(Reading time: 17 - 33 minutes)

ர்னவ் முழுமையாக குணமாகும் வரை அவள் அவனுக்காக காத்திருந்தாள்… அவன் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என நொடிக்கொரு தரம் வேண்டிக்கொண்டாள்… அவள் வேண்டுதலின் பலனோ என்னவோ, அவன் வெகு சீக்கிரமே குணமடைந்தான்…

முப்பது நாட்கள் கடந்த பிறகு, அவள் அவனுக்கு தயக்கத்துடன் போன் செய்தாள்…

“ஹலோ…”

அவன் குரலில் பழைய தெம்பு சற்றே மீண்டு வந்திருப்பது அறிந்து நிம்மதியுற்றது அவள் மனம்…

“எப்படி இருக்கீங்க கார்த்தி?....”

“நல்லா இருக்குறேன்… நீ எப்படி இருக்குற?...”

“ஹ்ம்ம்… நல்லா இருக்குறேன்…”

அவள் வார்த்தைகள் தான் அப்படி வந்ததே தவிர, உள்ளம் இல்லை என்று தான் சொன்னது… அது அவனுக்கும் தெரியும்… எனினும் மௌனம் காத்தான்…

“டாக்டர் என்ன சொன்னாங்க கார்த்தி?...”

“சரியாகிட்டு இனி ஒன்னும் பிரச்சினை இல்லன்னு சொன்னாங்க…”

“இப்போதான் நிம்மதியா இருக்கு கார்த்தி…”

“ஹ்ம்ம்… சாப்பிட்டியா?...”

பல நாட்கள் கழித்து அவன் அவளை விசாரிக்க, அவள் மனதில் தென்றல் தவழ்ந்தது…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்...

“ஹே… உங்கிட்ட தான் கேட்குறேன்… சாப்பிட்டியா இல்லையா?...”

“சாப்பிட்டேன் கார்த்தி…”

“குட்… வொர்க் எல்லாம் நல்லா போகுதா?...”

“ஹ்ம்ம்… போகுது… ஜனனி எப்படி இருக்குறாங்க…”

“நல்லா இருக்குறா… உங்களை கூட கேட்டதா சொல்ல சொன்னா…”

“நானும் கேட்டதா சொல்லு…”

“சரி கார்த்தி…”

“ஆன்லைன் பக்கம் நீ வர்றதில்லையா?...”

“இல்ல….”

“ஏன்?...”

“வர பிடிக்கலை… அதான்…”

“அதான் ஏன்னு கேட்குறேன்…”

“யார்கிட்ட பேசுறதுக்காக நான் அங்க வருவேன்னு உங்களுக்கு நிஜமாவே தெரியாதா?....”

அவளின் கேள்விக்கான பதிலை மற்றவர்கள் வேண்டுமானால் அறியாது போகலாம்… ஆனால் அவனுடன் பேசும் சந்தர்ப்பத்தை நீட்டிக்க விரும்பியே அவள் அங்கு வருவது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்….

“தெரிஞ்சதுனால தான் கேட்குறேன்… நான் பேசலைன்னா நீ மத்தவங்க கிட்ட பேசக்கூடாதுன்னு சட்டம் எதும் இருக்கா?... நீ எப்பவும் போல இருக்கவேண்டியது தான?... எதுக்காக நீ உன் சந்தோஷத்தை எனக்காக விட்டுக்கொடுக்குற?..”

அவன் சற்றே ஆதங்கத்துடன் கேட்க, அவள் மனதும் அவனது கேள்விக்கு பதில் சொல்லத் தயாரானது வேகமாய்…

“ஆமா… சட்டம் தான்… நான் எழுதி வச்சிருக்குற சட்டம்… நான் நேசிக்குற உங்ககிட்டயே என்னால பேச முடியலைங்கிறப்போ மத்தவங்க கிட்ட எனக்கு பேச பிடிக்கலை…. இது உங்களுக்கு வேணா முட்டாள்தனமா தெரியலாம்… ஆனா எனக்கு, என் மனசுக்கு இதுதான் சரி… அப்படியே எல்லாத்தையும் மறந்து, நான் அங்க யார்கிட்ட பேசினாலும் என்னால சரியா பேசமுடியாது… தேவை இல்லாம அவங்களுக்கும் மனக்கஷ்டம் கொடுக்க நான் விரும்பலை…”

படபடவென்று பொரிந்து தள்ளினாள் அவள்…

“அப்புறம் என்ன சொன்னீங்க?... எப்பவும் போல இருக்கணுமா?... என்னால முடியலையே… அதுதான என் பிரச்சினையே… உங்களுக்கு எதுவும்னா என்னால தாங்கிக்க முடியலையே… அதிலிருந்து நான் வெளிவரவும் எனக்கு தோணமாட்டிக்குதே… பின்ன எப்படி நான் நானா இருக்க முடியும்?... உங்க கூட பேசுறது தான் என் ஒரே சந்தோஷம்… அதுவே இல்லன்னும்போது நான் விட்டுக்கொடுக்க வேறென்ன சந்தோஷம் என் வாழ்க்கையில இருக்க முடியும்?...” எனக்கேட்க அவன் வாயடைத்துப் போனான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.