“இ..ந்..தி..ர..ன்!” என்று மிகப் பொறுமையாய் அவன் முகத்தை பார்த்து அவள் அழைக்க ஒரே ஒரு நொடி அதிர்ச்சியாய் பார்த்தான் சத்யம் . மறுகணமே,
“ எனக்கு தெரியும் .. நீ என்னை சீக்கிரமாகவே கண்டு பிடிச்சிருவன்னு! என் கண்ணம்மா செம்ம ஷார்ப் ஆச்சே!” என்று பெருமை பொங்கிடும் குரலில் சொன்னான் சத்யன். அவனது அசாத்தியமான முகபாவம் அவளை வாயடைக்க வைத்தது.
“ இவ்வளவு ஈசியா உண்மை ஒத்துக்கிட்டீங்க? நான் உங்களை ஏத்துப்பேன்னு அப்படி என்ன நம்பிக்கை ? அண்ட் இதெல்லாம் என்ன நாடக…”
“நாடகம்னு மட்டும் சொல்லிடாதே கண்மணி.. நான் நடிகன், திமிர் பிடித்தவன், பொய்க்காரன்.. இப்படி யாரு வேணும்னாலும் சொல்லட்டும்.. ஆனா நீ அதை சொல்லிடாதே ப்ளிஸ்! உலகத்துக்கு வேணும்னா நான் சத்யனாக இருக்கலாம்.. ஆனா உனக்கும் நமக்கும், நான் எப்பவும் இந்திரனாக இருக்கத்தான் ஆசைப்படுறேன்.. நான்தான் உன்னை காதலிக்கிறேன்னு நேரடியாக சொல்லாமல் போனதுக்கு பல காரணம் இருக்கு!”
“..”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...
படிக்க தவறாதீர்கள்...
“அதில் முதல் காரணம் உனக்கு சத்யனாகிய என்னை பிடிக்காது! ஒரு விஷயம் மட்டும் சொல்லு! ஒரு வேளை நான் இந்திரன்னு உனக்கு தெரியாமல் இருந்தால், இந்நேரம் என்னோடு இங்க பேசிட்டு இருப்பியா நீ?”
“..”
“உனக்கு என்னை கொஞ்சமும் பிடிக்காதுன்னு எனக்கு தெரியும்.. ஆனாலும், உன்னை நான் காதலிக்க தயங்கவே இல்லை..! காரணம் நீ வெறுக்குறது என்னுடைய பிரத்தியேக முகமான சத்யனைத் தான். எனக்குள் இருக்கும் உண்மையான இந்திரனை இல்லை ! சத்யன் நிரந்தரமானவன் இல்லை.. இதே சினிமாவில் என்னைவிட அழகானவன் திறமையானவன், வந்தால் உலகம் சத்யனை மறந்திடும்.. ஆனா இந்திரம் அப்படி இல்லை! நான் செத்தா தான் இந்திரனுக்கு மரணம்” என்று சத்யன் சொல்லும்போதே அவனது வாயை பொத்தியிருந்தாள் கண்மணி.
“ ஏன்? ஏன் இவனைக் கண்டு மனம் இளகுகிறேன்? இவன் உண்மையைத்தான் சொல்கிறான் என்று என்ன நிச்சயம் என்ற சந்தேகம் ஏன் துளியளவும் எழவில்லை?” தன்னையே கேட்டுக் கொண்டாள் கண்மணி. கண்மணியும் இந்திரனும் பேசிக் கொண்டிருக்க, இன்னொரு புறம் என்ன நடந்ததுன்னு பார்ப்போம்!
பிரமுகர்கள் மட்டுமே நுழைய முடிந்த அந்த அறைக்குள் கருப்பு நிற உடை அணிந்து கொண்டு முகத்தை முடிந்த அளவு கேப்பினால் மறைத்துகொண்டு நுழைந்த அவன், ராகவேந்திரனின் கண்களில் சிக்கினான்.
