(Reading time: 10 - 20 minutes)

மாம் டாக்டர்.... இதோ இங்க இருக்கற என் பையன் ஹரிக்கும், இவரோட பொண்ணுக்கும்தான் கல்யாணம்......”

“அடடா மாப்பிள்ளை சார் இங்க வந்துட்டீங்களா..... ஒண்ணும் கவலைப்படாதீங்க..... இன்னும் ரெண்டு மணிநேரத்துல தாத்தா 20/20 விளையாடற அளவு தெம்பாகிடுவார்....”, டாக்டர் பேசிக்கொண்டிருக்கும்போதே பங்கஜத்துடன் சண்டை போட்ட நர்ஸ் வந்து டாக்டரின் காதைக் கடித்தார். 

“ஏம்மா இங்க யாரும்மா கிளினிக் பத்தி தப்பா பேசினது.....”

“அது டாக்டர்..... ரொம்ப நேரமா என்ன நடக்கறதுன்னே தெரியாததால கொஞ்சம் டென்ஷன்ல ஏதோ பேசிட்டோம்.... ரொம்ப சாரி....”, பங்கஜம் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் ராமன்.

“சார் ட்ரீட்மெண்ட் நடந்துட்டு இருக்கும்போது வந்து என்ன சொல்ல சொல்றீங்க..... அவருக்கு ஷுகர், BP எல்லாம் அப்படி ஏறி இருந்தது...... நீங்க இன்னும் கொஞ்சம் தாமதமா வந்து இருந்தீங்கன்னா அது ஸ்ட்ரோக்ல கொண்டு போய் விட்டிருக்கும்... ஏதோ தாத்தா மயங்கினதுனால உடனே கூட்டிட்டு வந்துட்டீங்க.... அந்த விதத்துல அவர் மயக்கம் போட்டதே அவரோட உடம்பை காப்பாத்திடுச்சு..... இதுல அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு வாட்டி நாங்க வந்து உங்கக்கிட்ட என்ன செய்துட்டு இருக்கோம்ன்னு சொல்ல முடியுமா.... இப்போ ஒரு அரை மணி முன்னாடி வரைக்கும் அவருக்கு BP குறையவே இல்லை..... அதுக்கு தொடர்ந்து மருந்து கொடுத்துட்டு இருந்தோம்..... பேஷன்ட்டோட கண்டிஷன் பத்தி ஸ்டேபிலா தெரியாம என்னத்தை வந்து உங்கக்கிட்ட சொல்ல முடியும்.... இல்லை அவருக்கு இப்போ இது க்ரிடிகல்லா இருக்கு..... அது  க்ரிடிகல்லா இருக்குன்னு சொல்லி கூட வந்தவங்களுக்கும் BP ஏத்த சொல்றீங்களா......”, அதுவரை நட்புணர்வோடு பேசிக்கொண்டிருந்த   டாக்டர், தன் கிளினிக்கை பணம் பிடுங்கும் இடம்போல பேசியதைக் கேள்விப்பட்டு கோவத்தில் கத்தித் தீர்த்துவிட்டார். 

“அது அப்படி எல்லாம் நினைக்கலை சார்... நல்லா இருந்தவர் திடீர்ன்னு இப்படி ஆனதால என்ன ஆச்சோன்னு பதட்டம்.... அந்தப் பதட்டத்துலதான் ஏதோ தெரியாம பேசிட்டோம்.....”

“பதட்டம்ன்னா என்ன வேணும்னாலும் பேசுவீங்களா.... டாக்டர்ஸ்லயும் நல்லவங்க இருக்காங்க சார்..... எல்லாரும் பணத்துக்காக எதை வேணும்னாலும் செய்யறவங்க கிடையாது....  ஏதோ ஆயிரத்துல ஒருத்தர் தப்பு பண்ணினா அத்தனை பேரையுமே நீங்க பேசுவீங்களா.... இன்னைக்கு எனக்கு கிளினிக் கிடையாது..... ஆனா உங்களுக்காகத்தான் family கூட ஸ்பென்ட் பண்ற ஒரு நாளையும்  விட்டுட்டு இங்க வந்திருக்கேன்.... அதனால குறை சொல்லி பேசறதை நிறுத்துங்க”, என்று பேச மறுபடி ஒரு முறை அவரிடம் மன்னிப்பை வேண்டினார் ராமன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

