(Reading time: 9 - 18 minutes)

கே.. அதுக்கு நான் ஒரு நல்ல வாய்ப்பு ஏற்படுத்தி தரேன்.. அதை கைப்பற்றுவது உங்க உழைப்பிலே தான் இருக்கு... நாளைக்கு நாம ட்ரைனிங் போது பேசலாம்.. “ என்றான்.

அதன் படி மறுநாள் ட்ரைனிங் ஆரம்பிக்கும் முன்னாடி அர்ஜுன் ஒரு அறிவிப்பு கொடுத்தான்

“வீரர்களே... வரும் ஜனவரி 26 ம் தேதி நடக்க போற குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்ள நமக்கு நோட்டீஸ் வந்துருக்கு. அதன் படி டிசம்பர் மாதம் முதல் அணிவகுப்பு போட்டிகள் நடக்கும். அதில் தேர்வாகி வரும் பதினைந்து குழுக்கள் விழா நாளில் பங்கேற்க முடியும். அதோட அந்த அணிவகுப்பு கலை நிகழ்ச்சிகள் மற்றும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் models செய்வது எல்லாவற்றுக்கும் போட்டி நடக்கும். இருக்கிறதில் சிறப்பான குழுக்கள் தேர்ந்தெடுக்க பட்டு அவர்களின் பங்களிப்பு குடியரசு தினத்தன்று காட்டபடுவதோடு, இதில் தேர்வானவர்களுக்கு நல்ல போஸ்டிங் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கும்.

இதில் உங்கள் கேப்டன் நாங்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டோம். நீங்களே குழுக்களாக பிரிந்து உங்களுக்கு ஏற்றதை செய்து பயிற்சி எடுங்கள். எல்லாருக்கும் எங்களின் உதவி உண்டு.. ஆனால் அடிப்படை ஐடியா உங்களிடமிருந்துதான் வரவேண்டும்.. முதலில் நம் campus க்குள் சிறந்த ஒன்றை நமது பிரிகடியர் தேர்ந்தெடுப்பார். அவர்கள் மற்ற regiment அணிகளோடு போட்டி போட வேண்டும். இதற்கான கால அவகாசம் உங்களுக்கு பத்து நாட்கள். பதினோராவது நாள் போட்டி நடக்கும்.

மேலும் இந்த முறை முதல் முறையாக பெண்கள் அணிவகுப்பு தனியாக நடக்க அனுமதி கிடைத்துள்ளது. அதற்கும் போட்டி நடக்கும். சோ அதை தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்பதற்கும் நமது campus போட்டியில் தேர்வு செய்வார்கள்.. இந்த முறை நமது regimentலிருந்து கண்டிப்பாக அதிகமான அணிகள் கலந்து கொள்ள வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.. எல்லாருக்கும் வாழ்த்துக்கள்..”

என்று முடித்தான்.

இதை கேட்ட சுபாவும், நிஷாவும் மிகவும் ஆர்வம் கொண்டனர். அன்றிலிருந்து பெண்கள் அணிவகுப்பு தனியாக நடைபெற ஆரம்பித்தது. அவர்களே குழுக்களாக ஆறு குழுக்களாக பிரிந்து தங்களில் யார் நன்றாக marchfast செய்கிறார்களோ அவர்களை தலைமை ஏற்க செய்து இவர்கள் பின்பற்றினர்.

மொத்த ட்ரைனிங் விங்கும் தங்களுக்குள் கலந்து உரையாடி ஆளுக்கு ஒன்றாக தீம் செலக்ட் செய்தனர். அதன் மாடல் சிறய அளவில் செய்து அதையும் தயார் செய்து வைத்தனர்.

அர்ஜுன் மற்றும் அவன் சகாக்கள் எல்லோருக்கும் அவர்களின் மாடல் பற்றிய சந்தேகங்களுக்கு பதில் அளித்து ஊக்குவித்தனர்.

சுபத்ரா & கோ வின் தீம் பற்றி விசாரித்து விட்டு அதற்கு தேவையானவை வாங்க உதவி செய்தனர்.

ப்படி நாட்கள் செல்ல, போட்டி நடக்கும் நாள் வந்தது. முதலில் மார்ச் பாஸ்ட் போட்டி நடந்தது.

பிரிகேடியர், அர்ஜுன் , ராகுல் அவர்களோடு சேர்ந்த மற்ற ட்ரைனிங் கமாண்டோ அனைவரும் அமர்ந்து இருக்க, ஒவ்வொரு அணியாக வர ஆரம்பித்தனர்.

எல்லோருமே மார்ச் பாஸ்ட் மிகவும் சிறப்பாக செய்து இருந்தனர். ஆனால் குரல், கம்பீரம், அந்த வரிசை மாறாமல் வருவது இவை எல்லாம் மூன்று அணிகள் நன்றாக செய்து இருந்தனர். அதில் சுபத்ரா பங்கேற்ற அணியும் ஒன்று.

சுபத்ரா பங்கேற்ற அணியின் தலைமை அவளிடமே.. சுபத்ராவின் குரல் கணீரென்று இருந்தது அதோடு அவளின் height அவளுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்.. அங்கே இருந்த பெண்களில் அவளே அதிகமான உயரம். மேலும் அவளின் உச்சரிப்பு எல்லாருக்கும் புரியும் வகையில் இருந்ததும் ஒரு காரணம்.

அதற்கு பின் கலை நிகழ்ச்சிகளில் பெண்கள் அணி பாரம்பரிய நடனமான பரதநாட்டியம் ஆடினர். ஆண்கள் அணி பஞ்சாபி டான்ஸ் ஆடினார்.

இதை தவிர ஆண்கள் அணியில் ஒரு பிரிவினர் தமிழகத்தின் வீர விளையாட்டான சிலம்பு சுத்துதல் செய்தனர். இந்த ஐடியா கொடுத்தது அர்ஜுன். அவர்கள் விளையாட்டு என்று முடிவு செய்த போதும் சிலம்பம் ஆடலாம் என்றது அர்ஜுனின் யோசனையே.

பின்னர் ஒவ்வொரு குழுக்களும் அந்த மாடல் காண்பித்தனர். அதில் தாஜ் மஹால், பொற்கோவில், குதுப்மினார்.. மற்றும் வேறு சில monuments என்று சொல்லபடுகிற கலை வடிவங்களை செய்து இருந்தனர்.

இதில் சுபத்ரா மங்கல்யான் செயற்கை கோளின் மாடல் செய்து இருந்தாள்.

நடுவர்களாக இருந்த சீப் ஆபீசர்ஸ் இதை தேர்ந்து எடுக்க காரணம் கேட்ட போது “மற்ற வடிவங்கள் எல்லாம் வருடா வருடம் எல்லோரும் செய்வது தான். இந்த வருடத்தின் இந்தியாவின் சாதனை என்றால் அதில் முக்கியமானது இந்த மங்கள்யான் தான். அதனால் செய்தோம் “ என்று கூற, எல்லோரும் கை தட்டி பாராட்டினர்.

அன்றைய போட்டியின் முடிவில், சுபத்ரா அணி marchfast, மாடல் demon\stration மற்றும் சிலம்பம் செய்த அணி மூன்று அணிகளும் மற்ற regiment டோடு போட்டி போட தேர்ந்தெடுக்க பட்டனர், மாடல் செய்த அணியில் நிஷாவும் இடம் பெற்று இருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.