(Reading time: 23 - 46 minutes)

வீட்டில் இருக்கும் இடமே தெரியாமல் அமைதியாக இருக்கும் ரூபன், தன்னிடம் மட்டுமில்லாது யாரிடமும் அனாவசியமாக எதுவும் பேசிப் பர்த்திராத ரூபன், தன்னுடைய ஃபேக்டரிக்கு வந்துச் சேர்ந்தது முதல் முழுக்க மாறிப் போனவனாக, தன் தந்தையிடம் கண்டு வியந்த அதே ஆளுமைத் திறன், அதே தோரணை, அதே பெருமிதத்தின் உருவமாக இருப்பதை இப்போது அவள் உணர்ந்துக் கொண்டாள். மனதில் நிரடிய எண்ணங்கள் முழுமைப் பெற்றன.

 “என்ன அனி பிடிச்சிருக்கா?”

 அதற்குள்ளாக அருகாமையில் வந்து நின்றிருந்த ரூபன் எங்கோ பார்த்தவளாக சிந்தனையில் அமிழ்ந்து இருந்தவளை ஃபேக்டரியை தான் பார்வையிடுகின்றாளோ என்று எண்ணியவனாகக் கேட்டான். அவன் குரலில் இருந்த துள்ளலில் தன்னிடம் இருக்கும் பொம்மையைக் காட்டி பெருமிதம் கொள்ளும் சிறுவனைப் போல அவன் அவளுக்குத் தோன்றினான்.

 அவன் கேட்ட விதத்தில் அனிக்கா மட்டும் பிடிக்கவில்லை என்று ஒரு வார்த்தைச் சொல்லிவிட்டால், முழுவதுமாக அவளுக்கு பிடித்த விதத்தில் அத்தனையையும் மாற்றி விடும் தீவிரம் தெரிந்தது. அவனை நோக்கியவள்,

“ரொம்ப நல்லா இருக்கு அத்தான்” என்று பதிலிறுத்தாள்.

 ஏதோ ஆஸ்கர் அவார்ட் வாங்கிய உணர்வில் அவன் அவளை நோக்கினான்.

 “நீ வா வா இங்கே உனக்கு சத்தம் ரொம்ப டிஸ்டர்பன்ஸா இருக்கும்”

 என்றவனாக அவளை அழைத்துச் சென்றான். அவர்கள் வந்த இடத்திற்கே திரும்பினார்கள், கனத்த கதவொன்று அந்த ஃபேக்டரிக்கும் ஆஃபீஸிற்கும் இடையில் சரியாக பொருந்த, மெஷின்கள் எழுப்பிக் கொண்டிருந்த சப்தங்கள் மறைய அந்த இடத்தில் முற்றிலும் அமைதி நிலவியது. உள்ளே ஆபீசில் பணியமர்த்தியிருந்த 4 பேர்கள் இருந்தனர். அவர்களது குட்மார்னிங்கை வாங்கி பதிலுக்கு தலையசைத்தவனாக தன் கேபினுக்கு உள்ளே அவளை அழைத்துச் சென்றான்.

"கான்பிரன்ஸ் கால் எல்லாம் இந்த கேபினில இருந்து தான் செய்யணும் , சத்தம் டிஸ்டர்ப் ஆகக் கூடாதில்லை, அதான் ரெண்டு இடமும் உள்ளே வர்றதுக்கும், போறதுக்கும் வேற வேறடோர். ஏதாவது வேலைனா இண்டர்காம்ல கூப்பிட்டா போதும் பார்த்தியா?

தன்னுடைய அலுவலக அமைப்பு அவளுக்கு பிடித்திருக்கிறதா? என்று அறிய அவள் விளக்கம் சொல்லி முடித்தவனாக அவளைப் பார்த்தான்.

"நீங்க என்னை அவங்க கூட இண்ட்ரோ செஞ்சு வைக்கல அத்தான்?" என தன் மனதில் இருந்ததைக் கூற,

"இப்பவும் ஜீவனை வெகு சிலருக்கு தான் அறிமுகம் செஞ்சு வச்சிருக்கேன், உங்க ரெண்டு பேரையும் ப்ராப்பரா அறிமுகம் செய்ய இன்னிக்கு மதியம் லன்சுக்கு அப்புறம் ஒரு மீட்டிங்க்வச்சிருக்கேன்.

