(Reading time: 23 - 46 minutes)

13. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval ரு மோட்டர் வெஹிகளோட ஸ்பேர் பார்ட்ஸ்களை 5 வகையா பிரிக்கலாம். முதலில வெஹிகலோட பாடி & மெயின் பார்ட்ஸ் அதாவது டோர்ஸ், விண்டோஸ் முதலியன.....,

ரெண்டாவது எலெக்ட்ரிகல் & எலெக்ட்ரோனிக்ஸ் அதாவது ஆடியோ வீடியோ, சார்ஜிங்க் சிஸ்டம்ஸ் இப்படிபட்ட எல்லா விதமான பார்ட்ஸ்,

மூணாவது மோட்டார் வெஹிகலோட இண்டீரியர் அதாவது சீட், சீட் கவர்...இதெல்லாம்,

நாலாவது ப்ரேகிங்க் சிஸ்டம்,எஞ்சின் ஆயில், ஃபூயல்(Fuel) சப்ளை சிஸ்டம் ....இவைப் போன்ற பார்ட்ஸ் இத பொதுவா Powertrain Chassics னு வகைப் படுத்துவாங்க.

 அஞ்சாவது மிஸலேனியஸ் ஆட்டோ பார்ட்ஸ் அதாவது ஏசி க்ளட்ச், கம்ப்ரஸ்ஸர் இத மாதிரி பார்ட்ஸ்.

 இதில நம்ம ஃபேக்டரில என்ன எல்லாம் தயாரிக்கிறோம்னா என………. மிக விளக்கமாக ஒவ்வொன்றாக விளக்கியவன். முதலில அந்த பெரிய ஃபேக்டரிக்கு அதான் நான் வேலைச் செஞ்சிட்டு இருந்தேனே அவங்க ஆர்டர்ஸ் செஞ்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாலும், பெரிய அளவில வளரணும்னா நம்முடைய எல்லைகளைப் பெரிசாக்கணும் இல்லையா? அதான் நான் பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புக்களைத் தேடினேன்.

 இரண்டு வருடமாக நான் வெளி நாட்டில் பணிபுரிந்த இடத்தில் ஏற்பட்டு இருந்த என்னுடைய அறிமுகம் இருந்த காரனத்தினால், அவர்கள் என் மேல வைத்திருந்த நம்பிக்கைகாரணமாக எனக்கு ஒரு சில சின்ன சின்ன ஆர்டர்கள் கிடைச்சது. ஸ்டார்ட்டிங்க்ல கொஞ்சம்.....என்ன நிறையவே சிரமங்கள் இருந்தாலும், இப்போ நம்ம ப்ராடக்டோட குவாலிடி பார்த்து நமக்கு இன்னும் நிறைய புது ஆர்டர்ஸ்லாம் கிடைச்சுருக்கு. அதான் நான் இப்போ இந்த இடத்துக்கு ஃபாக்டரியை மாற்றினேன். முன்னே இருந்த இடத்தில விரிவு படுத்துறதுக்கு வாய்ப்பு இல்ல. இந்த இடம் நம்ம வீட்டுக்கு கொஞ்சம் தூரம்னாலும் கூட வேலையை பொருத்தவரை இது ரொம்ப வசதியான இடம் தான். இப்போதைக்கு ஃபேக்டரில 40 பேர் வேலைப் பார்த்துட்டு இருக்காங்க, ஆஃபீஸ்ல 6 பேர் இருக்காங்க.......

 தன்னுடைய கேபினில் நின்றவாறு விபரங்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தான் ரூபன். எதிரில் மிகவும் அக்கறையாக அவனுடைய பேச்சை செவிமடுத்துக் கொண்டிருந்தனர் ஜீவனும் , அனிக்காவும். விளக்கங்கள், அவர்கள் கேள்விகளுக்கேற்ற பதில்கள் என்றுத் தொடர்ந்துக் கொண்டிருந்த ரூபனுக்கு திடீரெனெ என்ன தோன்றியதோ தெரியவில்லை. தனக்குள்ளாக யோசித்தவாறு புன்னகைத்தவனது மெலிதான புன்முறுவல் விரிந்து முகம் முழுவதும் பரவ சட்டென்று சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

 இவனுக்கு திடீரென்று என்னவாயிற்று? என்று எண்ணியவர்கள் இருக்கையை விட்டெழுந்து அவன் அருகே வந்து நின்றனர். கொஞ்சம் கலவர முகத்தோடு ஜீவன்,

“என்ன ஆச்சுண்ணா? என்றான்

“அத்தான் என்னாச்சு? இப்போது கேள்வி கேட்பது அனிக்காவின் முறையானது.

