(Reading time: 7 - 14 minutes)

டல் அலைக்கு மிக அருகில் அமர்ந்துகொண்டு மணல் வீடு கட்டி கட்டி தோற்கும் நிலையில் இருந்தவன் அவன். இதோ இன்று ஓரளவிற்கு மணல் வீட்டை கட்டியிருக்க, சத்யனின் ஒரே வசனம், மீண்டும் அந்த மணல் வீட்டை உடைத்திருந்தது.

தொலைக்காட்சியில் அவன் சொன்னதைக் கேட்ட விஹாஷினிக்கும், “ஐயோ” வென்று இருந்தது. அவளுக்கும் தெரியும் வெற்றியின்  தீர்மானத்தைப் பற்றி. மேலும், வெற்றியின் பிடிவாதத்தையும் அவள் அறிவாள்! சத்யனும் சரி அபியும் சரி, “முடியாது!” என்று உரைத்ததும் அடுத்த நடிகர்களை அவன் நாடி சென்றுவிட மாட்டான். நிச்சயம் பிடிவாதமாய் காத்திருப்பான்! “ கடவுளே, இருக்குற பிரச்சனை போதாதுன்னு இன்னொரு பிரச்சனையா?” என்று மருகினாள் விஹாஷினி.

இன்னொருபுறம் மேடையில் இருந்து சத்யனும், அர்ப்பணாவும் இறங்கி வர, அவனை பார்வையாலேயே பொசுக்கிக்  கொண்டிருந்தாள் கண்மணி.

“சரியான வில்லன்! இதுவரைக்கும் நாம சந்தோஷப்படுற மாதிரி ஒரு விஷயம் பண்ணிருக்கானா? சிடுமூஞ்சி, இப்படி நம்ம தலையில் இடியை இறக்கிட்டானே” என்று கருவினாள் அவள்.

சோர்ந்த முகப்பாவத்துடன் காணப்பட்டான் வெற்றி. “டேய், எதுக்கு மூஞ்சிய தூக்கி வெச்சுருக்க? உன் படத்துல அவங்கதான் ஹீரோ, ஹீரோயின்! இது உன் கண்ணு உனக்கு பண்ணுற ப்ரொமிஸ்” என்றாள் அவள். என்னத்தான் நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்தாலும், வெற்றியின் வாடிய முகம் கண்டவளுக்கும் மனம் கலங்கி போனதை, அவளது குரலை வைத்தே நண்பனவன் உணர்ந்து கொண்டான்.

“ஹேய் கண்ணு, நான் வேற ஏதோ யோசனையில் இருந்தேன்டீ.. விடு பார்த்துக்கலாம்டா” என்று அவன் இலகுவாய் சொல்ல முயற்சிக்கவும், அவனது விழிகளை குறும்புடன் பார்த்தவள்,

“ அப்படியாடா நம்பிட்டேன்” என்றாள். அவளது பாவனையில் வெற்றியும் சிரித்துவிட இருவரையும் கேள்வியுடன் பார்த்தான் சத்யன். அவன் தன்னை பார்ப்பதை உணர்ந்த கண்மணி,

“ என்னடா பார்க்குற? முட்டைக்கண்ணை ஆம்லட் போட்டு சாப்பிட்டுருவேன்” என்று விழிகளாலேயே மிரட்டினாள் கண்மணி. அவள் பார்வையில் அர்த்தம் புரியாவிடினும், தன்னை அவள் முறைக்கிறாள் என்று மட்டும் அவனுக்கு உறைத்தது. இதழோரம் ரகசிய புன்னகை உதிர்த்து , அவளது அனல் கக்கும் பார்வைக்கு பெட்ரோல் ஊற்றினான் சத்யன்.

ருவழியாய், விருது நிகழ்ச்சி நிறைவுபெற அதே அரங்கில் வீ ஐ பீ அறைகளில் அனைவரும் இரவு உணவு விருந்தை சாப்பிடத் தொடங்கியிருந்தனர். பத்திரிக்கை நிருபர்கள், ரசிகர்கள் என்று அங்கு யாரும் இல்லாததால் அனைவரின் முகத்திலும் ஒருவகை அமைதி தெரிந்தது.

சினிமாவிலேயே, தாங்கள் உருவாக்கிக் கொண்ட நட்பு வட்டாரங்களுடன் இளசுகள் பேசிக் கொண்டிருக்க , சத்யனும் சில நண்பர்களுடம் பேசிக் கொண்டிருந்தான். அவன் போகும் இடத்தை எல்லாம் பார்வையால் அளந்து கொண்டிருந்தாள் கண்மணி. எப்படியாவது வெற்றிக்காக அவனிடம் பேசித்தான் ஆக வேண்டும். அவளுக்குத் தெரியும், சத்யன் சரியென்று சொன்னால் அபியும் இதற்கு சம்மதிப்பாள் என்று . அதனால் எப்படியாவது அவனிடம் பேசிட வேண்டும் என்று நினைத்தாள் அவள்.

கண்மணி தன்னை பார்வையால் தொடர்வதை உணர்ந்து சத்யனும் சிரித்துக் கொண்டான். அவள் தன்னை கவனிக்கத் தவறிய ஒரே நொடியில் கண்மணியில் பார்வையில் இருந்து மறைந்தவன், தனது பாக்கெட்டில் இருந்த இன்னொரு ஃபோனை எடுத்தான்.

காதல் பொழிய வேண்டிய

இரு நயனங்களிலும்,

கோபம் பொங்குவதும் ஏனடீ?

சகி நீ கொஞ்சம் முறைத்தாலே,

கலங்கிடுதே என் ஆறடீ!

உள்ளத்தை காட்டி ஏங்குகிறேன்,

ஒரே முறை பாராடீ!

சரியென்று நீ சொல்லிவிட்டால்,

உனக்குள் உறைவேன் நானடீ!

என்று கண்மணிக்கு மெசெஜ் அனுப்பிவிட்டு அவளது முகபாவனையை மிக அருகில் பார்ப்பதற்காக, அவளை நெருங்கி வந்தான் சத்யன் என்கிற சத்யேந்திரன்!!!

அப்போ நம்ம ராகவா யாருன்னு, அடுத்த அத்தியாயத்தில் சொல்லுறேன். மேலும், வெற்றியின் படம் வெற்றிகரமா தொடங்குமான்னு பொறுத்திருந்து பார்ப்போம். பாய் பாய் …

-வீணை இசைந்திடும்-

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1055}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.