(Reading time: 9 - 18 minutes)

15. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

டெல்லி செல்லும் குழுவிற்கு கேப்டன் ஆக அர்ஜுன் இருக்க, அவனோடு ராகுலும் இணைந்தான். கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து dehradun அணி parade இல் கலந்து கொள்வது வழக்கமே. அதில் அர்ஜுன் கட்டாயம் இருந்ததால் அவனுக்கு அங்கே என்ன நடைமுறை எல்லாம் தெரிந்து இருக்கவே, எல்லோரையும் அதற்கு தக தயார் படுத்தி இருந்தான்.

இருபது நாட்கள் நடந்த அந்த போட்டிகளில் எதிர்பார்த்தது போல் இவர்கள் அணி எல்லோருமே தேர்வு செய்யப்பட்டனர்.

அதிலும் பெண் வீராங்கனைகள் தனி குழுவாக பங்கேற்பது இதுவே முதல் முறை.. அதற்கு தலைமை தாங்கும் பெருமையும் சுபத்ராவிற்கே வந்தது.

அவர்கள் அணியில் அனைவருக்கும் மிகுந்த சந்தோஷம்..

அர்ஜுன் தனியாக “ஹேய்.. குட்டிமா. கலக்கிட்ட போ.. இனிமேல் ஆர்மி வெப்சைட்லேர்ந்து விக்கிபீடியா வரைக்கும் உன்னோட போட்டோ போடுவாங்க.. ரொம்ப ஹாப்பி டா.. “

“தேங்க்ஸ் அர்ஜுன் சார்.. உங்களுக்குத்தான் எல்லா கிரெடிட் .. விளையாட்டுதனமா இருந்த என்னை இவ்ளோ  திறமையானவளா மாத்தினது உங்கள் கண்டிப்பும், அதே சமயம் அக்கறையும் தான்.”

அவனை அறியாமல் அவளை மனதில் எப்போதும் அழைப்பது போல் அழைத்து விட்டான். சோத்ரவும் முதல் முதலாக அர்ஜுன் என்று பெயர் சொன்னாள். ஒரு சார் சேர்த்துக் கொண்டாலும் , கேப்டன் என்றே சொல்பவள்.. அவன் பெயரை சொன்னாள்.

அவளுக்கு ரொம்ப சந்தோஷம் .. அதனால் இருவரும் என்ன பேசினார்கள் என்று உணர்ந்து கொள்ளவில்லை.

அதற்கு பின் சற்று சுதாரித்த அர்ஜுன்,

“ஹேய்.. அப்படி எல்லாம் இல்லை சுபத்ரா.. உன்னிடம் இயற்கையாகவே லீடர்ஷிப் quality இருக்கு. அதோட உன்னோட விளையாட்டு எல்லாம் ட்ரைனிங்இல் காண்பிக்கவில்லையே.. அதில் உண்மையாக இருந்தாய். அதன் பலன் உனக்கு கிடைத்தது.”

“நீங்க சொன்னா சரிதான் தலை.. “ என்றாள் அவளின் இயல்பான குறும்போடு,

“ஆரம்பிச்சுட்டியா.. சரி .. இன்னிக்கு paradeலே வர்ற நீ, வரும் வருஷத்திலே bravery அவார்ட் வாங்கணும். அதற்கான  திறமை இருக்கு.. இன்னும் கொஞ்சம் சீரியஸ் ஆ இரு.. “

“எவ்ளோ சீரியஸ் கேப்டன்.. ? ICU லே வைக்கிற அளவிற்கு போதுமா?” என,

“ஹேய்.. அடங்கு.. “ அர்ஜுன் கொஞ்சம் கடுமை காட்ட,

அவனுக்கு அழகு காண்பித்தவள்  “பின்னே என்ன கேப்டன் ? ஆள் சிக்கினா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவீங்களே... எனக்கு தூக்கம் தூக்காம வருது ?” என்று சொல்ல, அவளை பத்திரம் கட்டி மிரட்டினான்.