எவன் இங்கு வருவான் என்று ராகவன் கணித்திருந்தானோ, எவனை இன்று ஒருவழியாக்கிவிட விட வேண்டும் என்ற கொலைவெறியுடன் ராகவன் காத்திருந்தானோ அவன் வந்தே விட்டான்.
அந்த ஆசாமியின் பார்வை அர்ப்பணாவின் மீதே நிலைக்குத்தி நின்றது! அவளை எப்படி தனிமைப்படுத்தி தான் நினைத்ததை முடிக்கலாம்? என்று அவன் யோசிக்கும்போதே நிரூபணாவிடம் சொல்லிவிட்டு கழிவறை இருக்கும் பக்கமாய் நடந்து போனாள் அர்ப்பணா. யாருக்கும் சந்தேகம் வராதபடி அவளை முன்னே நடக்கவிட்டு, ஐந்தடிகள் இடைவெளியிட்டு அவனும் நடந்தான்.
தான் ஒளித்து வைத்திருந்த அந்த பாட்டிலை கையில் எடுத்தவன், “அர்ப்பணா” என்று அவளை அழைக்க முயற்சிக்க அவனால் பேசமுடியவில்லை. சட்டென தன் கண் பார்வை போய்விட்டது போல கும்மிருட்டு!
“ம்ம்..ம்ம்” என்று அவன் திணற அவனது முகத்தை பின்னாலிருந்து துணிவைத்து மூடி இழுத்திருந்தான் ராகவன். அந்த ஆசாமியின் முனகல் சத்தம் அர்ப்பணாவை சேர்வதற்குள் அவள் அறைக்குள் நுழைந்திருந்தாள்.
அவன் கையில் இருந்த பாட்டில் சுவரில் மோதி உடைந்து “ஸ்ஸ்” என்று சத்தம் வந்தது. அர்ப்பணா அங்கில்லை என்று உறுதி படுத்திக் கொண்டு அவனிடம் பேச ஆரம்பித்தான் ராகவன்.
“தெரியும்டா நாயே.. நீ நேத்து ஜாமீனில் வெளில வரும்போதே தெரியும் , இங்கத்தான் வருவன்னு ! என்னடா முறைக்கிற கோபம் வருதா?” என்று ராகவன் கேட்கவும், குரூரமாய் முறைத்தான் வினய்!
ராகவனி கோபக்குரலைக் கேட்டு அர்ப்பணாவுமே அங்கு வந்திருந்தாள். அதை கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தான் ராகவன்.
“உன்னை பிடிக்கத்தான்டா நான் இங்க வந்தேன்! அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுடுவேன் நினைச்சீயா? இன்னையோட உன் கதை முடிஞ்சது! என்னை மீறி என் அபியை தொட்டுடுவியா நீ?” என்று ராகவன் உருமிட, அப்படியே உறைந்து போய் நின்றாள் அர்ப்பணா. ஒரு பக்கம், வினயின் பகைக்கொண்ட பார்வை! இன்னொரு பக்கம் ராகவன்!
அவன் சொன்ன “என் அபி “ என்ற வார்த்தையில் அவள் அப்படியே நின்று விட்டிருந்தாள். “செத்தடா நீ! ஏசிட் ஊத்துறியா? ஏசிட் எப்படி இருக்கும்னு இன்னைக்கு உனக்கு காட்டுறேன்!” என்று கர்ஜித்தவன், வினயின் முகத்தை கணக்கில்லாமல் குத்தினான் . அத்தோடு நிறுத்தாமல் வினயை ராகவன் தர தரவென இழுத்து செல்ல அப்படியே ஸ்தம்பித்து நின்றிருந்தாள் அர்ப்பணா!
இன்னொரு புறம் கண்மணியும் சத்யனின் முதல் முத்ததில் ஸ்தம்பித்து தான் அமர்ந்திருந்தாள்!
என்னாச்சுன்னு அடுத்த எபிசோட்ல சொல்றேன்.
-வீணை இசைந்திடும்-
{kunena_discuss:1055}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.