(Reading time: 17 - 33 minutes)

ரண்டு நாட்கள் கழித்து, எதேச்சையாக ஜானவி அர்னவிற்கு போன் செய்ய, அவன் எடுக்கவில்லை…

என்னாயிற்று என்ற யோசனையுடன் அவள் மீண்டும் முயற்சிக்க, இம்முறை அழைப்பு ஏற்கப்பட்டது…

அதோடு அவனது வாடிய குரலும் அவளுக்கு கேட்க, அவள் பதற்றமுற்றாள்…

“கார்த்தி… என்னாச்சு?...”

அவளது குரல் பரிதவிப்புடன் ஒலிக்க,

“ஒன்னுமில்லை…” என்றான் அவன்…

“பொய் சொல்லுறீங்க… உங்க குரல் எப்படியிருக்கும்னு எனக்கு தெரியாதா?… என்னாச்சுன்னு இப்போ சொல்லப் போறீங்களா இல்லையா?...”

அவள் அக்கறை கோபத்துடன் வெளிவர,

“காய்ச்சல்…” என்றான் அவன்…

“காய்ச்சலா?... என்ன காய்ச்சல் லூசு?... ஹாஸ்பிட்டல் போனீங்களா?... மருந்து சாப்பிட்டீங்களா?...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அவள் பதட்டத்துடன் அடுத்தடுத்து கேள்விகள் கேட்க, அவன் அமைதியாய் இருந்தான்…

“சொல்லுங்க கார்த்தி… என்ன காய்ச்சல்?...”

அவளது பயம் அவனுக்கு புரிய, அதற்கு மேலும் மறைக்கவேண்டாம் என நினைத்தவன், அவளிடம் உண்மையைக்கூறினான்…

“டைபாய்டு தான்… வேற ஒன்னுமில்ல… நீ பயப்படாத…”

“என்னது???!!!.................”

அதிர்ச்சியோடு அவள் குரல் அதிர்ந்து ஒலிக்க, அவனுக்கு கஷ்டமாயிருந்தது…

அவள் வருத்தப்படுவாள் என்றுதான் அவன் மறைத்து வைத்திருந்தான்… ஆனால் இன்றோ தான் உண்மையை சொன்னதும் அவள் தவிப்பதை அறிந்து அவன் வேதனையுற்றான்…

“திடீர்னு எப்படி?.. நேத்து கூட மெஸேஜ்ல பேசினேனே… அப்போ எதுவுமே சொல்லலையே நீங்க… எத்தனை நாளா காய்ச்சல் இருக்கு?... இப்போவாச்சும் உண்மையை சொல்லுங்க… ப்ளீஸ்…”

அவள் தவிப்பும் துடிப்புமாய் கேட்க, அவனுக்கு என்ன பேச என்றே தெரியவில்லை…

பின் மெல்ல சுதாரித்தவன், “நேத்து தான் டாக்டர்கிட்ட போனேன்… அப்பதான் தெரியவந்துச்சு டைபாய்டுன்னு…”

“ஏன் லூசு நேத்தே சொல்லலை?... இப்போ எப்படி இருக்கீங்க?... சாப்பிட்டீங்களா?... டேப்லட் போட்டீங்களா?...”

அவளின் அக்கறை அவனுக்கு இதமாய் இருந்தது…

“சொல்லணும்னு தான் நினைச்சேன்… மறந்துட்டேன்… நான் எல்லாம் சாப்பிட்டேன்… இப்போ நல்லாவும் இருக்குறேன்… ஒன்னும் பிரச்சினை இல்லை…”

“டைபாய்டு வந்தா எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும்… சும்மா என்னை சமாளிக்க பொய் சொல்லாதீங்க சரியா?...”

“ஹ்ம்ம்…”

“வாமிட்டிங்க் இருக்குதா?... சாப்பிட முடியுதா?... அசதி நிறைய இருக்காம்மா?...”

கேட்கையிலே அழுகை எட்டிப்பார்த்தது அவளுக்கு…

முடிந்த மட்டும் அழுகையை முழுங்கியவள், அவனின் பதில் எதிர்பார்த்து காத்திருந்தாள்…

“எனக்கொன்னும் இல்ல… நீ பயப்படாத… வருத்தப்படாத… ரெஸ்ட் எடுத்தா நான் சரியாகிடுவேன் சீக்கிரம்…”

அவன் அவளை சமாதானப்படுத்த சொல்ல, அவள் அதனை உடும்பாய் பிடித்துக்கொண்டாள்…

“போன் பேசாதீங்க… ஆன்லைன் நீங்க வரவே கூடாது… நல்லா ரெஸ்ட் எடுக்கணும்…”

“ஹ்ம்ம்… சரி…”

“போனை வைங்க…”

“வைக்குறேன்… ஆனா நான் பேசலைன்னா நீ ஃபீல் பண்ணமாட்டல்ல?... ஆன்லைன் நான் வரலைன்னா நீ தேடமாட்டல்ல?...”

அவன் மெதுவாக கேட்க, அவள் போனை சற்று தள்ளி வைத்துவிட்டு வாய்மூடி அழுதாள்…

அவனிடம் பேசாமல் அவளால் எவ்வாறு இருக்க முடியும்?... சாத்தியமே இல்லையே கொஞ்சமும்…

பேசாமல் இருப்பதே வலி தரும்… இதில் வருத்தப்படமாட்டாய் தானே என்று அவன் கேட்டால் என்ன பதில் சொல்லிடுவாள் அவள்?...

“நீங்க ரெஸ்ட் எடுங்க… நான் வைக்குறேன்…” என்றவளின் குரலே கரகரத்துப்போயிருந்தது…  அதிலேயே அறிந்து கொண்டான் அர்னவ், அவள் அழுகிறாள் என்று….

அவன் அவளை தன்னையும் மறந்து சமாதானப்படுத்த முனைந்த நேரம், அவள் போனை வைத்துவிட்டாள் அதற்குமேலும் தாங்கமுடியாது என்றெண்ணியபடி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.