(Reading time: 9 - 17 minutes)

சுபத்ராவிற்கு நிஷாவின் மன ஓட்டம் புரிந்தது. ராகுல் முகத்தை வைத்து அவன் எண்ணவோட்டமும் புரிந்து கொண்டாள். சற்று அவர்களை ஓட்ட எண்ணி

“நிஷா.. போட்டு தாக்கிட்டியே .. உனக்குள்ள இப்படி ஒரு பாசமலர் சாவித்திரி ஒளிஞ்சிருக்கான்னு எனக்கு இன்னிக்குதான் புரிஞ்சது.. “

“ஹேய்.. என்னடி சொல்ற.. ஒன்னும் புரியல...”

அர்ஜுன்’க்கு புரிந்து விட்டது.. ஆஹா நம்மாளு ஓட்ட ஆரம்பிசுட்டாளே.. இனிமே எல்லோரையும் மொத்தமா damage பண்ணிட்டுதான் விடுவா..

“கேப்டன் ஜி.. இப்போ உங்கள் உடன் பிறவா சகோதரிக்காக ஒரு பாட்டு பாடவா.?” என்றவள்

“மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்.. அண்ணன் வாழ வைப்பான் என்றே அமைதி கொண்டாள்”

இப்போ கொஞ்சம் நிஷாவிற்கு புரிந்தது..

“அடியேய். சுறா .. கொஞ்சம் அடக்கி வாசி.. எனக்கு எப்போவுமே கேப்டன் கிட்ட பேசும் போது secured ஆஹ பீல் பண்ணுவேன்.. அதான் அவர அண்ணான்னு சொன்னேன். அதுக்காக என்னை ஓட்ட ஆரம்பிசுடியே...” என்று அடித்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“அது சரிதான் நிஷா.. பாமிலி விட்டு தனியா இருக்கும்போது நம்ம மேலே அக்கறை காட்டுரவங்கள பார்த்தா நம்ம பாமிலி மாதிரித்தான் தோணும். அதான் நீ நம்ம ஆர்மி ட்ரைனிங் கேம்ப் உள்ள எல்லாரையும் ஒரு சகோதர பாசத்தோட பார்க்கிற அப்படிதானே?” என்று போட்டு வாங்கினாள்.

இந்த விளக்கத்தை கேட்ட ராகுலின் முகம் விளக்கெண்ணை குடித்தது போல் ஆகி விட்டது. அவனும் அதை காண்பிக்காமல் இருக்க பெருமுயற்சி செய்தாலும் ஒன்றும் நடக்கவில்லை.

சுராவின் கேலிக்கு பதில் சொல்லிக் கொண்டே ராகுலை கவனித்த நிஷாவிற்கு அவன் முகமாற்றம் ஒருபக்கம சிரிப்பாக இருந்தாலும் , இன்னொரு பக்கம் அவனை சரி பண்ணும் ஆசையும் தோன்றியது.

சுராவிடம் “ஹேய்.. நான் அர்ஜுன் அண்ணாவ நீ சொன்ன காரணத்துக்காக மட்டும் அண்ணா சொல்லல....” என்று கேப் விட, ராகுல் ஆவலாக நிமிர்ந்தான்.

சுறா “அப்புறம் என்ன காரணம் சஹியே?” என்று வினவினாள்.

சற்று தயங்கிவிட்டு “என் வருங்கால கணவரின் friend எனக்கு அண்ணா முறைதானே ஆகணும். அதுதான் அப்படி அழைத்தேன்.. “

நிஷாவின் இந்த பதில் ராகுல், அர்ஜுன் இருவரின் முகங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சுராவிற்கு புரிந்தாலும் வேண்டுமென்றே,

“ஒஹ்.. அப்படின்னா உங்க வீட்டுலே பார்க்கிற மாப்பிள்ளை .. கேப்டன் ஓட friend ஆஹ ?” என,

நிஷா வெறியாகி “அடியேய்.. உன்னை கொன்னே போட்டுடுவேன்.. தேவை இல்லாமல் வம்பு இழுக்காத..” என,

அர்ஜுன் “ஹேய்.. நிஷா.. நீ அவளை விடு.. congrats மா.. உன்னோட சாய்ஸ் நிச்சயம் தப்பா போகாது,, அதுக்கு என்னாலே நூறு சதவீதம் உறுதி கொடுக்க முடியும்.. & மச்சான்.. வாழ்த்துக்கள் டா.. நீ நினைச்ச வாழ்க்கை உனக்கு அமைய போகுது... என்ஜாய் மச்சி..”

இருவரும் அர்ஜுன்க்கு நன்றி கூற, சுராவோ நிஷாவின் கன்னத்தில் முத்தமிட்டு இரு ஆண்களையும் பொறாமையில் தள்ளி விட்டாள் ..

“ஹேய்.. நிஷா.. சரியான முடிவு எடுத்து இருக்க.. நிச்சயம் உன் ஆசைப்படி உன் வாழ்க்கை நல்லா இருக்கும்.. ராகுல் அண்ணா.. congrats.. என்னடா நான் இப்போ பாசமலர் ஓட்டறேன்ன்னு பார்த்தீங்களா..  அது சூப்பர் டூப்பர் ஹிட் படம் .. எத்தனை தடவை ஓட்டினாலும் ஹிட் ஆகும்.. என் friend ஓட வூட்பி என்னுடைய அண்ணா.. அதான்..”

அர்ஜுன் “சரி சரி. உன்னோட மொக்கை போதும்.. அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் ப்ரீயா பேசிக்கட்டும்.. நாம ரெண்டு பேரும் அப்படியே கொஞ்ச நேரம் ட்ரைன் குள்ளே ஒரு வாக் போயிட்டு வரலாம் வா..” என்று அழைத்தான்.

“மச்சான் தேங்க்ஸ் டா.. தங்கச்சி உனக்கும் தேங்க்ஸ் மா..”

“எதுக்கு.. உன்னை தனியா விட்டுட்டு போறோம்னா.. ப்ரீயா பேச மட்டும்தான் செய்யணும்.. ஏதாவது சில்மிஷம் பண்ணா, வந்து மிலிடரி ரூல்ஸ் படி டிஷ்யூம்..டிஷ்யூம் தான் .. நியாபகம் வச்சிக்கோ.. “ என்றபடி வெளியேறினான்..

“ஹேய்.. நிஷா.. ரொம்ப ஹாப்பி ஆஹ இருக்குடா... நான் நேத்து பூரா பயந்துட்டே இருந்தேன்.. அவசரப்பட்டு விட்டேனோ ன்னு. இன்னிக்கு அதுக்கு சேர்த்து வைத்து சந்தோஷபடுதிட்ட.. தேங்க்ஸ் மா..”

“தேங்க்ஸ் நான்தான் சொல்லணும்.. உங்களுக்கு என்னை பிடிச்சதுக்கு.. “

“ஹேய்.. என்னை ராகுல்ன்னு கூப்பிடு.. இல்லை வேற எப்படி short & ஸ்வீட் அஹ கூப்பிட இஷடமோ அப்படி கூப்பிடு நிஷு செல்லம்..”

நிஷா அழகாய் தலை சரித்தபடி “ரகு என்று அழைக்கவா?” என வினவ,

ராகுலின் முகத்தில் உற்சாகம் வழிந்து ஓடியது..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.