(Reading time: 9 - 18 minutes)

தேங்க்ஸ்மா, “ என்று அவர்களுக்கு நன்றி சொன்னாள்

“இதுலே என்னமா இருக்கு... நாங்க வரும்போது அவங்களையும் கூட்டிட்டு வந்தோம்..” என்று எளிதாக பேசினார்.

எல்லோரும் பேசி கொண்டிருக்க, அப்போது “congrats மச்சான்ஸ்.. அப்பா , அம்மாவும் உங்க கிட்ட சொல்ல சொன்னங்கடா..” என்ற படி மிதுனும் வர,

“டேய்.. மச்சான்.. நீ வந்து இருக்கியா?  சொல்லவே இல்லியே..” என்று அர்ஜுன் வினவ, ராகுல் அவன் காதில்

“டேய் .. அந்த மகிமா வந்துர்க்கும்போதே நாமளும் இவனை எதிர்பார்த்து இருக்கணும் “ என்று பேசினான்.

அதற்குள் “மச்சான்.. அது தீடீர் ப்ரோக்ராம் தாண்டா.. அதான் உங்ககிட்ட சொல்லல “ என, அவனை அவன் நண்பர்கள் நம்பிட்டோம் என்ற ரீதியில் பார்த்தனர்,.

அதற்குள் வருண் “அர்ஜுன் சார்.. உங்களுக்கு விருது கிடைக்க காரணமே சுராதான் தெரியுமா?” என்று வினவ,

எல்லோரும் அவனை பார்த்தனர்.

“அது எப்படி வருண்?” என்றான் அர்ஜுன்..

சுராவும் “நண்பன்டா... சோடாபுட்டி .. என்னுடைய புகழாரத்தை பாட்டாக பாடுவாயாக “ என்று கூற,

“புகழாரமா இல்லயான்னு தெரியல.. மச்சி.. ஆனால்.. அறிவு கொழுந்தான உனக்கே ட்ரைனிங் கொடுத்து உன்னையும் லீடர் ஆக்கினதுலே தான்.. அதுக்கு அவர் பட்ட பாட்டுக்கு பலன் தான் அந்த விருது..” என்று முடித்தான்.. எல்லோரும் சிரிக்க, சுறா அவனை துரத்தி துரத்தி அடித்தாள்.

கிருஷ்ணன் “அர்ஜுன்.. ராகுல் உங்க வீட்டுலேர்ந்து வரலையா...?” என்று வினவ,

“அப்பா வர முடியாது அங்கிள்.. அவரே கொடி ஏற்ற போகணும்.. அம்மாதான் வரணும்.. அவங்க தனியா வர யோசித்து இருப்பாங்க.. மே பி .. இந்த அவார்ட் விஷயம் தெரிஞ்சு இருந்தா அம்மா மட்டும் வந்து இருக்கலாம்.. “

பிறகு மிதுன் தனியாக மாட்ட “அது எப்படிடா தீடீர்னு உனக்கு ப்ரோக்ராம் வந்தது.?” என்று இருவரும் அவனை போட்டு சாத்த,

“டேய்.. சொல்றேண்டா. அப்போ அப்போ நான் வருண் கிட்ட பேசுவேன்.. சுபத்ரா அப்பா, அம்மா கிட்டயும் பேசுவேன்.. ரெண்டு நாள் முன்னாடி நீங்க எல்லோரும் டெல்லி வந்து இருக்கிற விஷயம் சொல்லலாம்னா, அந்த பக்கி இங்கே கிளம்பிட்டு இருக்கேன்னு சொன்னான். மெதுவா போட்டு வாங்கி நம்ம ஆளும் வரும் விஷயத்த வாங்கிட்டு, நானும் பறந்து வந்துட்டேன்” என்று முடிக்க,

“அட போடா.. நாங்க வேற பிளான் போட்டோம்.. இங்கே எல்லாம் தலைகீழா நடக்குது.. “ என்றான் ராகுல்.

“ஆனால் .. உங்கள் அவார்ட் பார்த்தது ரொம்ப சந்தோஷம் டா... “என்றான்.

“சரி.. டெல்லி வந்தவங்க.. இங்கே எப்படிடா வந்தீங்க.. ? உன் ஜோடியோட எல்லோரையும் கூட்டிகிட்டு டெல்லி சுத்தி பார்த்து இருக்கலாம் லே..”

“நானும் அப்படிதான் மச்சான் நினச்சேன்.. சுபத்ரா தான் அவங்க அப்பாக்கு போன் பண்ணி சொல்லிட்டா.. இன்னிக்கு இங்கே வரீங்கன்னு.. அப்புறம் என்ன ? வழக்கம் போலே கூட்டத்திலே கோயில் புறா ? யாரை இங்கு தேடுதம்மா ? இது தான் நடக்கும்..”

இங்கே காதலர்கள் மூவரும் பெருமூச்செறிய, அவர்கள் காதலிக்கும் பெண்களோ எதுவும் அறியாமல் கலகலத்தனர்.

பின் கிளம்பும் நேரம் வர, எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து அப்படியே கிளம்பினர்.

மழை பொழியும்

Episode 14

Episode 16

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.