(Reading time: 6 - 11 minutes)

17. ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – ஜெய்

srungara seendalgal sillendra oodalgal

மக்களே ரொம்ப சாரி.... இந்த வாட்டி சின்ன அப்டேட்தான்...... அட்ஜஸ்ட் மாடி...... அடுத்த தபா சேர்த்து தரேன்..... இன்னும் இரண்டு இல்லை மூணு அப்டேட்ஸ்ல கதை முடிஞ்சுடும்..... ஸோ படிச்சுட்டு கமெண்ட்ஸ் பண்ணுங்க ப்ளீஸ்.

ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா.....

வாழ்ந்திருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா.......

ண்டா ராமா, பந்தக்கால் நடறதுக்கு சாஸ்த்ரிகள் என்னைக்கு  வரேன்னு சொல்லி இருக்கார்.  கௌரி வராளா....”

“வெள்ளிக்கிழமை கார்த்தால ஆறு மணிக்கு வரேன்னு சொல்லி இருக்கார் அம்மங்கா.  அன்னைக்கு கௌரியாத்துல சுமங்கலிப்ப்ராத்தனை அதனால அவ வர முடியாது.  ஜானகியை லக்ஷ்மி மாமி கூப்பிட்டு இருக்கா.  அதனால அவ மட்டும் போயிட்டு வருவான்னு நினைக்கறேன்”

“இங்கப் பாரு ராமா.... சொல்றேனேன்னு தப்பா நினைக்காதே.... சம்மந்தி ஆத்துக்காராளை ஓரளவுக்கு தள்ளி நிறுத்தறதுதான் நல்லது.  ரொம்ப ஈஷினோம்ன்னா அப்பறம் தலை மேல ஏறி ஆடுவா....”

“பத்துவும் சரி அந்த மாமியும் சரி அப்படி எல்லாம் இல்லை அம்மங்கா.....  ரெண்டு பேருமே ரொம்ப நல்ல மாதிரி..... கௌரி கல்யாணத்தப்போ எத்தனையோ கஷ்டங்கள் வந்தப்போ அந்த மாமாவும், மாமியும்தான் எல்லாத்துக்கும் துணையா நின்னா....”

“என்னவோ போ... நான் சொல்றதை சொல்லிட்டேன்.... அப்பறம் உன் இஷ்டம்.....”

“நாம இங்க இருந்து சத்தரத்துக்கு எப்போ கிளம்பணும்.....”

“திங்கக்கிழமை விடியக்காலை முஹூர்த்தம்... அதனால விரதத்தை முந்தின நாள் கார்த்தாலயே பண்ணிடலாம்ன்னு சாஸ்த்ரிகள் சொல்லிட்டார்.....  நாம ஞாயித்துக்கிழமை கார்த்தால ஒரு எட்டு மணிக்கு ஆத்தை விட்டு கிளம்பினா சரியா இருக்கும்”

“ஹ்ம்ம் சரி..... இங்க ஆத்துக்கு வேற யாரானும் வராளா.......”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“இல்லை அம்மங்கா.... நாம  அப்பறம் ஜானகியோட தம்பி குடும்பம்..... அவ்வளவுதான்......”

“நம்ம சொந்தக்காரா எல்லாம் சென்னைலதானே இருக்கா..... அதனால நேரா சத்தரத்துக்கே வரேன்னு சொல்லிட்டா.....”

“சரிடா.... நீ வேலையப் பாரு..... அமெரிக்காலேர்ந்து  நம்ம சீமாச்சுவோட ஃபிரெண்ட் வந்திருக்கானாம்..... அவனைப் போய் பார்த்துட்டு வரோம்”, அம்புஜம்  ராமனிடம் விடை பெற்று கிளம்பினார். 

வெள்ளியன்று காலை சாஸ்த்ரிகள் அம்புஜத்தின்  ஏகப்பட்ட கெடுபிடிகளுடன் திக்கித் திணறி பந்தக்கால் நடுவதை சிறப்பாக செய்து முடித்தார்.  ஹரி சாஸ்த்ரிகள் லாவகமாக அம்மங்காவை சமாளித்தற்காகவே அவரைத் தனியாக கவனித்தான்.

