(Reading time: 18 - 36 minutes)

ந்தோஷமாய் புன்னகைத்த மகனின் முகத்தை வருடி முத்தமிட்டார் சுலோட்சனா.

“ என் கண்ணே பட்டுரும் கண்ணா.. இப்படியே சிரிச்ச முகத்தோடு நீ வந்தால் இன்னைக்கு தமிழ் சினிமாவுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் தான்” என்று அவர் நமட்டு சிரிப்பொன்றை சிந்த அதே சிரிப்பு சத்யனையும் தொற்றிக் கொண்டது. வெளியுலகத்தைப் பொருத்தமட்டிலும்,  சத்யன் சிரிப்பதற்கு கூட கூழி கேட்பான். கேமராவின் முன்னால் சிரிப்பதோடு சரி, அதைத் தவிர்த்து மத்த எல்லா நேரமும் முகத்தை ‘உர்ரென’ வைத்துக் கொள்வான். ஆனால், இயல்பில் அவன் அப்படிப்பட்டவன் இல்லை என்பதை அவனைப் பெற்றவருக்கு மட்டுமே தெரியும்! இன்று தனது மகனின் வதனத்தை எத்தனை கேமராக்கள் ஆர்வமுடன் விழுங்கப்போகின்றனவோ? என்று மனதினுள் எண்ணிக் கொண்டார் அவர்.

வானின் நட்சத்திரங்கள் கண்சிமிட்டத் தொடங்கிய இரவு! அந்த பிரம்மாண்டமான அரங்கத்தில் பல நட்சத்திரங்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆரவாரமான வரவேற்புகள் நடந்துகொண்டிருக்க, அங்கு ஒரு ஓரமாய் நின்று கொண்டிருந்தான் அவன். காற்றுக்கூட அவனது பார்வையை கடந்துதான் வீசிட வேண்டுமாம்.! அந்த அளவிற்கு மிடுக்கும் கவனமும் தெரிந்தது அவன் பார்வையில். அந்த அரங்கத்தில் நிகழ்ச்சி பாதுகாப்பாக நடைபெறவேண்டிய பொறுப்பு அவன் கையில் இருந்தது. அவனும் அவனுடன் வந்த மற்ற காவல்துறையினரும், போலிஸ் சீருடை அணியாமல் மஃப்டியில் இருந்தனர். எல்லா இடங்களிலும் பாதுகாப்பு வலுவாக இருப்பதை உறுதி செய்துக் கொண்டு, தனது மேலதிகாரிக்கு ஃபோனில் தகவல் தெரிவித்தான் அவன். முக்கியமான தகவல்களை தெரிந்து கொண்ட அவரும் இப்போது அவனைக் கொஞ்சம் சீண்டி பார்க்கும் எண்ணத்தோடு பேச்சைத் தொடர்ந்தார்.

“ அப்பறம் மிஸ்டர் ராகவன் , ஒரு ஹாட் நியூஸ் கேள்விப்பட்டீங்களா?” என்று கேட்டார் அவர். கடமையில் இருந்தவனோ பொறுப்பான குரலில்,

“ என்ன விஷயம் சார் ? சொல்லுங்க!”

“ கேமரா இருக்குற இடத்தில் எல்லாம் அசிஸ்டண்ட் கமிஷ்னர் இருக்கிறாராமே! என்ன விஷயம்ன்னு உங்களுக்கு தெரியுமா?” என்று அவர் கேட்கவும், அவனது முரட்டு இதழ்களில் மெல்லிய புன்னகை மிளிர்ந்தது. தன்னைப் பற்றி தன்னிடமே அவர் கூறவும், அவனுக்கு சிரிப்புத்தான் வந்தது. “எல்லாம் என்னவளுக்காகத்தான்” என்று சொல்லத் துடித்த நாவை அடக்கியவன்,

“எல்லாமே எதிர்ச்சையாய் நடக்குறதுதான் சார். வேணும்னா சொல்லுங்க, இப்போவே வேறு ஒரு ஆஃபிசரை இங்க வர சொல்லிட்டு நான் வேற வேலையைப் பார்க்கிறேன்”என்று அவன் கூறவும் எதிர்முனையில் வந்தவரும் புன்னகைத்தார்.

