(Reading time: 12 - 24 minutes)

"ன்னிக்கு தப்பிச்சிட்டா!இன்னிக்கு முடியாது!கவலைப்படாதே..!கொஞ்ச நேரத்துல பழியை தீர்த்துட்டு உன் பின்னாடியே அனுப்பி வச்சிடுறேன்!"-என்றவன் சற்றும் தாமதிக்காமல் ஆதித்யாவின் வயிற்றில் குத்தினான்.

அவன் உடலில் கத்தவும் தெம்பில்லை.அதிர்ச்சியாக அவன் ராகவை பார்க்க அவன் மீண்டும் குத்தினான்.

"ரொம்ப வலிக்காது!சீக்கிரமே உயிர் போயிடும்!நீ சாகுற வரைக்கும் இங்கே தான் இருப்பேன்.பயப்படாதே!!"

"டேய்!இவனை இந்த நதிக்கரையில போயிடுங்க!பாவம்...!இந்த நதின்னா இவனுக்கு ரொம்ப பிடிக்கும்!"-அவன் கூற,சில நிமிடங்களில் நதிக்கரையில் வீசப்பட்டான் ஆதித்யா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

யாத்ரா தன் கரத்தினால் ஏற்றிய தீபங்கள் யாவும் அணைந்துப் போயின.அதை பார்த்தவள் திடுக்கிட்டுப் போனாள்.

"இறைவா!!என்ன இதெல்லாம்??எதுக்காக இந்த தீபம் எல்லாம் அணைந்தது?அப்படின்னா...அவருக்கு??"-அவள் மனம் பதைபதைத்தது.

"இல்லை....அவருக்கு எதுவும் ஆக கூடாது!"-என்றவள் இறைவன் முன் அமர்ந்தாள்.கரங்கள் இரண்டையும் குவித்தவள்,

"எங்களை தயவுசெய்து பிரிக்காதீங்க!என்னால அவர் இல்லாம வாழ முடியாது!எனக்கு இப்போ இருக்கிற ஒரே ஆறுதல் நீங்க மட்டும் தான்.அவருக்கு பாதுகாப்பை கொடுங்க!"-மனதில் எண்ணியவள் தன் கண்களை இறுக மூடி தியானித்தாள்.

மனிதன் எவ்வளவு தான் வழிபாடுகளை புரிந்தாலும் காலத்தின் கட்டாயம் மாற்றம் கொள்ளுமா??

காலத்தினால் வகுக்கப்பட்டவைகளை இறைவன் தான் மாற்றி அமைப்பாரா??தனது சொந்த தனிப்பட்ட இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ள மனிதனானவன் இறைவனை பிராத்தனை செய்கின்றான்.ஆனால்,வேண்டியவைகள் அனைத்தும் ஈடேற வேண்டும் என்பது எவ்வகையில் நியாயம்??இறைவன் உருவாக்கிய முடிவுகள் யாவும் தவறாகவோ,மாயையாகவோ நிச்சயம்  இராதல்லவா???

அந்த வனத்தில் இறைவன் முன் படர்ந்திருந்த நாகவில்வ கொடி காற்றின் மூலம் அறுக்கப்பட்டு,அதே காற்றின் மூலம் பைராகி நதியில் விழுந்தது.பைராகி தேவியானவள் தன் போக்கினை உக்கிரமாக்கி அக்கொடியானது பயணிக்க ஏற்பாடு செய்தாள்.பாறைகள்,பாதைகள் எதிலும் சிக்காமல் அக்கொடியானது மிக விரைவாக வந்துக்கொண்டிருந்தது.

ங்கே ஆதித்யாவின் பிராணன் இன்னும் சற்றே தேகத்தோடு ஒட்டி இருந்தது.

மரண தேவியானவள் அவனது பிராணனை விண்ணுலகம் அழைத்து செல்ல காத்துக் கொண்டிருக்க,

சரியாக அச்சமயம் அவன் நாசியை தாக்கியது நாகவில்வம்!!அவன் ஒருமுறை பலமாக இரும்ப,அவன் வாய்குள் சென்றது நாகவில்வத்தின் வீரியம் தாங்கிய பைராகி நதியின் நீர்!!!இது என்ன காத்திருந்து உயிர் பறிக்க வந்த மரணதேவியை இறைவனின் திரிசூலம் தான் முன்னேற விடாமல் தடுத்ததா??

அந்த மயக்கத்திலே இயன்றவரை நதிநீரை குடித்தான் ஆதித்யா.

ஆயிரம் ராஜநாகத்தின் விஷத்தை முறிக்கும் நாகவில்வம் அரை அடி கத்தியில் தடவிய நஞ்சினை முறிக்காமலா போகும்??

"டேய்!அந்த கோட்டைக்கு போ!"-என்று ராகவ் காரில் ஏறி,அந்தக் கார் கிளம்ப,அந்த வாகனத்தை முன்னேற விடாமல் முன் வந்து நின்றது ஆதித்யாவால் வீசி எறியப்பட்ட திரிசூலம்!!திடுக்கிட்டு போய் அவன் இறங்க,அருகிலிருந்த பல திரிசூலங்களில் ஒன்றை பிடித்து எழுந்து நின்றான் அவன்.

அவன் பார்வையில் துளியும் இரக்கமில்லை.

"ஏ...நீ..நீ...எப்படி?"

"விஷத்தை ஏற்றிட்டா செத்துடுவேனா??மறுபடியும் திரும்ப பிறந்தது பகையை தீர்த்துக்கிறதுக்காக!!இந்த வாழ்க்கை இறைவனால கொடுக்கப்பட்டது.அவனுக்கு மட்டும் தான் எடுக்க உரிமை இருக்கு!இப்போ வாடா!"

"................"

"என் யாத்ரா வேணமா உனக்கு?அவ என்னுடையவள்!என்னை மீறி ஒரு துரும்புக் கூட அவ மேலே படாது!"-அவன் பேசிக் கொண்டிருக்கும் சமயம் அவனை தாக்க வந்த ஒருவனை கரம் ஏந்திய திரிசூலத்தினால் குத்தினான் ஆதித்யா.தன் சட்டையை கழற்றி காயத்தில் இறுகக் கட்டினான்.

"சிவபெருமானோட ருத்ர தாண்டவத்தை நேரில் பார்த்திருக்கியா??இப்போ பார்ப்ப!!"என்றவன் அடுத்தடுத்து வந்த இருவரை பலமாக தாக்கினான்.

பைராகி நதி ஆக்ரோஷமாக பாய்ந்துக் கொண்டிருந்தது.உடன் துணைக்கு வந்தவர் யாவரும் மண்ணில் வீழ,தனித்து நின்றான் ராகவ்.

கண்கள் சிவக்க மீண்டும் ஆதித்யாவை அவன் தாக்க,அவன் தாக்குதலில் சற்றே தடுமாறினான் நம் கதாநாயகன்.

அவன் சுதாரிப்பதற்குள் அவன் கழுத்தைப் பற்றி இறுக்கினான்.ஆதித்யா சற்றே மூச்சு விட இயலாமல் திணற,அவன் பிடி மேலும் இறுகியது.சில நொடிகள் தான் அவனும் ராகவின் கழுத்தைப் பற்றினான்.அவன் தந்த அழுத்தத்தில் ராகவின் பிடி தளர்ந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.