(Reading time: 11 - 22 minutes)

08. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai

                 

ண்மணியின் முகபாவத்தை ரசிப்பதற்காகவே அவளை நோக்கி வந்தான் சத்யேந்திரன். “ஸ்டார்ட் ..கேமரா.. ஆக்க்ஷன்!” என்று சொல்லாமலேயே அவன் முகத்தில் காதலெனும் உணர்வு பொங்கியது. இதுவரை எந்தவொரு வசனமும், எந்தவொரு சுகந்தமான காட்சியமைப்பும் தூண்டிடாத காதல் அவனுக்குள் கரைப்புரண்டது.

அவனது மெசேஜை  கண்மணி படித்து முடிப்பதற்குள், வெற்றி அவள் அருகில் வந்தான். வெற்றி கண்மணியின் அருகில் வந்ததும், சத்யனும் அவளை நோக்கி வராமல் நின்றிருந்தான். “ச்ச.. இவளை நெருங்குறதே இவ்வளவு கஷ்டமா இருக்கே .. இவகிட்ட என் காதலை சொல்லி நான் லைஃப்ல செட்டல் ஆகுறதுக்குள்ள … ஹும்கும்!” என்று அலுத்துக் கொண்டான் சத்யன். ஆனால் விதியோ நடப்பவை யாவும் நன்மைக்கே என்று சிரித்தது.

தன்னருகில் வந்த வெற்றி, கேட்ட ஒரே கேள்வியில் கண்மணிக்கு தலையே சுற்றியது. நண்பனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனது முகத்தையும் ஃபோனையும் மாற்றி மாற்றி பார்த்து வைத்தாள் கண்மணி.

“கண்ணு உன்னைத்தான் கேட்குறேன்! இந்திரனை பார்த்தியா? அவன் மொபைல் என்கிட்ட இருக்கு!” என்று கையில் இருந்த செல்ஃபோனைக் காட்டினான்.

“ இந்திரன் ஃபோன் உன்கிட்டயா? அப்போ இ.. இந்த மெசே” என்று சொல்ல வந்தவள், இதுவரை வெற்றியிடம் இந்த மெசேஜ் விஷயத்தைப் பற்றி சொன்னதில்லையே என்று ஞாபகம் வரவும் வாயை மூடி கொண்டாள்.

இந்திரன் யார் என்று தெரியாமல் வெற்றியிடம் இதை பற்றி சொல்ல வேண்டாம் என்று நினைத்தாள் கண்மணி. மேலும், தன் விஷயத்தில் வெற்றி எப்பவுமே சீக்கிரம் உணர்ச்சிவசப்படுவான் என்று அவளுக்கு தெரியும். அதனால் பொறுமையாய் அவனிடம் சொல்லி கொள்ளலாம் என்று நினைத்தாள் கண்மணி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

அது அனைத்தையும் தாண்டி இன்று ஏற்கனவே சத்யனும் அர்ப்பணாவும் ஒரே படத்தில் நடிப்பதாக இல்லை என்ற விஷயம் அவனுக்கு பெரும் அதிர்ச்சியாய் இருந்தது. இதில், தன் உயிர்த்தோழி இவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்திருக்கிறாளே என்று வெற்றிக்கு தெரிந்தால் அவன் இன்னும் உடைந்து போய்விடக்கூடும்! என்று அறிந்து வைத்திருந்தவள், உடனே தனது அதிர்ச்சியை மறைத்துக்கொண்டாள்.

“ அடப்பாவி… ஒரு போலிஸ் ஆபிசரோட போனையே ஆட்டய போட்டுட்டியா? வெரி பேட் வெற்றி.. போ சீக்கிரம் தேடி கண்டுபிடிச்சு கொடுத்திடு! இல்லன்னா முட்டிக்கு முட்டி தட்டிருவார் உன் ப்ரண்டு!” என்று சிரித்தாள் கண்மணி.

