(Reading time: 23 - 46 minutes)

ன்னுடைய முந்தைய சிந்தனையின் படி அம்மா, அப்பாவிடம் பேசி அரேஞ்ச்ட் மேரேஜாக தன்னுடைய திருமணம் நடத்திக் கொள்ள வேண்டுமென்பது தான் அவனுடைய அவாவாகஇருந்தது. இப்போதோ ஒரு பக்கம் அவளோடு பேசி அவளுடைய விருப்பத்தையும் அறிந்தால் தான் என்ன? என்று ஒரு எண்ணம் மொட்டு விட்டிருந்தது.

பெண்ணிடம் தாறுமாறாக பேசுவது, தன்னைக் காதலிக்க வேண்டுமென்று வற்புறுத்துவது, ஏன் அவளை அவளின் தன்மானத்தை சீண்டும் விதமாக அனாகரிகமாக தொட்டுஅணைத்து என்று எந்த வன்முறையும் செய்வது அவனுக்கு எப்போதுமே விருப்பமாக இல்லை. அவளுக்கு தன் மீது காதல் என்னும் உணர்வு இல்லை என்று அவனுக்கும் தெரியும்தானே? தன் மீது மட்டுமா? இன்னும் வரை வேறு யார் மீதும் கூட அந்த எண்ணம் இல்லை என்பது தான் அவனுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம்.

 தன்னைக் கல்லூரியில் பின்தொடர்ந்து வந்தவனால் தன் படிப்பிற்கு தடை வந்து விடுமோவென அவள் பதறியதை அவன் கண்கூடாகப் பார்த்திருந்தானே? அதே பதற்றத்தை அவளுக்கு தர அவனுக்கு விருப்பமில்லை. அவளுக்காக உலகம் அனைத்தும் முன்பாக போராட அவன் எப்போதுமே ஆயத்தமானவனாக தான் இருக்கின்றான். ஆனால், அவனுடையச்செயல் அவளை எந்த விதத்திலும் காயப் படுத்துமானால் அதற்காக அவன் துணிவதாக இல்லவே இல்லை. அதற்கு பதிலாக உலகமே அவனை கோழை என்றுத் தூற்றினாலும்அவனுக்கு அதில் சம்மதமே.

 இப்போதெல்லாம் அவனுடைய நோக்கம் ஒன்றே தான் தன்னுடைய தொழிலை அரும்பாடு பட்டு நிலை நிறுத்தி இருக்கின்றான். இதில் இன்னும் முன்னேற வேண்டுமானால்அவனுக்கு இன்னும் ஒரு சில வருடங்கள் கால அவகாசம் தேவை. ஏற்கெனவே பேசிக் கொண்டிருக்கும் ஓரிரு ஒப்பந்தங்கள் கையெழுத்தானால், அவனுடைய நிலை இன்னும்உச்சத்தில் அமைந்து விடும். அதன் பின்னர் அவனுக்கு தன்னுடைய அத்தை மகளை கரம் பிடிக்க எந்த தடையும் இராது. அவள் தற்போது படித்துக் கொண்டிருப்பது தான் அவனுக்கு ஒரேஆறுதல். எப்படியும் அவளுக்கு படிப்பு முடியும் வரை திருமணம் செய்து வைக்கும் பேச்சு நடைபெறாது, அதற்குள்ளாக தனக்கு தேவையான கால அவகாசத்தை அவன் எடுத்துக்கொள்ளலாம் என்பது அவன் எண்ணம்

 எல்லாம் அவன் எண்ணுகின்றபடியே நிகழ்ந்து விடுமா? அவன் அவளைக் கரம் பிடிக்க வேண்டி எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் என்ன? எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள்எப்படிப்பட்டவை என்பதை அறியாதவனாக அவன் அந்த நாள் தந்த பூரிப்பில் தன் வேலையில் மகிழ்வாய் ஈடுபட்டான்.

