(Reading time: 6 - 11 minutes)

ஹ்ம்ம் சரி மடியாப் போட்டிருந்தோமே அந்தப் புடவைக்கலம் மடிசார் புடவை.  அதையும் பாவாடையும் எடுத்துண்டு வந்து மடிச்சு  அந்தக் கோலத்துல இருக்கற மணைல வை”, அத்தங்கா கூற, மறுபடி ஒரு திரு திரு முழி கௌரியிடமிருந்து வந்தது..... இந்த முறை வேறு வேலை எதுவும் இல்லாததால்  லக்ஷ்மியாலும் கௌரியைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்த முறை பரமு தாத்தா ஹெல்ப்புக்கு வந்தார்.  தன் மனையாளை ஏதோ வேலை இருப்பதாக கூடத்தின் மூலைக்கு அழைத்து சென்றார்.  கூடத்தின் நடுவில் கௌரி புடவையை வைத்துக் கொண்டு அதன் நீள அகலங்களை அளக்க, சமையலறை வாயிலில் நின்றிருந்த லக்ஷ்மி கௌரிக்கு சமிக்ஞை செய்தார். 

அதன்படி லக்ஷ்மி கையில் வேறு ஒரு புடவையை வைத்துக்கொண்டு மடித்துக் காண்பிக்க, அதையே பின்பற்றி கௌரி ஒருமாதிரி மடித்துவிட்டாள்.  அடுத்து பாவாடையும் அதேப் போல் மடித்து மணையில் வைத்துவிட்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்...

பொண்டுகள் அனைவரும் வந்து இலையில் அமர்ந்து சாப்பிட்டு முடித்து தாம்பூலம் வாங்கிக் கொள்ளும் வரை பங்கஜத்தின் ராகிங் தொடர்ந்தது.  இந்தப் பங்கஜம்  பாட்டியை சமாளிக்க நம்ம அம்புஜம்  பாட்டியை வர சொல்லி இருக்கலாம் என்று நினைத்தாள் கௌரி.... ஒரு வழியாக அனைவரும் கிளம்பி செல்ல கௌரியும், லக்ஷ்மியும் ஆசுவாச பெருமூச்சு விட்டனர். 

ஞாயிறன்று காலை இரு குடும்பமும் கிளம்பி சத்திரம் சென்று அடைந்தனர்.  ஆடி காரையும், ரோல்ஸ்ராய்ஸயும் விடவில்லை.  இரு பாட்டிகளும் தங்கள் காரில்தான் சென்றனர்.  

நாதஸ்வரத்துடன் அமர்க்கள வரவேற்பு முடிந்து விரதம் ஆரம்பித்தது.  ஒரு பக்கம் பெண் வீட்டு விரதமும், மற்றொரு பக்கத்தில் பிள்ளை வீட்டு விரதமும் நடந்து கொண்டிருந்தது. விரதம் ஆரம்பித்ததிலிருந்தே அனந்து தாத்தாவின் முகம் சரியில்லை.  விரதம் முடியும் தருவாயில் மேடையில் நின்று கொண்டிருந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். 

தொடரும்

Episode # 16

Episode # 18

{kunena_discuss:964} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.