(Reading time: 18 - 36 minutes)

06. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai

                 

பொறுமை இழந்தவனாய் மீண்டும் ஒருமுறை கடிகாரத்தைப் பார்த்தான் வெற்றி. “ என்னத்தான் ஆயிடுச்சு இவளுக்கு ? எப்பவும் இப்படி லேட் பண்ண மாட்டாளே! அப்படி யாருக்கூட ஃபோன்ல பேசிட்டு இருக்கா?” என்று முணுமுணுத்தவன், ஸ்டார்ட் செய்த காரை நிறுத்திவிட்டு மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தான் வெற்றி. அவன் வீட்டினுள் நுழைந்த நேரம், ஃபோனில் கண்மணியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் விஹாஷினி.

“ ஹேய், கண்ணு நீ வரப்போறியா இல்லையா?” அதட்டலாய் கேட்டான் வெற்றி. அப்படியாவது எதிர்முனையில் பேசிக் கொண்டிருக்கும் நபருக்கு ஃபோனை வைக்கவேண்டும் என்ற எண்ணம் வரும் என்றவன் நினைத்தான். வெற்றியின் குரலைக் கேட்ட விஹாஷினிக்கு சர்வமும் அடங்கி போனது என்றுத்தான் சொல்ல வேண்டும். தான் ஃபோன் செய்த்தின் நோக்கம் அவனுக்கு தெரிந்தால் அவன் என்ன செய்வான் என்று உணர்ந்தே இருந்தாள் அவள்.

“ ப்ளீஸ் மணி” என்று இறைஞ்சலாய் அவள் கேட்க, “வரப்போறியா இல்லையா?” என்று வெற்றி கேட்க, இருவருக்குமே ஒரே பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருந்த கண்மணி, ஒரு நொடி கண்களை மூடி தனது எண்ணவோட்டங்களை ஆராய்ந்தாள். எதையும் மனதில் போட்டு அலட்டிக் கொள்வதும், ஒரு பிரச்சனைக்கு அதிக நேரத்தை செலவிடுவதும் அவளின் சுபாவமே இல்லை. சரியோ தப்போ உடனே முடிவெடுக்கவேண்டுமென நினைப்பவள் அவள். இப்போதும் தன் விழிகளைத் திறந்தவள்,

“ நீ காரை எடு.. வரேன் 2 நிமிஷத்துல!” என்றாள் கண்மணி. அவள் மீது நம்பிக்கையில்லாதவன் போல, கைகளைக் கட்டிக்கொண்டு அங்கேயே நின்றான் வெற்றி. அவனது பிடிவாதமான முகபாவத்தைக் கண்டு சட்டென சிரித்திருந்தாள் கண்மணி.

“டேய் மாங்கா.! சொன்னா கேளேன் டா.. போ வரேன்” என்றாள் அவள். ஒற்றை விரலை நீட்டி “ ஜாக்கிரதை” என்பது போல மிரட்டியவன் புன்னகையுடன் வாசலை நோக்கி நடைப்போட்டான். எதிர்முனையில் இருந்த விஹாஷினியோ மனமுடைந்து போனாள். தான் கேட்டாள் கண்மணி நிச்சயம் மறுக்க மாட்டாள் என்று நினைத்திருந்தாள் அவள்.

“ உன்னிடம் இதை நான் எதிர்பார்க்கல”  என்று அவள் சொல்ல வந்ததைக் கண்மணி சொல்லியிருக்க, அதிர்ச்சியாய்,

“என்ன?”என்று வினவினாள் விஹாஷினி.

“ஆமா விஷூ.. இது ரொம்ப தப்பாக இருக்கு! நீ எதை நினைச்சு பயப்படுறன்னு எனக்கு புரியல. உன் நிலையில் நான் இல்லைத்தான் ஒத்துக்குறேன். ஆனால் ஒருவேளை நான் அதே நிலையில் இருந்திருந்தால் கண்டிப்பா இப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டேன். ஏன் தெரியுமா?”

