(Reading time: 10 - 20 minutes)

விடுடா கௌஷிக்... பெரியவாளை அப்படி எல்லாம் பேசாத.....”, பத்து சமாதனப்படுத்த, இன்று இதற்கு ஒரு முடிவெடுத்தே ஆகவேண்டும், இவர்களை இப்படியே விட்டால் சரிவராது  என்று பேச ஆரம்பித்தான் கௌஷிக்.

“பெரியவான்னா வயசுல மட்டும் இருந்தாப் போறாதுப்பா.... நடந்துக்கற முறைலையும் இருக்கணும்.... பாட்டியோட பேச்சை அவாத்துல இருக்கறவாளே கேக்க மாட்டா.... இதுல எதுக்கு அடுத்தவாளாத்துல போய் நாட்டாமை பண்ண வேண்டியிருக்கு... நாம ஒரு ஆத்துக்குப் போப்போறோம்ன்னா அவா நம்மளை சந்தோஷமா வரவேற்கணும்..... அதை விட்டுட்டு ஐயோ இவா வராளே.... என்ன நடக்கப் போறதோன்னு பயம் வரக்கூடாது..... பாட்டி இதெல்லாம் உங்க மனசு கஷ்டப்படறதுக்காக சொல்லலை.... நான் நேரடியா சொல்லிட்டேன்.... நம்ம சொந்தக்காரா நிறைய பேர் உங்கள்ட்ட நேராப் பேச முடியாம பின்னாடி உங்களைப் பத்தி தப்பா பேசறா..... இதெல்லாம் எதுக்கு சொல்லுங்கோ..... முடிஞ்சவரை எல்லாரையும் சந்தோஷமா வச்சுக்கப் பாருங்கோ..... அதை விட்டுட்டு போற ஆத்துல எல்லாம் அங்க இருக்கறவா மனசை கஷ்டப்படுத்தாதீங்கோ....”, கௌஷிக் பேச இது பங்கஜத்திற்கு மட்டும் அல்ல, தனக்கும் சேர்த்துத்தான்..... என்று அம்புஜம் புரிந்து கொண்டார்.

“கௌஷிக் நீ சொல்றது சரிதாண்டா.... இத்தனை நாளா எல்லாரோட மனசும் கஷ்டப்படறா மாதிரிதான் பேசிண்டு இருந்தேன்.... இனிமே கண்டிப்பா மாத்திக்க ட்ரை பண்றேன்”

“ஆமாம் கௌஷிக் நீ சொன்னது பங்கஜம் மாமிக்கு மட்டும் இல்லை... எனக்கும் சேர்த்துதான்...... நானும்  மாற ட்ரை பண்றேன்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா Vயின் "உன் நேசமதே.. என் சுவாசமாய்..!!" - காதல் கலந்த குடும்பத் தொடர்

படிக்க தவறாதீர்கள்..

“ஏன் பாட்டி சோடாக்கூட இல்லாம இத்தனை பேச்சு பேசி இருக்கேனே..... எல்லாம் கேட்டதுக்கு அப்பறமும் ட்ரைதான் பண்ணுவேளா”

“ஏண்டா இதென்ன சினிமாவா.... கடைசி ஸீன்ல மாறரதுக்கு..... பிறவி குணம்ன்னு ஒண்ணு இருக்கில்லியா..... அதைக் கொஞ்ச கொஞ்சமாத்தான் மாத்திக்க முடியும்”, பங்கஜம் சொல்ல அம்புஜம் அதை ஆதரித்தார்.

“பாட்டிஸ் நீங்க அதுக்குன்னு ஒரேயடியா off ஆகி உக்கார்ந்துடாதீங்கோ.... அப்பறம் எங்களுக்கு பொழுதே போகாது...... சரி நேக்கு பசிக்கறது.... சாப்பிடப் போலாம் வாங்கோ....”, கௌஷிக் சொல்ல அனைவரும் dining hall நோக்கி சென்றார்கள்”

“லக்ஷ்மி எத்தனை மணிக்கு நிச்சயதார்த்தம்..... சாப்பிட்டுப் போய் எல்லாம் ரெடியா எடுத்து வச்சுடு...... நோக்கா ஒண்ணும் தெரியாது.....”, என்று பங்கஜம் ஆரம்பிக்க, ‘மறுபடியுமா….’, என்பது போல் அனைவரும் அவரைப் பார்த்தார்கள்.

“ஹலோ இது என்ன சொல்லி முடிக்கறதுக்கு முன்னாடியே இப்படி ஒரு ரியாக்ஷன்..... நோக்கா ஒண்ணும் தெரியாது..... அதனால கவலைப்படாத.... இனிமே நான் எல்லாம் சொல்லித் தரேன்னு சொல்ல வந்தேன்”, என்று கூற, “ஆ பாட்டி எப்படி இருந்த நீங்க இப்படி மாறிட்டேளே....”, என்று கௌரி கூற சிரித்தபடியே அனைவரும் உணவுண்ண அமர்ந்தார்கள்.

 

தொடரும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:964} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.