல்,

“ வேற கேள்விகள் வேணாமே! வாழ்த்துக்கள் தோழி அர்ப்பணா!” என்று கூறிவிட்டு அந்த மேடையில் இருந்து இறங்கினான். சத்யன் சொன்ன வார்த்தைகள் வெற்றிக்கு பெரிய அதிர்ச்சி. ஒரு கலைஞனாக, அவனது மனம் ஏமாற்றில் உடைந்து போனது.

இயக்குனராவது என்பது மிக எளிதான விஷயமல்ல. குறிப்பிட்ட வருடங்கள் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றுவிட்டால் வேலை கிடைத்துவிடும் என்ற அடிப்படை வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட வாழ்வியல் இது!

அதிக தன்னம்பிக்கை இருக்க வேண்டும்! விடாமுயற்சி மிகவும் அவசியம்! தனக்கென சினிமாவில் ஒரு அங்கீகாரம் வேண்டுமெனில், எடுத்து வைக்கும் முதல் அடியே ஆழமாகவும் அழுத்தமாகவும் இருக்க வேண்டும்! இன்னும் பல “வேண்டும்” களை பெறுவதென்பது எளிதல்ல! இப்போது அவன் அடைந்திருக்கும் நிலைக்கு பின்னால் அவன் சந்தித்த அவமானங்களும் வலியும் யாருக்குத் தெரியும்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.