(Reading time: 17 - 33 minutes)

26. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

ன் முன்னால் வந்து நின்ற ஜனனியிடம் என்னவென்று வினவினாள் ஜானவி…

“நான் உங்கிட்ட கேட்க வந்தா, நீ எங்கிட்ட கேட்குறீயா?...”

ஜனனி நிதானமாக ஜானவியைப் பார்த்து கேட்க, அவள் அமைதியாக இருந்தாள்…

முகம் வாடி காட்சியளித்த ஜானுவின் தோள் மீது கைவைத்த ஜனனியிடம் அவள் தன் மனதை மறைப்பதை போல தெரிந்தது…

“என்னடா என்ன ஆச்சு?... ஏன் ஒருமாதிரி இருக்குற?...”

“ஒன்னுமில்ல ஜனனி….”

ஜனனியை அவள் ஜனனி என்று அழைப்பது வெகு குறைவு… எப்போதுமே ஜன்னி என்றே அழைப்பவள், இன்று புதிதாக பெயரை சொல்லி அழைக்கவும், ஜனனி யோசித்தாள்…

“போன்ல யாரு?... தம்பியா?...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“ஹ்ம்ம்….”

“என்ன சொன்னான்?...”

ஜனனி மெதுவாக கேட்டதும், நினைவு வந்தவளாக,

“ஹே ஜன்னி… சொல்ல மறந்துட்டேண்டி…. அக்காவ மாமா ஊருக்கு கூட்டிட்டு போயிட்டாராம்… வீட்டுக்கு வந்து எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டாராம்… இப்பதான் உன் தம்பி போன் பண்ணி சொன்னாங்க…”

“நல்ல விஷயம் தான்… அவர் மனசுமாறினது சந்தோஷம் தான்… ஹ்ம்ம்… இனியாவது சரயூ அக்காவ டார்ச்சர் பண்ணாம இருக்கட்டும்…”

“ஹ்ம்ம்… அவர் திருந்திட்டார்னு தான் எனக்கும் தோணுது ஜன்னி…”

“சரி… அப்போ சந்தோஷப்படுறதை விட்டுட்டு ஏன் கவலையா இருக்குற?...”

“யாரு சொன்னா?.. நான் கவலைப்படுறேன்னு… சந்தோஷமாதான இருக்குறேன்…”

“அப்படின்னு உன் வாய் தான் சொல்லுது… ஆனா உன் கண்ணு சொல்லலை…”

ஜனனி பட்டென்று சொன்னதும், சட்டென திரும்பிக்கொண்டாள் ஜானவி…

“ஜானு… என்னாச்சுன்னு சொன்னாதான தெரியும்…”

ஜனனி சற்றே கோபத்துடனும் அக்கறையுடனும் கேட்க,

“உன் தம்பிகிட்ட எக்ஸாம் எழுதுறீங்களான்னு கேட்டேன்… கம்பெல் பண்ணாதன்னு சொல்லிட்டாங்க….”

“லூசாடி நீ?... இதுக்கா இவ்வளவு வருத்தப்படுற?..”

ஜனனி கேட்டதும், அவளை ஒரு விரக்தி புன்னகையோடு பார்த்தாள் ஜானவி…

“அவனுக்கு இஷ்டம் இல்லாத பட்சத்துல அவன் எழுதலைன்னு நீ கவலைப்படுறதுல அர்த்தமே இல்ல ஜானு…”

“……….”

“சொல்லுறது காதுல விழுகுதா இல்லையா உனக்கு?...”

“விழுது….”

“அப்புறம் ஏன் இன்னும் மூஞ்சியை தூக்கி வச்சிட்டிருக்குற?...”

“நான் ஒன்னும் தூக்கி வைக்கலையே… இங்க பாரு… ஈன்னு சிரிச்சிட்டுதான இருக்குறேன்…”

ஜானு தன் பற்கள் தெரிய சிரித்துக்காட்ட,

“பிசாசு… ஏண்டி.. சிரிச்சு பயமுறுத்துற?...”

“போடி ஜன்னி… ஜன்னி….”

“அடிங்க…” என உரக்க சொன்னவள், அடிக்க கை ஓங்க, அவளிடமிருந்து தப்பித்து ஒடினாள் ஜானவி…

ஜானவி சென்றதும், தன் செல்போனில் பதிந்து வைத்திருந்த அர்னவின் எண்களைத் தேடி எடுத்தாள் ஜனனி…

அர்னவிடம் அவள் ஓரிருமுறை பேசியிருக்கிறாள்… அதுவும் பெரும்பாலும் நலம் விசாரிப்பாகவே இருக்கும்…

ஆனாலும் அவனிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று அவள் எண்ணியதும் உண்டு… எனினும் அதற்கு தகுந்த நேரம் ஒன்று வரட்டும் என்று காத்திருந்தாள்…

அந்த நாள் வெகுவிரைவில் வரப்போகிறதோ என்ற எண்ணமும் அவள் நெஞ்சில் எழாமல் இல்லை…

விரல்கள் தானாக அவனுக்கு போன் செய்ய முயல, சட்டென்று அந்த எண்ணத்தை கைவிட்டவள், போனை இருந்த இடத்தில் வைத்துவிட்டு, தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.