உண்மையில் அவனுக்கு இங்கு வரும் வேலையே இல்லைத்தான். ஆனால், அவள் இங்கு இருப்பாள் என்ற காரணத்திற்காகத்தான் ராகவன் இந்த பொறுப்பை முன்வந்து ஏற்றுக்கொண்டான். “காதல் என்பது புகையைப்போல மறைத்து வைத்தால் மறைந்துவிடும்” என்று கவிஞர் பாடியது எத்தனை உண்மை? ராகவன் மறைக்க நினைத்துகூட அவனது காதல், அவனுடன் பணிபுரியும் சிலருக்கு தெரிந்தே இருந்தது.

“ஹா ஹா.. வேணாம் ராகவன். இந்த வேலைக்கு நீங்க மட்டும்தான் சரி வருவீங்க.. எஞ்சாய் யுவர் டியூட்டி” என்றவர் புன்னகையுடன் ஃபோனை வைக்க, எதிரில் வந்த காரைப் பார்த்தவனின் முகம் புன்னகையில் மலர்ந்தது.

 ண்களில் மின்னலுடன் அந்த காரின் அருகே அவன் நிற்க காரிலிருந்து ஸ்டைலாய் இறங்கினாள் கண்மணி. பச்சைநிற புடவையில் பாந்தமான அழகுநிலவாய் மின்னியவளைப் பார்த்து அவன் வசீகரமாய் புன்னகைக்க அவளின் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கத் துவங்கியது.

“ இவன்தான் இந்திரனோ?” என்று அவள் மனதினுள் வினவிடும்போதே,

“ இன்விடேஷன் இருக்கா?” என்று சிரிப்புடன் கேட்டான் ராகவன். அவனை பார்த்து “ஆம்” என்பதுபோல தலையசைத்தவள், தனது கைப்பையில் அதைத் தேட தொடங்கினாள்.

“பொண்ணுங்க பேக்ல என்னத்தான் வெச்சு இருப்பீங்களோ, ஒரு பொருளை எடுக்க எவ்வளவு நேரமாகுது!” என்று நக்கலுடன் அவன் கூறவும் கோபமாய் நிமிர்ந்தாள் கண்மணி.

“ஹலோ மிஸ்டர் ! மைண்ட் யுவர் வொர்ட்ஸ்.. ஒரு செக்கியூரிட்டிக்கு இவ்வளவு நக்கல் இருக்க கூடாது. இன்விடேஷன் இல்லாமல் இப்படி வர முடியுமா? அதை வெச்சே நாங்க யாருன்னு தெரிய வேணாமா?”

“ ஹலொ மேடம்! மைண்ட் யுவர் வொர்ட்ஸ்.. ஒரு போலிஸ்கிட்ட பேசுற விதமா இது? பார்த்தவுடனே தெரியதுக்கு நீங்க என்ன ஹீரோயினா?” என்று ராகவன் பதிலுக்கு பேசவும், அவன் போலிஸ் என்று தெரிந்ததும் கொஞ்சம் தணிந்தவள், ஹீரோயினா? என்று வம்பிளுக்கவும் கோபமாகினாள்.

“யூ..”என்று கண்மணி பதில் பேச ஆரம்பிக்கும் முன், “டேய் இந்திரா” என்று குரல் கொடுத்தான் வெற்றி. அவன் “ இந்திரா” என்று அழைக்கவும் புன்னகையுடன் நிமிர்ந்தான் இந்திரன் என்கிற ராகவேந்திரன்.

“இந்திரனா?”என்று கண்மணி முணுமுணுக்க அவனது பார்வையோ வெற்றியின் மீதே பதிந்திருந்தது. ஆனால் அவனது இதழோர புன்னகையோ அவளுக்கு மட்டும் என்னென்னவோ சொன்னது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.