(Reading time: 2 - 4 minutes)

07.இது பேய்க் காதல் - புவனேஸ்வரி 

Love

வாழ்வின் துயரம் எல்லாம்

முன்ஜென்மத்தின் வினையாம்!

யாரை பிரித்தேன்? யாரை வாட வைத்தேன்?

காதலை உணர வைத்த தேவதை

காணலாய் மாறிடும் நிலைவர,

என்னென்ன கொடுமைகளை புரிந்தேனோ நான்?

வருந்தினான் தெய்வீகன்!

 

சோகமே உருவாய் தலைவன் இருக்க,

சங்கடம் தவிர்க்க சொல்கிறாள் தூயவிழி!

 

என்னவனே,

இறைவன் கருணையின் மறுவடிவம்!

அன்பின் திரு உருவம்!

அவனது அருளின்றியா உன் கண்களில் நான் புலப்படுகின்றேன்?

நிரந்திர பிரிவென்று நினைத்து வாடாதே

விதியும் வேதனைக் கொள்ளும் நம்மை பிரித்திட !

 

உன்னை நான் கண்டேன்,

என்னை நீ கண்டாய்!

முற்றுப்புள்ளியில் அடங்கிய காதலை

இறைவனே மீண்டும் தொடக்கி வைத்தான்!

அவனுக்கு நன்றி உரைத்திட வேண்டாமா?

 

உன் மனமெனும் மாளிகையில்

நான் பாதுகாப்பாய் இருக்கும்போது,

பக்தியின் காப்பை எண்ணி வருந்துவதும் தவறு!

சில நாட்கள் மட்டும், உனை விட்டு தூரம் நிற்பேன்!

ஸ்பரிசிக்க முடியாத தூரம் தான்.. எனினும்,

பார்க்க முடியாத தூரம் நானல்லவே!

 

என் குரலை நீ கேட்பாய்!

பதிலுக்கு நீ உரக்க பேசிடாமல் போனாலும்,

உன் அகத்தினை நான் அறிவேன்!

மனம் வாடாதே !

 

தூய எண்ணத்தில் அவள் மொழிய

தெய்வ வழியை அவனும் நம்பினான்!

கட்டிக் கொண்டான் காப்பை!

மறுநொடியே தூரமாய் தெரிந்தாள் பாவை!

 

கலங்காதே! வருந்தாதே !

இலகுவாய் இரு! இல்லையேல்,

நிரந்திர பிரிவும் நேர்ந்திடலாம்!

எச்சரித்தாள் தூயவிழி!

துடித்தான் தெய்வீகன்!

 

அழகாய் புலர்ந்தது மறுநாள்!

நீண்ட இடைவெளிக்குப் பின் ,

மீண்டும் அவளின் முத்தம் பெறாமல் கண்விழிக்கின்றான்.!

சித்தம் கலங்கியது போல அரண்டு போகிறான்!

 

நெற்றியில் பெரிய திலகமிட்டு,

கண்களில் தீவிரம் படரவிட்டு,

அருகில் வந்தார் ஒரு பெரியவர்,

அவர்களை பிரிக்க வந்தார் அந்த முதியவர்!

“தம்பி, உன்னை ஒரு ஆத்மா தொடர்ந்து வருது!

அது தெரியுமாப்பா உனக்கு?”

 

அதட்டலாய் அவர் கேட்க,

அவனிடம் பேச முடியாத தூரத்தில் தூயவிழி!

இங்கும் அங்கும் பார்த்தான்!

எங்கும் காணவில்லை அவள்!

“யோவ்! எங்கேயா என் தூயவிழி?”

ஆத்திரத்தில் அவன் உண்மையை உளறிட,

அந்தரத்தில் இனி அவன் காதல்!

அடுத்து என்ன ஆச்சுன்னு  அடுத்த வாரம் சொல்லுறேன் ப்ரண்ட்ஸ்!

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1072}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.