“..”

“நம்பிக்கை! இந்த உலகத்தில எத்தனை உறவுகள் இருந்தாலும் தாயுக்கும் சேயுக்குமான உறவென்பது, புனிதமானது சொல்லுறதுக்கு என்ன காரணம் தெரியுமா? ஒரு அம்மா தன்னுடைய மகன் அல்லது மகள் மீது வைக்கிற நம்பிக்கை மகத்துவமானது. அசைக்கவே முடியாதது! நம்ம இதிகாசத்தை எடுத்துக்கோயேன்.. ராவணனின் அம்மாவாக இருக்கட்டும் அல்லது துரியோதனனின் அம்மாவாக இருக்கட்டும் தங்களுடய மகன் அதர்மவழியில் போறாங்கன்னு தெரிஞ்சும் கூட அவர்கள் மீது அளவுக்கு அதிகமான அன்பையும் நம்பிக்கையையும் வெச்சிருந்தாங்க. இப்போ எதுக்கு சம்பந்தமே இல்லாம இப்படி மொக்க போடுறேன்னு பார்க்கறியா?”

“..”

“உன் வெற்றியோடு நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும். அதற்காகத்தான் சொல்லுறேன். ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ, நான் வெற்றிக்கு மட்டும் ப்ரண்ட் இல்லை..உனக்கும் ப்ரண்ட்.! அதனால் தானே நீ இப்படி உரிமையாக என்கிட்ட கேட்கிற? இன்னைக்கு அவார்ட் ஃபங்க்ஷன்ல அவனுக்கு தெரிஞ்சவங்க யார் வேணும்னாலும் அவன்கிட்ட பேசலாம். அவங்க பெண்களாக கூட இருக்கலாம். அப்படி அவங்க பேசிட்டு இருக்குறதை டீவியில காட்டப்படலாம்.. அதற்காக எல்லாருக்கிட்டயும் நீ இப்படி ரிக்வஸ்ட் பண்ண முடியுமா?”

“..”

“ நம்பிக்கை ரொம்ப அவசியம் விஷூ. அந்த நம்பிக்கையை நீதான் உன் குடும்பத்துக்கு கொடுக்கணும். சினிமா ஒன்னும் ஈசியான துறை இல்லை. நாமளே பொழுது போகாம எத்தனை பேரைப் பற்றி உண்மையா பொய்யான்னு தெரியாமல் விமர்சித்திருக்கிறோம்? வெற்றி பெரிய டைரக்டர் ஆகிட்டா அவனுக்கும் அதே மாதிரி சிக்கல் வரும் ? அப்போ எங்கள் வீட்டு மாப்பிள்ளை அப்படிப் பட்டவர் இல்லைன்னு உன் வீட்டு ஆளுங்க நம்ப வேணாமா? அதற்கான நம்பிக்கையை நீதான் விதைக்கணும்.”

“..”

அதென்ன சாபமோ தெரியல இப்போ இருக்குற வாழ்க்கை முறையில் நம்பிக்கை என்பதற்கான ஆயுள் ரொம்பவும் கம்மியா இருக்கு.! அன்பில் இணைக்கப்பட்ட ரெண்டு பேரை பிரிக்கிறதுக்கு இன்னொரு மனுஷன் கூட இப்போ தேவையில்லை. ஜஸ்ட் ஒரு ஃபோட்டோவோ, ஆடியோவோ, வீயோவோ அல்லது ஸ்கிரீன்ஷோட்டோ போதும்ன்னு ஆயிடுச்சு! ஆதாரம் என்கின்ற பேருல யாரு எதைக் கொடுத்தாலும் நம்பி பிரிஞ்சிடுறாங்க! இதுவரை சேர்த்துவைத்த அன்பை கொச்சப்படுத்திறாங்க.. அவங்களில் ஒருத்தராய் நீயும் இருந்திடக் கூடாதுன்னுதான் நான் இவ்வளவு பேசுறேன் விஷூ

“..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.