“தெரியாது.. பார்க்கலன்னு ரெண்டே வார்த்தையில பதிலை சொல்லாமல் இப்படி மொக்க போடுறியே கண்ணு. எனிவே, நான் அவனை தேடுறேன்.. நீ பத்திரமா இரு.. ஃபோன் கொடுத்திட்டு கிளம்பலாம்” என்றான் வெற்றி. சரியென்று கண்மணி தலையாட்டவும், ஸ்னேகமாய் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து சென்றான் வெற்றி. அவன் தன் பார்வையில் இருந்து மறையும் வரை அசையாமல் நின்றாள் கண்மணி. சத்யனும் அவள் அருகில் செல்லாமல் இருந்தான்.

அந்த ஏசி அறையில் நிறைந்திருந்த சிரிப்பு சத்தத்தையும் தாண்டி மழை எனும் காதலன் தாபத்துடன் நிலமெனும் காதலியை முத்தமிடும் சத்தம் கேட்டது கண்மணிக்கு!

தனது கேள்விகளுக்கு எல்லாம் மூளையும் மனதும் பதில் சொல்ல தவறிடும்போதெல்லாம் இயற்கைதான் அவளுக்கு ஆறுதல். “ நான் கார்பார்க்ல இருக்கேன்!” என்று வெற்றிக்கு மெசேஜ் ஒன்றை தட்டிவிட்ட பின், கொட்டும் மழையில் நனையும் உத்தேசத்துடன் அந்த அறையில் இருந்து வெளியேறி கார்பார்கிங் இடத்திற்கு சென்றாள் கண்மணி.

கொட்டும் மழை அவளின் உச்சந்தலையில் நங்கென கொட்டுவது போல இருந்தது. “ இட்ஸ் ஓகே கண்மணி ..எதுவுமே உன் கை மீறி போகல.. யோசி ..யோசி.. எங்க தப்பு நடந்துச்சு .. நீ ஏன் ராகவனை இந்திரன்னு நினைச்ச? இந்திரன் இதுக்கு முன்னாடி அனுப்பின மெசேஜ்ல இன்னைக்கு கண்டிப்பா உன் கண்ணு முன்னாடி  நிற்பேன்னு சொன்னானே! அது பொய்யா இருக்குமா? அல்லது நீதான் சரியா கவனிக்கலையா? பொறுமையா யோசி.. இங்க வந்ததிலிருந்து என்ன நடந்துச்சுன்னு மறுபடியும் யோசி!” என்று தனக்கு தானே அறிவுரை சொல்லிக் கொண்டாள் கண்மணி.

சொன்னதோடு நிறுத்தாமல் கண்மூடி நடந்ததை  எல்லாம் அகக் கண்ணில் அசைப்போட்டாள். முதலில் ராகவேந்திரனைப் பற்றி யோசித்தாள். அவன் தன்னை பார்த்து பெரிதாய் புன்னகைத்ததற்கு காரணம் தான் வெற்றியுடன் வந்ததாக இருக்குமோ? அவன் விழிகளில் சிரிப்பும் குறும்பும் இருந்தது. ஆனால் காதல்? ஒருவேளை அவன் விழிகளில் காதல் தென்படவில்லையோ?

மேலும், தானும் ராகவனும் கைக்குலுக்கி கொள்ள வேண்டிய கடைசி நொடியில் சத்யனின் கார் வந்தது. சத்யனைக் கண்டதும் வழக்கம் போல மனம் முரண்டு பிடிக்க, கண்மணி அதன்பின் ராகவன் பக்கம் திரும்பாமல் வெற்றியுடன் நின்று கொண்ட போது, ராகவன் ஏன் அவளிடம் பேச முயற்சிக்கவில்லை. அந்த அரங்கினுள் நுழையும்வரை ராகவனும் அவர்களை பின் தொடர்ந்தான்தான் .. ஆனால் மருந்திற்கும் அவன் தன் பக்கம் திரும்பவில்லையே! எனில் ராகவேந்திரன் தான் இந்திரன் என்று நினைத்தது தன் தவறுதான் என்று புரிந்தது அவளுக்கு.

லேசாய் தன் மீதே கோபம் வந்தது கண்மணிக்கு. ராகவன் தன்னை அறிமுகப்படுத்திகொண்ட போது, வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல ஒரு உணர்வு தோன்றியதே! அது பொய்யா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.