ப்ரியாவின் ஃபோன் சிணுங்கியது. ப்ரியா ஏதாவது சொல்லுவாள் என்று ஆவாலாக எதிர்பார்த்தவனுக்கு அவளின் ஃபோன் சிணுங்கியதில் எரிச்சலை ஏற்படுத்தியது. ‘அவள் பேசுறதே அதிசயமாயிருக்கு… நடுவுல இந்த ஃபோன் வேறா’ மானசீகமாய் தலையில் அடித்துகொண்டான் ஆதர்ஷ்.
“எக்ஸ்க்யூஸ் மீ!” என்றவள் அழைப்பை ஏற்றாள்.
“ஹாய் யஷு!”
“……………………”
“ஓ….ஷாப்பிங்க் முடிச்சிட்டியா! அடுத்து என்ன ப்ளான்?”
“……………………”
“இல்லைடி… நாங்க பேசி முடிச்சாச்சு. நீ இங்க வரியா?”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
“……………………”
“நான் இங்கேயே வெய்ட் பண்ணுறேன்” அழைப்பை துண்டித்தாள் ப்ரியா.
‘யாரிந்த வில்லன்? ப்ரியாவை இவ்வளவு சீக்கிரம் அழைத்திட்டு போறதுக்காக வருவது?’
“என்னோட தங்கை… இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்க வந்திருவா”
“என்னோட தங்கையும் வந்திருக்கா… அவளும் ஷாப்பிங்க் போயிருக்கா.. வர நேரம் தான்…” தன் ஃபோனை எடுத்து ஜெய்யை அழைத்து அவர்களை அங்கு வர சொன்னான்.
வெற்றிகரமாக ஸ்கேரி ஹௌஸ் பயணத்தை முடித்திருந்த ஜெய்யிற்கு, ஆதர்ஷிடமிருந்து அழைப்பு வரவும் சரயூ மற்றும் ராகுலிடம் விடைபெற்றுகொண்டு மைத்ரீயோடு காஃபி ஷாப்பிற்கு வந்து சேர்ந்தான்.
அதே சமயம் ப்ரியாவின் தங்கையும் அங்கு வந்து சேர்ந்தாள்.
“இவள் என்னோட தங்கை யஷ்விதா. என்ஜினியரிங்க் பண்ணிட்டிருக்கா” ப்ரியா தன் தங்கையை அறிமுகபடுத்தினாள்.
யஷ்விதா ஒரு இளநகையோடு பொதுவாக எல்லோருக்கும் “ஹாய்!” என்றாள்.
அதன் பிறகு ஆதர்ஷ் அறிமுக படலத்தை ஆரம்பித்தான்.
“இவள் மைத்ரீ… எங்க வீட்டு குட்டி வாலு… என்னோட செல்ல தங்கச்சி” சில நொடி மௌனத்திற்கு பின் ஜெய்யைப் பார்த்தபடி மீண்டும் தொடர்ந்தான்
“இவன் ஜெய்… என்னோட தம்பி… மைத்ரீயும் ஜெய்யும் ரொம்ப க்ளோஸ். அவங்க ரெண்டு பேரும் செய்ற சேட்டைல வீடு ரெண்டாயிரும்” விரிந்த புன்னகையோடு பேசியவனை கண்ணிமைக்க மறந்தவனாய் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெய்.
ஜெய், மைத்ரீ இடையேயான நட்பை ஆதர்ஷ் உட்பட அவர்களின் குடும்பத்தில் எல்லோரும் அங்கிகரித்திருந்தனர். சந்திரசேகரும் வடிவும் அவனை தங்கள் மகனாக நினைப்பதையும் சொல்லுவதையும் ஜெய் அறிவான். அதே போல் அவனும் அவர்களை அம்மா, அப்பா என்றே அழைப்பான். ஆனால் ஆதர்ஷ் மட்டும் ஜெய்யை எந்த உறவு முறையும் சொல்லி அழைக்காது எப்போதுமே பெயர் சொல்லியே பழக்கப்பட்டிருந்தான். இன்று அவன் தன்னை தம்பி என்று அறிமுக படுத்தியதில் நெகிழ்ந்துவிட்டான் ஜெய்.
மைத்ரீயின் மூலம் கிடைத்த உயர்ந்த நட்பும் அவளின் பாசமான குடும்பமும் தனக்கு சொந்தம் என்று பெருமையுற்றான். நன்றியணர்ச்சி பொங்க தோழியைப் பார்த்தான்.
மைத்ரீயோ இங்கே நடப்பதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் உட்கார்ந்திருந்தாள்.
‘அண்ணியைப் பார்க்க போறேன்னு குதிச்சிட்டு இங்க வந்தவளா இப்படியிருக்கா? என்ன ஆச்சு இவளுக்கு?’, “மைத்ரீ!” அவளின் தோளைத் தொட்டு உலுக்கினான் ஜெய்.
“என்னாச்சு ஜெய்?” கண்களில் குழப்பத்துடன் சுரத்தேயில்லாமல் வந்த அவளின் வார்த்தைகள் ஜெய்யை குழப்பின.
முத்து ஒளிரும்…
{kunena_discuss:1038}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.