(Reading time: 9 - 18 minutes)

14. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

தீபாவளி நாளுக்கு பிறகு அர்ஜுன், சுபா, ராகுல் , நிஷா நால்வரிடையே நட்பு வளர ஆரம்பித்தது. பயிற்சி நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் நன்றாக அரட்டை அடிப்பதும்  தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டும் இருந்தனர்.

ஒருநாள் இவர்கள் நால்வரும் டின்னெர் போது ஆர்மியில் சேரும் எண்ணம் பற்றி பகிர்ந்து கொண்டனர்.

சுபா அர்ஜுனிடம் “கேப்டன் .. உங்களுக்கு ஆர்மியிலே சேரணும்னு எப்படி தோனுச்சு?” என்று வினவினாள்.

“எனக்கு பழைய சரித்திர கதைகளில் வரும் போர் தந்திரம், அந்த போர் முறை இது எல்லாம் படிக்க ரொம்ப பிடிக்கும். நானும் அந்த மாதிரி ஒரு கம்மண்டிங் நிலைமையில் இருக்கணும்னு ஆசையா இருக்கும். அதான் ஆர்மியில் சேர்ந்தேன்..”

“ஏன் ஜி.. அப்படின்னா கூட Navy, Airforce இது எல்லாம் ட்ரை பண்ணாமல், ஆர்மி லே ஏன் சேர்ந்தீங்க..?”

“எனக்கு என்னவோ ஆர்மி தான் ஒத்து வரும்னு தோணிச்சு..அதான் இங்கே சேர்ந்துட்டேன்..”

அதே கேள்வியை ராகுலிடம் கேட்க, “நான், அர்ஜுன், மிதுன் மூணு பேரும் சின்ன வயசுலேர்ந்து சேர்ந்தே வளர்ந்தோம் .. அவன் கூட பேசி பேசி எனக்கும் இந்த லைன் interest ஆச்சு. அதான்..” என்றான்.

“அப்போ மிதுன் ஏன் சேரலை..?”

“அவன் மாமா ஏற்கனவே ஆர்மிலே இருக்கிறார்.. அவருக்கு குழந்தை இல்லை.. சோ அந்த குடும்பத்திற்கு வாரிசு என்ற முறையில் இவன் மட்டும் தான் இருப்பதால் அவங்க தாத்தா, பாட்டி தடுத்துட்டாங்க.. அதோட நடுவில் அவனுக்கு ஒரு சின்ன accident ஆனதுலே எங்க selection அப்போ அவனால் வரமுடியல... அதுக்கு அப்புறம் தனியா சேர யோசிச்சுட்டு வேண்டாம்னு சொல்லிட்டான்.. அதோட எங்க மூணு பாமிலியும் பார்த்துக்கிறது அவன்தான்.. “

“ச்சே.. சப்புன்னு ஆயிடுச்சே... நான் கூட எதாவது அந்நிய நாட்டு சதி, அதுலே நீங்க பாதிக்கப்பட்டு, அவங்கள பழி வாங்க ஆர்மிய்ல சேர்ந்து இருப்பீங்கன்னு ஒரு கேப்டன் விஜயகாந்த் கதை மாதிரி எதிர்பார்த்தேன்.. புஸ்வானம் ஆயிடுச்சே.. “ என்று வாயடிக்க,

அவளை அடிக்க கை ஓங்கிய அர்ஜுன் “ வாயாடி சுறா ...என்னை கேப்டன் விஜயகாந்த் ஆகி mind வாய்ஸ் லே கலாயிக்கணும் ன்னு நினைச்சியோ.. அது எல்லாம் நடக்காது மேடம்.. “

“ச்சே.. ச்சே.. நான் அப்படிபட்டவ இல்ல கேப்டன்.. mind வாய்ஸ் லே இல்ல ..own வாய்ஸ் லேயே கலாயிக்க பிளான் பண்ணின ரொம்ப நல்லவ ... சார்.. “

“அடிங்க.. சரி .. தாங்கள் ஆர்மியை தேர்ந்தெடுத்த காரணம் என்னவோ.. ? நாங்கள் அக்காரணத்தை அறியலாமா?“

“பொறுப்பு துறப்பு.. எனது கதையில் பல திருப்புமுனைகள் இருக்கும்.. கேட்டு பயமோ, பரிதாபமோ கொள்ளாதீர்கள்.. இத எல்லாம் டைட்டில் கார்டு லே சேர்த்துக்கோங்க.. “ என்றவள்,

“இப்போ என் கதை என்ற காவியதிற்குள்ளே செல்லலாம்..

