(Reading time: 9 - 18 minutes)

பிரிகடியர் “ஹலோ ... friends ... நமது regiment வீரர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக பயிற்சி செய்து இருக்கீறீர்கள்... அதில் இன்றைக்கு மிகவும் சரியாக செய்த அணிகள் மூன்று .. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.. அவர்கள் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து மற்ற regiment அணிகளோடு போட்டி போட செல்ல வேண்டும்.. அந்த அணியை வழி நடத்த அர்ஜுன் மற்றும் ராகுல் இருவரும் செல்வார்கள். உங்களின் பங்களிப்பை அவர்களின் வழி நடத்தலோடு சிறப்பாக செய்ய வாத்துக்கள்.” என்று கூறி முடித்தார்.

அர்ஜுன், ராகுல் இருவரும் எல்லாரையும் பாராட்டிவிட்டு, தங்களின் கருத்துகளையும் தனித்தனியாக சொன்னார்கள்.

அவர்களின் பாராட்டின் போது சுபத்ரா “தேங்க்ஸ் ஜி.. ஆனால் மாடல் ஐடியா முழுக்க நிஷாவோடதுதான்.. நானும் monument எதாவது ட்ரை பண்ணலாம்னு தான் யோசிச்சேன்.. ஆனால் இது நல்ல ஐடியாவ இருக்குன்னு இதையே தேர்ந்து எடுத்தோம்.

“குட்.. நிஷா.. ஆனால் இப்போ நீங்க செய்தது minieture தான்.. இதையே நீங்க லைவ் சைஸ் ஆ காட்டனும்.. அதுக்கு என்ன ஐடியா வச்சு இருக்கீங்க.” என்று வினவினான் அர்ஜுன்.

“கேப்டன்.. அதுக்கு நாம கார்ட்போர்ட், தெர்மோகோல் எல்லாம் மங்கள்யான் ஓட ஒரிஜினல் சைஸ் லே செய்துடலாம்.. அதோட எனக்கு இன்னொரு ஐடியா .. என்னன்னா இந்த மாடல் ஓட நம்ம அப்துல் கலாம் அவர்களையும் மாடல் மாதிரி பண்ணினால் என்ன? “ என்று வினவினாள் சுறா..

“ஹ்ம்ம்.. பெர்பெக்ட்.. அப்படினா உங்களோட ஐடியா வ வரைஞ்சு காமிங்க.. அதுலே செக் பண்ணிட்டு நாம லைவ் சைஸ் மாடல் பண்ணலாம் “ என்றான்.

சுபத்ராவும், நிஷாவும் அதற்கு உண்டான ஆயத்தங்களில் இறங்கினர். அவர்களுக்கு உதவியாக மேலும் சில வீரர்கள் சேர்ந்தனர்.

எல்லோரும் சேர்ந்து வரைந்து காமித்த படத்தில், அர்ஜுனும் சில திருத்தங்கள் சொல்ல அதன்படி லைவ் சைஸ் செய்ய ரெடி ஆகினர் ... dehradun regiment வீரர்கள்.

டிசம்பர் முதல் வாரம் தேஹ்ரடுனில் இருந்து டெல்லி சென்றனர் .. அங்கே ஆர்மி campus தங்கினர். இந்தியாவில் உள்ள அனைத்து regiment, மற்றும் அனேக பள்ளி, கல்லூரிகளின் NCC பிரிவினர் அனைவரும் ஒன்றாக தங்கி இருந்தனர்.

போட்டி தொடங்கியது.. முதலில் சிறியவர்களுக்கான போட்டிகள் வைத்து, அதில் சிறப்பாக செய்த பள்ளியை மட்டும் இருக்க சொல்லி விட்டு மற்ற பள்ளிகளுக்கு ஊருக்கு செல்ல அட்வைஸ் செய்தனர்.

பிறகு regiment இடையேயான போட்டிகள் தொடங்கின.

மழை பொழியும்

Episode 13

Episode 15

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.