(Reading time: 8 - 15 minutes)

10. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai

                 

ன்னுயிர் தலைவனாகிய ஆதவனைக் கண்ட மகிழ்ச்சியின் பிரகாசிக்கத் தொடங்கினாள் வான்மகள். காதலிக்கு டிமிக்கி காட்டிவிட்டு சூரியன் தன் கதிர்களால் அனைவரையும் தொட்டுத் தீண்ட, அவனைத் திட்டியபடியே கண் விழித்தாள் நிரூபணா.

“அதுக்குள்ள விடிஞ்சிருச்சா? எவ்வளவு லேட்டா தூங்கினேன்!இந்த சூரியனுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லை! உனக்கெல்லாம் ஒரு நாள் இருக்கு மேன்!” என்று ஆள்காட்டி விரலை நீட்டி மிரட்டல் ஒன்று வைத்தவள் தன் அருகில் உறங்கும் அர்ப்பணாவை பார்த்தாள்.

இன்னும் உறங்கித்தான் கொண்டிருந்தாள் அர்ப்பணா. மணியைப் பார்த்தாள் நிரூ. “அவ்வளவு லேட் ஆகல..பாவம் தூங்கட்டும்!” என்று மௌனமாய் சொல்லிக் கொண்டே எழுந்தவள் தனது செல்ஃபோனைத் தேடினாள்.

நேற்றிரவு எடுத்த புகைப்படங்களை மீண்டும் பார்த்தாள். எப்படியாவது இன்றே ராகவேந்திரனை சந்திக்க வேண்டும் என்று மனதிற்குள் திட்டம் தீட்டியவள், அர்ப்பணாவை எப்படி சமாளிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "என்றென்றும் அன்புடன் - 02..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

முடியாது கண்ணு! ஒன்னு எனக்கு ப்ரண்டா இரு.. இல்லன்னா சத்யனுக்கு காதலியாக இரு..  இரண்டு பேரும் முக்கியம்னு மட்டும் சொல்லாதே! என்னால இதை ஏதுக்கவே முடியாது!” என்ற தீர்மானமான குரலில் சொன்னான் வெற்றி. அவன் ஒரு புறம் நிற்க, மறுபுறம் சத்யேந்திரன் நிற்க இருவருக்கும் நடுவில் இருதலை கொள்ளி எரும்பாய் நின்றாள் கண்மணி.

“ நீ பேசுறது உனக்கே சரின்னு படுதா வெற்றி? கண்மணி உனக்கு பெஸ்ட் ப்ரண்ட். தன் வாழ்க்கை முழுக்க உன்னோடு இருக்கனும்னு அவ நினைக்கிறா! அது அவளுடைய அன்பின் வெளிப்பாடு!”

“..”

“ஒரு நல்ல நண்பனா, நீ அந்த அன்பை சாதகமாக்க நினைக்கலாமா?” தன்மையாகத்தான் கேட்டான் சத்யன். ஆனால் வெற்றியோ அதை கேட்டு ஆவேசமாகினான்.கொத்தாய் சத்யனின் சட்டையை பிடித்திருந்தான் அவன்.

“ எங்க ப்ரண்ட்ஷிப் பத்தியும்,என்னை பத்தியும்பேச நீ யாரு?” என்று ரௌத்திரமாக கேட்டான். எது கண்மணியை பொறுமையிழக்க வைத்தது என்று தெரியவில்லை.. சட்டென, “வெளில போ” என்றிருந்தாள் கண்மணி.

“வெற்றீ…ஈ..ஈ” என்று அலறியபடி கண்விழித்தாள் கண்மணி.

“ச்ச எல்லாமே கனவா?” பதறி எழுந்தே விட்டிருந்தாள் அவள். யாரோ தலையில் பலமாய் அடித்ததுபோல ஒரு வலி. கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்து விட்டிருந்தாள் அவள்.

நேற்றிரவு சத்யனை சந்தித்ததை நினைத்து பார்த்தாள். அவனுடன் பேசியதும், அவனது ஸ்பரிசமும் அவளை நாணமுற செய்தது. அவனது ஒவ்வொரு பேச்சும் செயலும் இருவிழிகளின் முன்னில் மறுபடியும் அரங்கேறுவது போல இருந்தது.

