(Reading time: 9 - 18 minutes)

தோடு அறிவியலில் இந்தியாவின் பங்கான மங்கள்யான் செயற்கை கோள் மாடல் உம, அதை இஸ்ரோ setup செய்து அதில் அப்துல் காலம் அமர்ந்திருக்க, அவரை சுற்றி அதை வடிவமைத்த விஞ்ஞானிகள் அமர்ந்திருக்குமாறு டிசைன் செய்து இருந்தனர்.

அந்த வண்டி  பார்வையாளர்களை வெகுவாக கவர கைதட்டலும், அநேகம் பேர் அதை போட்டோ எடுக்கவும் செய்தனர். இந்தியாவின் சமீபத்திய சாதனை .. dehradun regiment இன் படைப்பு என்ற அறிவிப்பளரின் அறிமுகத்தோடு கொண்டு வரப்பட்டது.

பங்கேற்ற அனைவரும் மற்ற நிகழ்ச்சிகளையும் பார்க்கும் வகையில் மைதானம் அமைக்கப்பட்டு இருந்ததால், சுபத்ரா , நிஷா அனைவருக்கும் மிகவும் பெருமையாக இருந்தது.

இதற்கு பின் வீரர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. எல்லோரும் ஆச்சர்யப்படும் வகையில் youngest best commando Trainer என்ற பிரிவில் அர்ஜுன் பெயர் அழைக்கப்பட எல்லோரும் வியந்தனர். அதே பிரிவில் ராகுல்க்கும் விருது அறிவிக்கப்பட்டது. அத்தனை பேரும் மகிழ்ந்தனர்.

அன்று மாலையில் குடியரசு தலைவர் மாளிகையில் கலை நிகழ்ச்சிகள் நடை பெற, அதில் சுபத்ராவின் பரதநாட்டியம் இருந்தது. அதோடு ஆர்மி மியூசிக் பேண்ட் எல்லா இசை கருவிகளை வைத்து தேசியகீதம், சாரே ஜஹான் அச்சே, போன்ற பிரபலமான பாடல்கள் இசைத்தனர்.

அதற்கு பின் விருது பெற்றவர்களுக்கு விருந்து கொடுக்கப்பட்டது.

எல்லாம் முடிந்து அவரவர் இருப்பிடத்திற்கு திரும்பினர்.

அன்றைக்கு சுபத்ராவை பார்க்க முடியதாதால் அவள் பெற்றோர், friends டெல்லியில் தங்கி விட்டனர்.

றுநாள் காலையில் வழக்கமான பயிற்சி , breakfast முடிந்த பின் எல்லா குழுக்களும் அவரவர் ஊருக்கு திரும்பும் வேலையில் ஈடுபட்டனர். தங்கள் க்ரூப்பை அழைத்த அர்ஜுன் எல்லோரையும் ரெடி ஆக சொல்லி தாஜ்மஹால் செல்லலாம் என்று அறிவித்தான்.

“ஹோய்..” என்று கத்தியபடி சென்றனர். சுறா வேகமாக சென்று அங்கிருந்த coin பூத் போனில் தன் அப்பாவிற்கு சொல்லி விட்டாள்.

அடுத்த ஒருமணி நேரத்தில் எல்லோரும் தாஜ்மஹால் பார்க்க கிளம்பினர்.

அர்ஜுன் permission வாங்கி ஆர்மி டெம்போ van ஏற்பாடு செய்து இருந்தான். அதில் ஏறிய நொடியில் இருந்து அனைவரும் ஒரே ஆட்டம் பாட்டம் தான்.

முதலில் எல்லோரும் அர்ஜுன் , ராகுலை வாழ்த்த அவர்கள் நன்றி கூறினார்.

சுறா “தலை ... எவ்ளோ பெரிய achievement .. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. “ என்று பாராட்டினாள்.

அனைவரும் இருவரிடமும் பார்ட்டி கேட்டனர்.. பார்ட்டி பற்றி கேட்டவுடன் சுறா “where இஸ் தி பார்ட்டி”? என்று பாட்டு பாட ஆரம்பிக்க, அனைவரும் சேர்ந்தனர்.

“சரி “ என்று கூறவும் மீண்டும் ஒரே கத்தல்தான்..

தாஜ்மஹால் சென்றவுடன் எல்லோரும் தனி தனி குழுக்களாக பிரிந்தனர். ராகுல் இங்கே வைத்து நிஷாவிடம் propose பண்ண எண்ணியிருந்தான். அர்ஜுன் அப்படி எண்ணவில்லை என்றாலும், இன்னும் கொஞ்சம் சுறாவோடு நெருங்கனும் என்று எண்ணியிருந்தான்.

 அவர்கள் இருவரும் பெண்கள் இருவரையும் நெருங்கி வர, அப்போது பின்னாலிருந்து

“ஹேய்.. சுறா.. “ என்ற குரல் கேட்க, யாரடா அது என்று திரும்பி பார்த்த அர்ஜுன் ராகுல் இருவரும் முழித்தனர்.

அங்கே வந்தது சுறாவின் பெற்றோர், வருண் , மகிமா , இவர்களோடு நிஷாவின் பெற்றோரும் இருந்தனர்.

அர்ஜுன் , ராகுல் இருவரும் ஒருவரைஒருவர் பார்த்துக் கொண்டனர்.

வருண், மகிமா குரல் கேட்டவுடன் துள்ளி குதித்த சுறா,

“ஹேய்.. கீமா, சோடாபுட்டி.. “ என்று இருவருக்கும் hifi கொடுத்தாள்.

தன் அம்மாவை பார்த்த “ஹேய்.. ருக்கு.. நான் இல்லாமல் டென்ஷன் குறைஞ்சு ஒரு சுத்து குண்டாயிட்ட போலே.. டாட். வீட்டு வேலை எல்லாம் உங்கள் தலையில் தானா.. “ என்று வம்பளக்க ஆரம்பித்தாள்

அவளிடம் அவர்களும் குசலம் விசாரித்தவர்கள், அர்ஜுனை பார்த்து

“ஹலோ.. கேப்டன் அர்ஜுன், ராகுல் இருவருக்கும் congrats.. ரொம்ப பெருமையாவும், சந்தோஷமாகவும் இருக்கு”

இருவரும் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

அங்கே நிஷா தன் பெற்றோர்களை கண்டவுடன் ஆச்சரியத்தில் அவர்களை அணைத்து பேசிக் கொண்டிருந்தாள்

“அம்மா.. எப்படி வந்தீங்க.. சொல்லவே இல்லை ?”

“உன் friend சுபத்ரா அப்பா, அம்மா தான் மா எங்களுக்கும் சேர்த்து டிக்கெட் போட்டாங்க... கண்டிப்பா வாங்க.. இது எவ்ளோ பெரிய கவுரவம்.. இதை நாம நேர்லே பார்க்காமல் வேறு என்ன பார்க்க போறோம் ன்னு சொல்லி கூட்டிட்டு வந்தாங்க.. வந்ததுக்கு அப்புறம் தான் எவ்ளோ பெரிய விஷயம் நீ செய்யுறன்னு தோணிச்சுமா.. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.