 இந்த விஷயங்களில் சம்பந்தப் படாத ஒருவள் தேவையே இல்லாமல் கோபத்தில் கனன்றுக் கொண்டிருந்தாள், அவள் வேறு யாருமல்ல ஷைனிதான், படிப்பு ஏற்கெனவே முடிந்து விட்ட நிலையில், மேற்கொண்டு தானாக என்ன செய்ய வேண்டும் என்று எந்த முடிவையும் எடுக்காமல் குழம்பியதோடு மட்டுமல்லாமல், அப்படியென்றால் திருமணம் செய்து வைக்கலாம் என்று பெற்றோர்கள் ஏற்பாடு செய்ய, பார்க்கும் மாப்பிள்ளைகளையெல்லாம் குறைச் சொல்லி அவள் தள்ளி வைத்த விதத்தில் அவள் பெற்றோருக்கு தலைச்சுற்றாத குறைதான். அவளுக்கு என்ன வேண்டும் என்று அவளுக்கே புரிந்திராத போது அவள் பெற்றோருக்கு மட்டும் அவளால் என்ன புரிய வைத்து விட முடியும்?

 பணம், அழகு, அந்தஸ்து எல்லாம் வேண்டும் என்பவளுக்கு ஒன்று இருந்தால் மற்றொன்று இல்லாத நிலைக் கண்டு பொறுக்க முடியவில்லை. அவளுக்கு என்னதான் வேண்டும்என்றுப் புரியாத பெற்றவர்கள் அவளேப் பார்த்துச் சொல்லட்டும் அது வரை நாம் கொஞ்ச நாள் சும்மா இருப்போம் என்ற நிலைக்கு வந்து விட்டனர். அப்போது தான் ரூபன் பற்றி அரசல்புரசலாக அவளுக்கு தெரிய வந்தது.

 அது நாள் வரை அக்கா வீட்டுக்கு அடிக்கடி செல்லாதவள் அவ்வப்போது செல்ல ஆரம்பித்தாள். ப்ரீதா மிகவும் கலகல டைப் இல்லையென்றாலும் வீட்டினருக்கேற்ற அமைதியானமருமகள் தான், எல்லாவற்றிலும் அதிகமாக கலந்துக் கொள்ளாவிட்டாலும் இணக்கமாகவே நடந்துக் கொள்வாள். தன்னுடைய மகன் பிறந்த போது கூட பாசத்தோடு அடிக்கடி ஓடிவராத தங்கை இப்போது ஏன் அடிக்கடி வருகிறாள் என்று அவளுக்கு கொஞ்சம் புரிந்தது.

 ரூபன் குறித்து அவளுக்கும் நல்ல அபிப்ராயம் தான், அதனால் தன் தங்கை விரும்பியபடி நடந்தால் நடக்கட்டுமே? என்று அவளுக்குள்ளும் ஒரு எண்ணம் தோன்றி விட்டிருந்தது.ஆனால், எந்த விதத்திலும் அவளுக்கு போய் பரிந்து பேசி தன்னுடைய இல்லறத்தை கெடுத்துக் கொள்ளும் எண்னம் அவளுக்கு இல்லை. தனக்கு மிஞ்சி தான் தான தருமம் என்றுஅறிந்து வைத்திருந்ததோடு, தன் தங்கையின் நிலையற்ற புத்தியை அறிந்தவளாயிற்றே. அதனால் தான் தன் தங்கை ரூபனின் ஃபேக்டரியில் பணிபுரிய விருப்பம் தெரிவித்ததைஅத்தையின் காதில் போட்டு விட்டு நிம்மதியாக இருந்து விட்டாள்.

 அதைக் கேட்ட இந்திராவுக்கோ தர்ம சங்கடம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், பணிபுரிபவர்களில் பலர் வீட்டினரின் பரிந்துரைக்கேற்ப தான் அவன் சேர்த்திருந்தான்.அம்மா சொன்னால் தட்டாமல் கேட்பான் தான்.ஆனால் ஜீவனுக்கு அவளை வீட்டில் சேர்ப்பதே பிடிக்காத போது ஃபேக்டரியில் சேர்த்தால் என்னச் சொல்வானோ? எதையாவது இடக்குமடக்காகச் சொல்லி அதனால் வீட்டில் பிரச்சினைகள் வந்து விட்டால் என யோசித்தார். என்ன இருந்தாலும் உறவினர்களோடு ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வைத்து பழகுவது தான் நல்லதுஎன்ற எண்ணம் ப்ரீதா கேட்ட விஷயத்தை மகன்களிடம் சொல்லாமலேயே தானாக ஒரு முடிவுக்கு வர வைக்க செய்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.