(Reading time: 17 - 33 minutes)

ஜானவியைப் பார்க்க அவளது வீட்டுக்கு வந்த ஜனனி, ஜானவியின் முகத்தில் தெரிந்த பிரகாசத்தைக் கண்டு புருவம் உயர்த்தினாள்…

“என்ன ஜன்னி?... எதுக்கு அப்படி பார்க்குற?....”

“…………………..”

“ஹேய்… கேட்குறேன்லடி… அதே கண், வாய், மூக்கு, எல்லாம் அப்படியே தான இருக்கு?... அப்புறம் எதுக்குடி இப்படி பார்க்குற?...”

“வாயெல்லாம் கொஞ்சமும் குறையலை தான்… ஆனா எதோ ஒன்னு ரொம்ப பளிச்சின்னு தெரியுதே… அதை தான் யோசிச்சிட்டிருக்கேன்…”

“பளிச்சின்னா?... என்னடி சொல்லுற?... எனக்கெதுவும் புரியலையே….”

“இப்போ புரிய வைக்குறேண்டா தங்கம்… கொஞ்சம் இரு….” என்ற ஜனனி, ஜானவியின் கண்களையே உற்றுப்பார்க்க, அவள் தனது முகத்தினை மறைத்துக்கொண்டு சிரித்தாள்…

“அதான பார்த்தேன்… காரணம் இல்லாம உன் முகத்துல இப்படி ஆயிரம் வாட்ஸ் பல்ப் எல்லாம் எரியாதேன்னு நினைச்சேன்… இப்போ புரிஞ்சிட்டு….”

“என்னடி புரிஞ்சிச்சு… உனக்கு?... சொல்லு பார்ப்போம்…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்...

“ஹ்ம்ம்.. அதை என் வாயால கேட்க உனக்கு ஆசையா?...”

“சும்மா கிண்டல் பண்ணாம சொல்லுற வழியைப் பாரு ஜன்னி…”

“என் தம்பி போன் பண்ணியிருப்பான்… பேசியிருப்பான்…. அதான?...”

ஜனனி இலகுவாக கேட்டதும், சட்டென வெட்கப்பட்டாள் ஜானவி…

“என்னடி வெட்கமெல்லாம் படுற?... நீ பண்ணுறதைப் பார்த்தா எனக்கு பயமால்லடி இருக்கு?...”

“என்ன பயம் உனக்கு இப்போ?...”

கோபமாக கேட்பது போல் முகத்தை வைத்துக்கொண்டாலும், அவளது முகத்தின் வெட்கப்பொலிவு கொஞ்சமும் குறையவில்லை…

“இல்ல அடிபட்டதுல மூளை எதும் கலங்கிடுச்சோன்னு யோசிக்குறேன்… அதான் பயம்…”

“போடி ஜன்னி… அதெல்லாம் எதுவும் இல்ல… இப்போதான் தெளிவா இருக்குறேன்…”

“பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையேடி ராசாத்தி….”

“உனக்கு அதெல்லாம் தெரியாது… விடு விடு….”

வெகு சாதாரணமாக புன்னகைத்துக்கொண்டே சொன்ன ஜானவியை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் ஜனனி…

“அய்யோ… மறுபடியும் எதுக்குடி இப்படி பார்க்குற?... எனக்கு ஒரு மாதிரி இருக்குது?...”

“இல்ல ஜானு… நானும் உன் முகத்துல பல தடவை, தம்பியால சந்தோஷத்தைப் பார்த்திருக்குறேன்… ஆனா இன்னைக்கு நான் பார்க்குற சந்தோஷம் அதை எல்லாத்தையும் ஓரங்கட்டிடுச்சுன்னு நினைக்குறேன்… நான் சொல்லுறது சரிதானா?...”

ஜனனி, ஜானவியின் கண்களைப் பார்த்துக்கொண்டே கேட்க, அவள் நாணி கீழே குனிந்தாள்…

அவளின் தாடையைப் பிடித்து நிமிர்த்திய ஜனனியிடம், “நான் ரொம்ப சந்தோஷமா இருக்குறேன் ஜன்ன்ன்ன்னீனீனீனீ…………….” என அவளைக் கட்டிப்பிடித்து கத்தினாள் ஜானவி…

“பிசாசே… விடுடி…”

செல்லமாக கோபிப்பது போல் கோபம் கொண்டு விலகிய ஜனனி அவளை அடிக்க கை ஓங்கினாள்…

“நீ இப்போ என்னை அடிக்க முடியாதே… எனக்குத்தான் அடிபட்டிருக்கே….”

அடிபட்டதைக் கூட சிரித்துக்கொண்டே ஜானவி கூற,

“எப்பவும் இப்படி சந்தோஷமாவே இருக்கணும்டா நீ… சரியா?...” என சொல்லிக்கொண்டே, ஜானவியின் முகம் பற்றி திருஷ்டி கழித்தாள் ஜனனி…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.