வருடம் 1997 .. பரந்த சென்னை மாநகரில் கிருஷ்ணன், ருக்மணி என்ற தம்பதிகள் இருந்தாங்க.. அவங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அப்பெண் குழந்தை மிக திறமைசாலி மற்றும் வம்பு செய்வதிலும் இணையற்று திகழ்ந்தாள். அவளின் குறும்பு வயது ஏற ஏற இன்னும் அதிகமாக, அவளின் பெற்றோருக்கு கவலை ஏற்பட்டது. அவளை பற்றி அறிந்து கொள்ள ஒரு ஜோசியரிடம் சென்றபோது தான் தெரிந்தது.. போன ஜென்மத்திலே மகிழ்மதியின் சேனாதிபதி கட்டப்பாவோட பொண்ணுன்னு.. அவ சின்ன வயசா இருக்கும்போது பாகுபலியின் எதரிகளின் சூழ்ச்சியால் கட்டப்பா பாகுபலிக்கு துரோகம் செய்ததும்,  பிறகு வேறு படைகளால் கட்டப்பாவின் பெண்ணான அவள் கொல்லப்பட்டதாகவும், அவர்களை பழி வாங்கவே இந்த ஜென்மத்தில் வீராங்கனையாகவும் பிறந்து இருக்கான்னு தெரிஞ்சுது.. இதை எல்லாம் நாடி ஜோசியம் மூலம் கண்டுபிடிச்ச அவளின் பெற்றோர் .. அவளை கூட்டில் அடைக்க முடியாது என்று கருதி அப்புறம் ஆர்மி லே சேருவதற்கு எல்லா தகுதிகளும் வளர்த்து .. இப்போ இங்கே உங்க முன்னாடி  எதிரிகளை சிதறடிக்க கூடிய போர் வீராங்கனையா நிக்க வச்சு இருக்காங்க...” என்று சொல்லி முடிக்கவும்,

“எல்லாம் சரி... பாகுபலி பார்ட் 2 கதையா உன்கிட்ட கேட்டோம்.. உன்னோட அதி பயங்கரம், பரிதாபம் ன்னு சொல்லி ஒரு கதை சொல்றேன்னு சொன்னியே அது என்ன? “ என்று அர்ஜுன் வினவ,

“அழகான பொண்ணுன்னு ஒரு வார்த்தை சொன்னாளே.. அதுதான் கேப்டன் திருப்பு முனை, பயங்கரம் எல்லாம்..” என்று நிஷா அவள் காலை வார,

“ஹேய்.. வாத்து ... எனக்கேவா.. ஏதோ கொஞ்ச நேரம் டைம் பாஸ் ஆகட்டுமேன்னு கதை சொன்னால் .. அத அனுபவிக்கனும்.. ஆராயக் கூடாது.. சம்ஜே.. “ என்று வம்பு வளர்த்தாள்.

நால்வரும் சிரிக்க, நிஷாவிடம் அவளை பற்றி கேட்டதற்கு, அவளின் அப்பா ஆசை எனவும், அவருக்காக தான் இதில் சேர்ந்ததாகவும் கூறினாள்.

“அது எல்லாம் சரி.. இங்கே சேர்ந்தாச்சு.. இனிமேல் என்ன செய்வதாக எண்ணம்..?” என்று கேட்க,

சுறா.. “முதலில் எனக்கு இந்த ட்ரைனிங் லே முதலாக வரணும். அதுக்கு அப்புறம் நல்ல போஸ்டிங் சேரனும்.. இதுதான் சார் என் எண்ணம்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.