(Reading time: 12 - 24 minutes)

ட்டென அவன் கரத்தை தட்டி அவன் நெற்றியில் மோதினான் ஆதித்யா.

ராகவ் சுதாரித்து மீண்டும் அவனை தாக்குவதற்குள் அவன் நெஞ்சில் இறங்கியது அந்த திரிசூலம்.

ஆதித்யரின் கண்கள் சினத்தினால் சிவந்திருந்தன.அவர் மீண்டும் ஒருமுறை குத்த அவன் மண்ணில் சரிந்தான்.ஆதித்யரின் பிரணனை பறிக்க வந்த மரணதேவி இப்போது ராகவின் உயிரை சுமந்து சென்றாள்.அவன் கரம் ஏந்திய சூலத்தை நிலத்தில் குத்தினான்.

வானின் மழைத்துளி உருப்பெடுத்து ஆதித்யரின் சிரத்தை நனைத்து அவரை குளிர்வித்தது.

ம்...எனது கருத்து தவறுதான் போலும்!!இறைவன் தன் மேல் பாராட்டப்பட்ட பக்தி என்னும் அன்பிற்காக விதியை மாற்றி எழுதுவான் போலும்!!அன்பிற்காக அடிமையாகும் அவன்...ஆடம்பரத்தை என்றும் விரும்புவதில்லை.உயர்ந்த பிறருக்காக  வாழும் எண்ணம் கொண்ட ஒருவன் எவ்வளவு தான் சோதனைகளை சந்தித்தாலும் அவன் என்றும் தோற்க்கடிக்கப்படுவதில்லை.அந்நபரின் அனைத்து வேதனைகளையும் இறைவனே ஏற்கிறார்.இறைவன் விழிகளுக்கு புலப்படாதவரே!!நான் இக்கணம் இறைவனை மனித சரீரம் உணரும் வலியோடு ஒப்பிட விரும்புகிறேன்.வலியானது தேகத்தின் அங்கங்கள் வேதனைகளுக்கு உட்படும் சமயத்திலே தோன்றும்.அதைப்போல,நேரம் கிடைத்தால் உணர்ந்துப் பாருங்கள்..இன்னல்களானது வாழ்வில் தோன்றும் சமயம் அனைத்திற்கும் பொறுப்பான தெய்வீகம் மனிதனால் உணரப்படும்.இறைவன் இருக்கின்றான்!!!

இருள் சூழ்ந்த அந்த இடத்தில் மௌனமாய் நின்றிருந்தவனின் முன் பதற்றமாக வந்து நின்றார் ராகவின் தந்தை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

ஈன்ற புதல்வன் நிலத்தில் சவமாய் கிடக்கிறான்!எதிரே அவனை கொன்றவன் நிற்கின்றான்.ஆதித்யா நிமிர்ந்து அவரை பார்த்தான்.சில நிமிடங்கள் கனத்த மௌனம்!!

பின்,என்ன நினைத்தாரோ!!தனது கை துப்பாக்கியை எடுத்தார்.தனது ஆருயிர் புதல்வனின் மார்பில் மூன்று முறை சுட்டார்.

"போயிடுப்பா!அவன் பண்ண பாவத்துக்கு தண்டனையை நான் அனுபவித்துக்கிறேன்.நீ போயிடு!"என்றார்.

புரியாமல் அவரை பார்த்தவனை துரிதப்படுத்தினார்.

"சீக்கிரம் போ!"-மனம் கனத்த அவரது வார்த்தைகளால் அவ்விடத்தை தியாகித்தான் ஆதித்யா.

எண்ணிய எண்ணம் அவசியம் ஈடேறியது!!

ஒரு ஆன்மாவானது,புவியில் பிறக்கும் சமயம்,அதன் வாழ்க்கை தீர்மானத்தை நிர்ணயிக்கும் முழு சுதந்திரத்தை இறைவன் அந்த ஆன்மாவிற்கு நல்குகிறான்!!வாழ்வியலை நிர்ணயிக்க துடிக்கும் ஆன்மாவிடம் அவன் விடுக்கும் வினா ஒன்றே!எதை சார போகிறாய்??நித்யம் தரும் சத்தியநெறியையா?அல்லது மோகம் தரும் அசத்திய நெறியையா??இதில்,பலர் சுகபோகங்களுக்காக அசத்தியநெறியையே தேர்ந்தெடுக்கின்றனர்.அதர்ம மார்க்கம் தொடக்கத்தில் ஆனந்தத்தை வாரி வழங்கினாலும்,அதனால்,பரம ஆனந்தத்தை என்றுமே வழங்க இயலாது.அதர்ம வழியை சாரும் மானிடனின் வாழ்வை தீர்மானிக்கும் பொறுப்பினை இறைவன் துறக்கிறான்.அதனால்,அவர்கள் இறைவனிடத்தில் தங்களின் கர்மங்கள் குறித்து கேள்விகளை எழுப்பும் தகுதியினை இழக்கின்றனர்.சோதனைகள் பல சூழ்ந்தாலும் சாதனை புரிய வைக்கும் தர்மத்தை பின்பற்றுபவர்கள் இறைவனிடம் தங்களின் சமர்பணத்தை முழுதாக தந்தவர்கள் ஆவர்.அவர்களால் தங்களின் வேண்டுதலையும் தயக்கமின்றி அவனிடத்தில் வைக்க இயலும்!அவனிடம்,தன் துன்பங்களுக்கான காரணங்களையும் வினவ இயலும்!தர்ம நெறியில் வசிப்பவர்கள் துயர் அனுபவித்தாலும்,அதன் வேதனைகளை அனுபவிப்பவன் எல்லாம் அந்தப் பரம்பொருளே!!அதனால்,அவர்களின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும்!!தாங்கள் தங்களின் செயல்களை செய்ய தொடங்கும் முன்,எந்த மார்க்கத்தில் செல்ல விரும்புகிறீர்கள் என்பதை சிந்தித்து தேர்ந்தெடுப்பதே நன்மையை பயக்கும்!நான் கூறுவது சரிதானே??

சில மாதங்கள் கழித்து...

"ௐ பிரஜனமே பிரம்மா திஷ்டத்து!பாதையோர் விஷ்ணு திஷ்டத்து!ஹத்தையோர் ஹர திஷ்டத்து!"-ஸ்ரீ ருத்ர மந்திரம் அந்த ஆலயத்தின் திக்கெட்டிலும் ஒலித்தது.

கருங்கல்லால் செதுக்கப்பட்டு,வடிக்கப்பட்டிருந்த ஈசனின் பிரதி பிம்பம் தன்னை நாடி வருபவரின் சஞ்சலங்களை முழுதாக அகற்றிக் கொண்டிருந்தது.

அனைவருக்கும் திவ்ய பிரசாதத்தை வழங்கிக் கொண்டிருந்த கோவில் குருக்கள் ஜானகியின் வருகையை கண்டதும்,பிரகாசமடைந்தார்.

"அடடே..!வாங்கம்மா!"

"நல்லா இருக்கீங்களா சுவாமி?"

"எனக்கென்னம்மா?நல்லா இருக்கேன்!ஆமா!தம்பி வரலையா?"

"ஆதி நதிக்கு அந்தப்பக்கம் இருக்கிற கோவிலுக்கு போயிருக்கான்!"

"அப்படிங்களா?சரிங்கம்மா!"

"நம்ம ஆதிக்கு வர தை 17 கல்யாணம்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.