(Reading time: 8 - 15 minutes)

09. சிவன்யா - ஆதித்யா சரண்

Shivanya

ட்சுமியின் மடியில் படுத்துக் கொண்டு அழுதுக் கொண்டிருந்தாள் சிவன்யா.அவளால் மகேஷின் உண்மை முகத்தை சிறிதும் நம்ப முடியவில்லை.

"அழாதீங்கம்மா!"-லட்சுமி எவ்வளவோ சமாதானம் செய்தும் அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

"பணத்துக்காக..அண்ணா...இப்படியெல்லாம்?"-வார்த்தைகள் தடுமாறின.

"மூணு பேரோட வாழ்க்கையை அழிச்சிட்டாரா!அதுவும்...அவர் யாரை உயிரா நினைத்தாரோ அவங்களை.."

"சிவன்யாம்மா!நீ பயப்படாதீங்க!உங்களுக்கு உங்க அண்ணனால எந்தப் பிரச்சனையும் வராது!"

"எப்போ நான் அவருக்கு என் சொத்தால தான் தேவைப்படுறேன்னு தெரிந்ததோ அப்போவே நான் செத்துட்டேன் லட்சுமி!"

"மா!"

"எனக்கு இப்போ திவாகரோட காதல் மேலே சந்தேகம் வருது!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

"ஐயோ!என்னம்மா?திவாகர் தம்பி அப்படி எல்லாம் உங்களை ஏமாற்ற மாட்டார்!நீங்க தேவையில்லாம மனசை குழப்பிக்காதீங்க!"-அவள் நம்ப மறுத்தாள்.மகேஷின் துரோகம் அவளை திவாகரின் காதலையும் சந்தேகிக்க தூண்டியது.

"ஏ..!"-ஏதோ அசரீரி இருவருக்கும் கேட்டது.

"நாளைக்கு அந்த துரோகி இங்கே வரான்!நாளையோட எல்லாம் முடியப்போகுது!உயிர் மேலே ஆசை இருந்தா இங்கிருந்து கிளம்பி போயிடு!இல்லை..உன் அண்ணன் சாகுறதுக்கு முன்னாடி உன்னை கொன்னுடுவேன்!"-அந்த குரல் மறைந்தது.

"சிவன்யாம்மா இங்கிருந்து போயிடலாம்மா!"

"இல்லை!என் அண்ணனுக்கு எதுவும் ஆக கூடாது!"

"என்னம்மா சொல்றீங்க?அவர் உங்க வாழ்க்கையை சீரழிக்க நினைத்தவர்!"

"உண்மை தான்!ஆனா,நான் அப்படி நினைக்கலையே!"

"............"

"என்ன ஆனாலும் சரி!என் அண்ணனுக்கு எதுவும் ஆக விட மாட்டேன்!"

திவாகரின் உடல் சோர்ந்திருந்தது...

அவனால் தன் கண்களை திறக்கக் கூட இயலவில்லை.அந்த மெத்தையில் சோர்ந்துப் போய் சாய்ந்திருந்தான் அவன்.

"உனக்கு என்ன வேணும்?உனக்கு நடந்தது துரோகம் தான்!அதுக்காக என் சிவன்யாவை நீ காயப்படுத்துறது நியாயமில்லை!"-முனகினான் அவன்.

"உன் சிவன்யாவா??"-உரக்க கத்தியது எதிரிலிருந்த அசோக்கின் ஆன்மா.

"ஆமா!இனி அவ உன் சிவன்யா தான்!என்னால இனி அவக்கூட வாழ முடியாது."

".............."

"அவளை பத்திரமா பார்த்துக்கோ!ஏதோ சூழ்நிலையில அவ மனசு வேதனைப்பட்டதுன்னா,நான் உன்னை கொன்னுடுவேன்!இப்போ நான் சொல்றதை கவனமா கேளு!"

"..............."

"நாளைக்கு மகேஷ் இங்கே வரான்!மகேஷை கொல்லணும்னா எங்களுக்கு நிச்சயமா ஒரு உடல் தேவை!அதுக்காக நாங்க உன்னை பயன்படுத்துவோம்!ஆனா,எனக்கு அவனை கொல்றதுல விருப்பமில்லை.அவன் செய்த அதே தப்பை நான் செய்ய விரும்பலை!"-திவாகர் கேள்வியாக பார்த்தான்.

"ஒரு ஆத்மா வேற ஒரு மனுஷனோட உடலை கட்டுப்படுத்த முதல்ல அவனோட பயத்தை தனக்கு சாதகமாக்கும்!நீ செய்ய வேண்டியது எல்லாம் கார்த்திக் உன் மூலமா மகேஷை கொல்ல முயற்சி பண்ணும் போது,நீ உன் நிலையை இழக்காம இருக்கணும்!அது ரொம்ப கஷ்டம்!நீ மனவுறுதியோட கார்த்திக்கை எதிர்த்து நின்னா,அவனால உன்னை கட்டுப்படுத்த முடியாது!உன்னை விட்டு அவன் வெளியே வந்து தான் ஆகணும்!அதுதான் நீங்க தப்பிக்க சரியான சந்தர்ப்பம்!ஏன்னா,எங்களோட எந்த சக்தியும் இந்த வீட்டை தாண்டி பயன்படாது!நீங்க உடனடியா இங்கிருந்து வெளியேறணும்!நான் சொல்றது புரியுதா?"

திவாகருக்கு அசோக்கை எந்த நிலையில் வைப்பது என்றே புரியவில்லை.தன்னை கொன்றவனை,தன் காதலை கொன்றவனை,தன் நம்பிக்கையை கொன்றவனை காக்க அவன் எடுக்கும் முயற்சி உண்மையில் அவனை பிரமிக்க வைத்தது.

"நாளையில இருந்து உனக்கு விடுதலை!அதுக்கு மேலே உனக்கு எங்களால எந்த தொந்தரவும் இருக்காது!நீ சந்தோஷமா வாழலாம்!சிவன்யாவை சந்தோஷமா வைத்துக்கோ!அவ அழக்கூடாது.ஞாபகமிருக்கட்டும்!"-அவன் உருவம் மறைந்து போனது!!

திக்கற்ற நிலையை உணர்ந்தான் திவாகர்.

நாளை என்ற விடியல் அவன் வாழ்வில் என்ன செய்ய துடிக்கிறது என்பதே புரியாமல் போனது அவனுக்கு!!ஒருவேளை அவனால் சுயநினைவு பெற முடியாமல் போனால் அனைத்தும் நாசமாவது உறுதி!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.