(Reading time: 8 - 15 minutes)

றுநாள் காலை....

"சிவா!எங்கே இருக்கே?"-தனது மரணத்தை தேடி தானே வந்தான் மகேஷ்.

"சிவன்யா!"

"............."

"சிவா!"

"சிவன்யா இங்கே இல்லை!"-அதிகாரமாய் ஒலித்தது திவாகரின் குரல்.

"எங்கேடா போனா??"

"அவளுக்கு இந்த இடம் பிடிக்கலையாம்!போயிட்டா!"

"என்னடா சொல்ற?இது அவளுக்கு பிடிக்கலையா?ஏன்?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மன முடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்..

"3 உயிர்களை அநியாயமா கொன்னு புதைத்த இந்த வீட்டில அவ இருக்க விரும்பலை!"-அவனுக்கு பகீரென்றது.

"என்னடா உளர்ற?"-திவாகர் நிமிர்ந்து அவனை பார்த்தான்.

"என்னடா?எல்லாத்தையும் மறந்துட்டியா??அன்னிக்கு துடிக்க துடிக்க என்னை கொன்னியே!ஞாபகமில்லை?"

"திவா!என்னடா உளர்ற?"

"திவாகர் இல்லை!என்னை நல்லா பாரு!"-மகேஷ் சற்றே அவனை உற்று பார்க்க ஒரே நொடியில் கார்த்திக்கின் முகம் அவனுக்கு தெரிந்தது.

பதறிப்போய் பின்னால் நகர்ந்தான்.

"முடிஞ்சிடும்னு நினைத்தியா?முடியலை...உன்னை கொல்லாம அது முடியாது!"

"கா....ர்..த்திக்!"

"ஆ..கார்த்திக் தான்!4 வருஷத்துக்கு முன்னாடி இதே வீட்டில கொன்னியே அதே கார்த்திக் தான்!"

"இது எப்படி நடக்கும்!நீ..செத்துட்ட!"

"தப்பு பண்ணிட்ட!ஒரு மனிதனை விட ஆத்மாக்கு சக்தி அதிகம்!என் நண்பனை,என்னை கொன்னதுக்கு பலன் அனுபவிக்க வேணாமா!அதுக்கு தான் வந்திருக்கேன்.உன் மரணமா வந்திருக்கேன்!"

"இதோ பாரு!என்னை விட்டுவிடு!"

"நாம தான் உயிருக்கு உயிரான நண்பர்களாச்சே!அதான் வா!நீ இல்லாம எனக்கு இருக்க பிடிக்கலை!போயிடலாம் வா!"-மகேஷ் பதறியப்படி அங்கிருந்து ஓட,அவனை தடுக்க அக்னி வளையம் ஒன்று கார்த்திக்கால் உருவானது.

"உன்னால எங்கேயும் ஓட முடியாது!நீ இன்னிக்கு சாக தான் வேணும்!"-கார்த்திக் அவனை நெருங்க திடீரென அவனது உடலில் ஒரு வித வலி ஏற்பட்டு அவனை தடுத்தது.அவ்வில்லத்தில் தனக்கென உரிய சிவலிங்கத்தின் முன் நின்றிருந்த சிவன்யா மஹா மிருத்யுன்ஜெய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தாள்.

அம்மந்திரத்தின் தீக்ஷணம் கார்த்திக்கின் ஆன்மாவை பலமிழக்க வைத்தது.லட்சுமி பயத்தோடு நடப்பவற்றை எட்டி பார்த்தாள்.

அந்த மூன்று ஆன்மாவாலும் அந்த மந்திரத்தின் சக்தியினை தாங்க இயலவில்லை.

"இதுதான் சரியான சமயம்!திவாகர் மாயையில இருந்து வெளியே வா!"-மௌனமாக அசோக் கூற,அது திவாகரின் மனதினை தூண்டிவிட்டது.

இறைவனின் துதி,திவாகரின் வைராக்கியம் இரண்டும் அவன் உடலில் இருந்து கார்த்திக்கின் ஆன்மாவை பிரித்து விரட்டியது.சோர்ந்து போய் விழுந்தான் திவாகர்.இதை சற்று தூரத்தில் இருந்து பார்த்த அசோக் மனதில் இருந்த கோபத்தை எல்லாம் துறந்து அங்கிருந்து மறைந்து போனான்.வேறு வழியில்லாமல் மீதமிருந்த இரு ஆத்மாவும் வெளிச்சத்தை நோக்கி நகர்ந்தன.சோர்ந்திருந்தவனை காணும்போது மனதில் பயம் பரவியது மகேஷூக்கு!!எனினும்,மெல்ல அவனருகே வந்தான் அவன்.

"திவா!"

"............"

"டேய்!"-அவ்வளவுதான் சட்டென அவனது நெஞ்சில் இறங்கியது கூர்மையான ஒரு கத்தி.

"ஆ...!"-இதை பார்த்த லட்சுமி அலற,சத்தம் கேட்டு ஓடி வந்தாள் சிவன்யா.

"அண்ணா!"-துடித்துப்போனாள் அவள்.

"இது நீ பண்ண நம்பிக்கை துரோகத்துக்கு!"-என்றவன் மீண்டும் மயங்கி விழுந்தான்.

அரை மயக்கத்தில்,எந்த தங்கையை பணத்திற்காக கொல்ல நினைத்தானோ அதே தங்கையின் மடியில் அவனது உயிர் பிரிந்தது.

ரண்டு வருடங்களுக்கு பின்,

கடந்த காலத்தை எண்ணி கண்ணீர் சிந்திக்கொண்டிருந்த சிவன்யா தன் கண்களை துடைத்தாள்.

சட்டென உறுதியான இரு கரங்கள் தன்னை பின்னாலிருந்து அணைத்துக்கொள்ள பதறிவிட்டாள்.

"சிவன்யா!"

"ப்ச்...என்ன நீங்க?விடுங்க!"

"என்ன இங்கே தனியா இருக்க?அங்கே நம்ம பையன் அழுதுட்டு இருக்கான்!"

"அழுதுட்டு இருக்கானா?லட்சுமி என்ன பண்ணிட்டு இருக்கா?இதோ நான் போய் பார்க்கிறேன்!"-என்று விலகியவளை சட்டென பிடித்து இழுத்தான் திவாகர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.