டுத்த இரண்டு மணிநேரம் யாரும் யாருடனும் அதிகம் பேசிக்கொள்ளாமல் கழிய அனந்து தாத்தா, ‘நான் எங்க இருக்கேன்...’, என்ற வழக்கமான கேள்வியுடன் விழித்தார்.  அவர் முழித்தவுடன் சில பல டெஸ்டுகளை முடித்து, மருந்து மற்றும் அவர் என்ன சாப்பிட வேண்டும் என்ற டயட் சார்ட் எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு மறுபடி ஒருமுறை தாங்கள் பேசியதற்காக டாக்டரிடம் மன்னிப்பைக் கேட்டு, ராமனின் குடும்பமும், பத்துவின் குடும்பமும் மண்டபத்தை வந்தடைந்தனர்.     

கல்யாண மண்டபத்தை அடைந்து அங்கிருப்பவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு தாத்தாவை ரூமில் படுக்க வைத்து விட்டு எல்லாரும் சற்று ஆசுவாசமாக உட்கார்ந்தார்கள்.

“ரொம்ப தேங்க்ஸ்டா ராமா.... உன் பிள்ளையோட கல்யாணம்..... விரதம் நடந்துண்டு இருக்கு... ஆனா அதை எல்லாம் பத்தி கவலைப்படாம ஹாஸ்பிடல் வந்துட்டேளே... அதுவும் ஹரி மேடைலேர்ந்து அடுத்த நிமிஷம் அவரைத் தூக்கிண்டு போகலைன்னா என்ன நடந்திருக்குமோ.... நீ நினைச்சிருந்தா நம்ம உறவுக்காரா யாரை வேணும்னாலும் அனுப்பி இருக்கலாம்..... அதுவும் காப்பு  கட்டினப்பறம் எங்கயும் வெளில போகக்கூடாதுன்னு சொல்லுவா.... ஹரி அதைக்கூட பார்க்கலை”, கண் கலங்கியபடியே அம்புஜம் ராமனின் கையைப் பிடித்து நன்றி கூறினார்.

“என்ன அம்மங்கா இது.... உங்களை அப்படி எல்லாம் விட்டுடுவோமா..... எல்லாத்துக்கும் நம்ம மனசுதான் காரணம் அம்மங்கா....”

“நீங்களும் என்னை மன்னிச்சுடுங்கோ ராமன்.... தேவை இல்லாமல் நான் பேசினதுனாலதான் இன்னைக்கு நீங்க டாக்டர் கிட்ட பேச்சு வாங்க வேண்டியதாப் போச்சு...”, பங்கஜம் ராமனிடம் மன்னிப்பை வேண்ட.... பரசுவிற்கு லேசாக நெஞ்சுவலி வரும்போல் இருந்தது..... தன் மனைவியின் தடாலடி மாறுதலைப் பார்த்து.

“அச்சோ என்ன மன்னிப்பெல்லாம் கேட்டுண்டு..... நீங்க பெரியவா.... அப்படியெல்லாம் பேசாதேள்.... பத்துக்கு சொந்தம்ன்னா எங்களுக்கும் நீங்க அப்படித்தான்....”

“இல்லை மாமா.... பாட்டிக்கேட்டது கரெக்ட்தான்...... வயசுல பெரியவா மாதிரி அவா நடந்துக்கலை.... அந்த டாக்டர் ஏதோ நல்லவரா இருக்கப் போய் அவர் கத்தினதோட போச்சு.... இல்லைனா யோசிச்சுப் பாருங்கோ..... இதே கோவக்கார டாக்டரா இருந்து இவாப் பேசின பேச்சுக்கு அந்த நர்ஸ் அப்போவே போய் சொல்லி இருந்தான்னா பாதி ட்ரீட்மெண்ட்லையே நம்மளை வெளில அனுப்பி இருப்பா....”, கௌஷிக் சொல்ல பங்கஜம் தலை குனிந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.