 சிரிப்பை ஒருவாறாக கட்டுப் படுத்தியவன், மறுபடி இருவர் முகத்தைப் பார்த்து இன்னும் அதிகமாக சிரிக்க ஆரம்பித்து விட்டான். நண்பர்கள் இருவருக்கும் ரூபன் தங்களைக் குறித்தேச் சிரிக்கிறான் என்று உறுதி ஆகிவிட்டது. இப்போது வலப்புறமும் இடப்புறமுமாக கோபத்தோடு இருவரும் வந்து நிற்க ரூபன் சிரித்து முடித்துவிட்டு இருவரையும் நிமிர்ந்துப் பார்த்தான்.

“இல்லடா நீங்க ரெண்டு பேரும் எதிர்ல உக்கார்ந்திருக்க உங்களுக்கு நான் எக்ஸ்ப்ளைன் செய்யிறதை நினைச்சதும் , எனக்கு உங்க 10த் மேத்ஸ் க்ளாஸ் ஞாபகம் வந்திடுச்சி.”

 ஜீவனின் முறைப்பை பொருட்படுத்தாமல் தொடர்ந்தான்.

“அதில தான் 100% எடுப்பேன்னு சொல்லிட்டு 50%, 60% எடுத்தீங்க இங்க அப்படி எதுவும் செஞ்சு வைக்காதீங்கடா” எனச் சொல்லி மறுபடிச் சிரிக்க,

“அத்தான்……….

 அனிக்கா ரூபனை அழைத்த அந்த அத்தான் அழைப்பில் அவள் பற்கள் ஏற்கெனவே அரைப்பட்டுக் கொண்டு இருந்தன. தன்னைத்தான் அவன் சொல்கிறான் என்று புரிந்துக் கொண்டதால் அனிக்கா தன் கையிலிருந்த டைரியால் அவன் முதுகில் மொத்தினாள்.

“அத்தான்,பொத்தான், செத்தான்” சின்ன வயதில் எப்பவோ அம்மா விளையாட்டாக சொல்லிக் கொடுத்ததை பற்கள் அரைபடச் சொல்லிக் கொண்டு இடுப்பில் கை வைத்துக் கொண்டு முறைத்தாள். அந்த நீண்ட ஸ்கர்ட் , டி ஷர்ட், டெனிம் ஜாக்கெட்டில் இன்னும் அவள் அவன் கண்ணுக்கு குழந்தையாகவேத் தெரிந்தாள்.

என்னண்ணா வில்லன் ஸ்டைல்ல ரைமிங்கா திட்டுறா? ஜீவனும் அண்ணனோடு சேர்ந்து சிரிக்க,

“ஐயய்யோ, ஆண்களைக் காப்பாத்துறதுக்கு இந்த நாட்டுல சட்டம் எதுவுமில்லையா?”

 தன் முதுகைத் தடவியவாறே மேலும் அடிவாங்குவதற்குள் அவர்கள் இருவரையும் கேபினிலிருந்து வெளியே அழைத்து வந்தான் ரூபன். அனிக்கா இன்னும் முறைத்துக் கொண்டிருந்தாள். ஒருவாறாக அவளை சமாதானப் படுத்தி சிரிக்க வைத்தனர் இருவரும்.

“இன்னிக்கு உங்களுக்கு ஸ்வீட் கிடையாது அத்தான்” என்று அன்று அவர்கள் அனைவருக்குமாக சாப்பாடு கொண்டு வந்திருந்த அனிக்கா முறுக்கிக் கொண்டாள்.

“நீ தராட்டு போ, எனக்கு என் தம்பி தருவான்” என ரூபன் விளையாட்டாக கூற,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.