அவள் மேலும் அழகு காண்பித்து விட்டு ஓடி விட்டாள்.

அர்ஜுன் சிரிக்க, அவனை பார்த்த ராகுல் “ரொம்ப முத்திடுச்சுடா ..” என,

“அங்கே மட்டும் என்ன வாழுதாம்.. ? இத்தனை பேர் இருக்காங்க .. அது தெரிஞ்சும் நிஷாவோட ஆக்ரா போகலாமான்னு பிளான் போட்டுட்டு இருக்க.. ?”

“டேய் .. அது எப்படிடா கண்டுபிடிச்ச? “ என்று வழிந்தான்.

“வழியுது .. துடைச்சுக்கோ.. நீ பிளான் போட்டவுடனே.. அந்த பொண்ணு .. இங்கே வந்து சுறாவ கேட்டுடுச்சு. அவ எங்கிட்ட வந்து சார்.. போகலாமா சார்.. .லீவ் உண்டான்னு கேட்குறா..?”

“நீ என்னடா சொன்ன?”

“நான் என்ன சொல்ல.. லீவ் எல்லாம் கிடையாதுன்னு சொல்லிட்டேன்.. “

“டேய்.. ஏண்டா.. நமக்குதான் republicday முடிஞ்சவுடனே ஒருநாள் அவுட்டிங் உண்டே.. “

“அத அந்த ஓட்டை வாய் கிட்ட சொன்னால் என்ன நடக்கும்.. ?அவ மொத்த regiment க்கும் இப்போவே சொல்லிடுவா.. அது வேற எதாவது பிரச்சினைலே கொண்டு விட்டுடும்.. அப்புறம் பார்த்துக்கலாம்..”

“டேய்.. மகாராஜா.. கொஞ்சம் கருணை வைப்பா..”

“பார்க்கலாம்.. “ என்றபடி இருவரும் சென்றார்கள்..

சுபத்ரா தேர்வான விஷயம் அவள் வீட்டிற்கு தெரியபடுத்த, அவர்கள் எல்லோரும் டெல்லி வந்து சேர்ந்தனர். கொசுறாக வருணும், மகிமாவும் வந்தனர்.

குடியரசு  தினத்தன்று.. முதலில் கொடியேற்றம் நடந்தது. பிறகு முப்படை தளபதிகளும் குடியரசு தலைவருக்கு மரியாதை செலுத்தினர். பிறகு அணிவகுப்பு ஆரம்பித்தது. முதலில் சீனியர் கமாண்டோ அணிவகுப்பு முடிய, பின் இந்த வருடத்தின் புதிய அணிவகுப்புகள் நடக்க ஆரம்பித்தன. அதில் முதலில் பெண்கள் அணிவகுப்பு நடக்க, சுபத்ராவின் வீட்டினர் பெருமிதமாக பார்த்தார்கள்.

அது முடியவும் trained டாக்ஸ் parade, குதிரை வீரர்கள் அணிவகுப்பு எல்லாம் முடிந்தது. அதன் பின் ஜூனியர் லெவெலில் NCC, NSS மாணவர்கள் பங்கேற்ற அணிவகுப்பு நடந்தது.

அதுவும் முடிந்த பின் கலை நிகழ்ச்சிகளாக 26 மாநிலங்களின் புகழ் பெற்ற நடனங்கள், விளையாட்டுக்கள் குழுக்களாக நடைபெற்றது.

அதற்கு பின் tableu என்று சொல்லப்படும் இந்தியாவின் பெருமையான விஷயங்களை டெமோ காண்பிக்கும் அணிவகுப்பு நடைபெற்றது. தாஜ்மஹால், மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் மட்டுமில்லாது நமது புதிய மின்திட்டங்கள் ,  சொட்டு நீர் பாசனம் பற்றிய விளக்கங்கள் , எல்லாம் இடம் பெற்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.