சில நிமிடங்கள் அந்த இனிய நினைவுகளை அசைப்போட்டவள், மீண்டும் தனது கனவை நினைத்து பார்த்தாள். கனவில் வந்தது நிஜத்தில் நடப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு என்று அவளுக்கே தெரியும். அதனால் அதை எண்ணி ஸ்தம்பித்து நிற்கவில்லை அவள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிதான் யோசித்தாள் கண்மணி.

அவளுடைய அச்சம் இதுதான், இந்திரன் என்ற சத்யன் இத்தனை நாட்களாய் தனக்கு அனுப்பிய மெஸேஜ்களைப் பற்றி ஏன் வெற்றியிடம் சொல்லவில்லை? வெற்றிக்கு இந்த விஷயம் தெரிந்தால் அவன் எப்படி அதை ஏற்பான்? தனக்கு சத்யனை எப்போதுமே பிடிக்காது என்பது மட்டும்தான் வெற்றிக்கு தெரிந்தது.

புகைப்போல தனக்குள் பரவி, இப்போது ஸ்வாசமாகி கண் சிமிட்டிடும் காதலைப் பற்றி சொன்னால் அவன் புரிந்து கொள்வானா? அவன் சத்யனை நம்புவானா? என்ற குழப்பம்.

இன்னொரு பக்கம் சத்யன்! நேற்று தான் அவன் தனது கடந்த காலத்தைப் பற்றிக் கூறினான். அவனது எண்ணங்களை புரிந்து கொண்டவளுக்கு, அர்ப்பணாவும், சத்யனும் ஒரே படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்பது தவறென்று தோன்றியது.

ஒரு பக்கம் நண்பனின் குறிக்கோள், இன்னொரு பக்கம் தன்னவனின் வேதனை! எதற்குமுக்கியத்துவம் அளிப்பாள் அவள்.

“மிஸ்டர் முருகா, என்னதான் இருந்தாலும் நீ என்ன இப்படி சோதிக்க கூடாது” என்று அவள் வாய்விட்டே சொல்ல, குமரனோ,

“டார்லிங் இதெல்லாம் ஒரு பிரச்சனையா? இதைவிட பெரிய பூகம்பம் ஒன்னு ஆன் தி வே ல வருது பாரு!” என்று கயிலையில் அமர்ந்தபடி கூறினான்.

நிரூ நேத்து நான் வினயை பார்த்தேன்.. அதுவும் அந்த போலீச் ஆஃபிசர்.. அவர் என்னை..என்னை..என் அபின்னு” என்று திக்கித் தடுமாறிய அர்ப்பணாவை அணைத்துக் கொண்டாள் நிரூபணா.

“ஷ்ஷ்ஷ்..அபி.. ரிலாக்ஸ்..குழப்பம் என்ற சுழல் உன்னை இழுக்க பார்க்குது..கொஞ்சம் கொஞ்சமா உடைக்க பார்க்குது! நீ இந்த மூணு வருஷத்துல எவ்வளவு கஷ்டப்பட்டு தைரியமாகினனு  நினைச்சு பார்! மூணேவருஷத்துல, சினிமா பின்னணி இல்லாத ஒரு பொண்ணு தன் பேருல இருந்த கலங்கத்தையும் துடைச்சு, தன்னுடைய திறமையால நல்ல இடத்துக்கு  வந்துருக்கா..”

“..”

“அந்த பெண்ணை மறுபடியும் உடைக்க போறியா? அவ இன்னும் சாதிக்க வேணாமா? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?”

“..”

“அப்படியே இது பெரிய விஷயம்ன்னா, இதை எப்படி சரி பண்ணனும்னு யோசிக்கலாம்.. பயப்படாதே!” என்று தைரியமளித்தாள் நிரூபணா. சரியாய் அந்த நேரம் அவளது செல்ஃபோனுக்கு மெசேஜ் ஒன்று வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.