(Reading time: 2 - 3 minutes)

06.இது பேய்க் காதல் - புவனேஸ்வரி 

Love

ராமன் வாழ்ந்த பஞ்சவடியா?

கண்ணன் வளர்ந்த பிருந்தாவனமா?

என்னவனின் பாதம் பட்டதாலே

தூய்மை அடைந்தது நிலமதுவா?

என் பொறாமையை தட்டி எழுப்பவே

அவன் கேசத்தில் கலந்தது தென்றலா?

அழகிய இடத்திற்கு அழைத்து வந்தனனா? அல்லது

இவன் இருக்கும் இடமெல்லாம் அழகாகிறதா?

மயங்கிய நிலையில் தூயவிழி..!

மாறாக தயங்கிய நிலையில் தெய்வீகன்..!

 

மங்கையவள் அவன் அறையில் காத்திருக்க,

மன்னவனோ, அன்னையிடம் வாதம் புரிந்தான்.

 

"திருவிழாக்காக நான் எதுக்கும்மா

காப்பு கட்டணும்?"

மன்றாடி சில நொடி

போராடி சில நொடியென

மகனின் பிடிவாதத்தை

வென்றது அன்னையின் வாதம்..!

"குளிச்சிட்டு வந்து கட்டிக்கிறேன்!"..

 

அவன் உரைத்த இறுதி வசனம்

தூயவிழியும் செவிமடுத்த நேரம்,

அவன் விழிகள் சிந்தும் வேதனை

அதை களைவதே அவளின் பிரார்த்தனை!

 

தனிமையில் வினவினாள்

இனிய குரலில்

"யாரை டா கட்டிக்க போற,

எனக்கு பெண்ணை காட்ட மாட்டியா?"

நகைத்தாள் அவள்

பகைத்தான் அவன் விதியை!

 

நிலைமை அறிந்து

நிலம் நகரா கால்களுடன்

நிலை தடுமாறி நிற்கிறேனடீ

நடந்ததை கேளாய்!

 

கடவுளின் கடாட்சம் கிடைக்க

காப்பு அணிவிக்க வேண்டுமாம்

தெய்வம் அருள் கிடைக்க

தேவதையின் அருகாமையை பிரிவதா?

 

காற்றில் உனை எப்படி அணைப்பேன்

உன் மைவிழியை மிக அருகில் எப்படி காண்பேன்?

தெய்வசக்தி, எனதுயிர் சக்தியை தடுத்திடுமா ?

உன்னை அருகில் சேர்க்காமல்

நான் மீண்டும் தவிப்பதா?

தவிப்புடன் தெய்வீகன் உரைக்க

தூயவிழியின் பாதை எங்கு செல்லும்?

அடுத்த அத்தியாயத்தில் சொல்லுறேன்

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1072}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.