தே வெள்ளி காலை பத்து வீடு திமிலோகப்பட்டது.

“கௌரி வாசல்ல நன்னா நிறக்க பெரிசா கோலத்தை போடு... அப்படியே இங்க ஆத்தை மொழுகி புடவை கலத்துக்கும்..... பொண்டுகளுக்கு இலை போடற இடத்துலயும் மாக்கோலம் போட்டு, காவியை இடு”, அத்தங்காவின் ஆர்டரைக் கேட்ட கௌரி, வர்தா புயல் தாக்கியதைப் போல நிலை குலைந்து போனாள்.  அவளுக்கு நாலு புள்ளி, நாலு வரிசைக் கோலமே ததிகினத்தோம்..... இதில் எங்கிருந்து நிறக்க போடுவது..... தன் மாமியாரை மிகப் பரிதாபமாகப் பார்த்தாள்.

“அத்தங்கா கௌரியை பொண்டுகளுக்கு கொடுக்கற தாம்பூலத்தை எல்லாம் எடுத்து வைக்க சொல்லி இருக்கேன்.....  ஸ்வேதா போய் கோலம் போடுவா”

“லக்ஷ்மி இந்த வேலை எல்லாம் ஆத்து மாட்டுப்பொண்தான் பண்ணனும்..... எங்க மாமி உன்னை கெடுத்து வச்சிருக்கா...... நீயும் இதை எல்லாம் செய்தது இல்லை..... உன்னை மாதிரியே உன் மாட்டுப்பொண்ணயும் பார்த்திருக்க”, என்று கூற.... தன்னால் தன் மாமியார் பேச்சு கேட்க வேண்டிய நிலை வந்துவிட்டதே என்று வருந்தினாள் கௌரி.

“அப்படி எல்லாம் இல்லை அத்தங்கா..... சமையலுக்கு வேண்டியதெல்லாம் கௌரிதான் பார்த்து வாங்கி செட்டா போட்டு வச்சிருக்கா.... சமையல் மாமி வந்தா அவாப் பின்னாடியே ஓட அவளுக்கு சரியா இருக்கும்... அதனாலதான் இப்போவே பொண்டுகளோடதை எடுத்து வைக்க சொன்னேன்”, என்று கூறி கௌரிக்கு கண்ணைக் காட்டி அந்த இடத்தை விட்டு நகர சொன்னார்.

ஒரு வழியாக கௌரி தப்பித்து உள் செல்ல ஸ்வேதா கோலம் போட வாசலுக்கு சென்றாள்.  லக்ஷ்மி மாமிக்குத்தான் BP எகிறிக்கொண்டே சென்றது.

“கௌரி இங்க வா......”, அத்தங்கா கூப்பிட அடுத்து என்ன குண்டோ என்று பயந்தபடியே வந்தாள் கௌரி.....

“தாம்பூலம் எல்லாம் எடுத்து வச்சுட்டியா.....”

“ஆச்சு பாட்டி.....  வெத்தல பாக்கு தனியா  அப்பறம் புடவை மத்த நலங்கு சாமானம் தனியான்னு போட்டு வச்சுட்டேன்.... குடுக்கும்போது ஈஸியா இருக்கும் இல்லையா...”, கௌரி பெருமையாக சொல்ல, “என்ன ஈசியோ போ...  எல்லா வேலையும் நோகாம பண்ண வேண்டியது.....”, என்று அதற்கும் நொடித்தாள் அத்தங்கா.

“சமையல் மாமிக்கு எல்லாம் எடுத்துக் கொடுத்துட்டியோ.... இனிமே எதுவும் வேலை இல்லையே”

“ஆச்சுப் பாட்டி....”, இந்த முறை உஷாராக அத்துடன் நிறுத்திக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.