 மதியம் செகண்ட்ஷிப்ட்ல இருக்கிறவங்களும் வந்த பிறகு வச்சா ஒரே மீட்டிங்க்ல ஆயிடும் பார்த்தியா? ஜீவனுக்கு ப்ரொடக்ஷன் மேனேஜ் செய்யுற பொறுப்பை கொடுக்கப் போறேன். ஏன்னா அவனுக்கு டெக்னிக்கல் விஷயம் என்னை விடவும் நல்லாவே தெரியும், நீ அங்க இருந்தா உனக்கு போரடிக்குமேன்னு நினைச்சேன். நான் பெரும்பாலும் ஃபேக்டரில தான் இருப்பேன். இங்க அப்பப்ப வந்து எட்டிப் பார்ப்பேன்.

 என்னோட லேப்டாப் என்கூடவே இருக்கும், வேலையை மானிடர் செய்றதோட கூடவே சைட்ல என் வேலையும் ஆயிடும் பார்த்தியா? என்று புன்னகைத்தான்,உழைப்பாளிதான் என்று மனதிற்குள் வியந்துக் கொண்டாள்.

"அப்ப நான் என்னச் செய்யிறது அத்தான்? என்றவளுக்கு அங்கிருந்த டெஸ்க்டாப்பின் யூசர் ஐடி, பாச்ஸ்வர்ட் எல்லாம் கொடுத்து,

"நிறைய இம்பார்டண்ட் டாகுமெண்ட்ஸ், அக்கவுண்ட்ஸ் டீடெயில் எல்லாம் இதில தான் இருக்கு என்றவன். இதெல்லாம் பாரு, உனக்கு ஏதாவது சஜஷன் இருக்கான்னு பார்த்துச்சொல்லு. உன் படிப்புக்கேத்த வேலை இதுதான்னு தோணுச்சு? நான் செஞ்சது சரியா? இல்லை உனக்கு வேற எதாவது கத்துக்கணுமா? எல்லாம் உன் இஷ்டம் தான் என்றான்.

 சரியாக தான் யோசித்து இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டவளாக இன்முகமாக தலையசைத்ததோடு மனதை உறுத்திக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்டு விட்டாள்..

"ஏன் அத்தான் இவ்வளவு இம்பார்டன்ட் வேலையை எனக்கு தந்திருக்கீங்க?, எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு" ,

"அதெல்லாம் ஒண்ணுமில்ல,சும்மா மேலோட்டமா பார்த்து வை, எதுவும் புரியாவிட்டா எனக்கு கால் பண்ணு சரியா? நான் கொஞ்சம் சூபர்விஷன் பண்ணிட்டு வாரேன். அதுக்காகஇதையெல்லாம் இப்பவே செஞ்சு வைக்கணும்னு ஒண்னும் அவசரமில்லை. நான் கொஞ்சம் சரியாதான் இதுவரை மெயிண்டெயின் செஞ்சு வச்சிருக்கிறேன். கேபினுக்கு உள்ளேயேஇருக்கணும்னு அவசியமில்லை. ஆஃபீஸ் ஸ்டாப் வேலையை கவனிக்கணுமா? இல்லை ஃபேக்டரிக்கு வந்து எல்லாம் பார்க்கணுமா? எல்லாம் உன் இஷடம் தான் ஃபீல் ஃப்ரீ அனிக்கா" :என்றுச் சொல்லிப் புறப்பட்டான்.

 அவள் தன் டெஸ்க்டாப்பில் ஆழ்ந்திருக்க கேபினை விட்டு வெளியேறியவனுக்கு மனதிற்குள் உற்சாகம் பொங்கித் தழும்பிக் கொண்டிருந்தது.இவ்வளவு நாளாக அவளோடு பேச மனதிற்குள் வெகுவாக ஆசை இருந்தாலும், என்னப் பேசுவது? அனாவசியமாக ஏதாவது பேசி தன்னை தவறாக நினைத்துக் கொள்வாளோ என்று எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும், இப்போதோ அவளிடம் மனசு விட்டு பேச அவனுக்கு ஏராளம் ஏராளம் வாய்ப்புக்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.