(Reading time: 24 - 48 minutes)

வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 13 - வத்ஸலா

Varthai thavarivitten Kannamma

கோபமும் காதலும் தனித்தனியாக வந்தாலே கண்களையும் அறிவையும் மறைத்து விளையாடும். இங்கே இரண்டும் ஒன்றாக வந்து நின்றால்???

'ப்ளீஸ்... டாக்டர் ஏன் இப்படி பேசறீங்க..' புவனாவை பார்த்து கடினமான குரலில் கேட்டான் விஷ்வா..

'வொய் விஷ்வா... என்ன பிரச்சனை???' படு இயல்பாக வந்தது கேள்வி.

'நீங்க இதுவரைக்கும் எத்தனையோ பேஷண்ட்ஸ் ஹான்டில் பண்ணி நான் பார்த்திருக்கேன் டாக்டர். நீங்க இது மாதிரி யாருகிட்டேயும் பேசினது இல்லையே டாக்டர். இவங்ககிட்டே மட்டும் ஏன் இப்படி பேசறீங்க??? உன்னாலே நடக்க முடியாது. ஆட முடியாதுன்னு'

'கமான் விஷ்வா... நான் எப்பவுமே எல்லார்கிட்டேயும் ஒரே மாதிரி தான் பேசறேன். உன்னோட ரியல் ப்ராப்ளம் என்ன??? உனக்கு என் மேலே நம்பிக்கை இல்லை அப்படித்தானே???' டாக்டர் புவனாவின் குரலும் கடுமையாகியது பார்த்துக்கொண்டிருந்த இந்துவுக்கும் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது.

விஷ்வா இரண்டு நாட்களாக பட்ட பாடு அறியாதவளா புவனா. அவன் இந்த அறுவை சிகிச்சையை செய்வதுதான் சரி என்ற முடிவுக்கு எப்போதோ வந்திருந்தாள் அவள். காதலியை கூட அவன் காப்பாற்றவில்லை என்றால் அவன் டாக்டருக்கு படித்து என்ன பயனாம்???

'அப்படி இல்லை டாக்டர் உங்க மேலே நிறைய நம்பிக்கை இருக்கு. அதனாலேதான்......' விஷ்வா ஏதோ சொல்லப்போக..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தமிழ் தென்றலின் "என் சிப்பிக்குள் நீ முத்து..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

'ஸீ விஷ்வா...' இடை மறித்தாள் புவனா 'நான் யாருக்கும் ஃபால்ஸ் ஹோப் கொடுக்க மாட்டேன். இவங்க நடக்கவே டைம் ஆகும் டான்ஸ் ஆடுறது கஷ்டம்.. அதுதான் உண்மை..' அழுத்தம் திருத்தமாக மறுபடியும் சொன்னாள் புவனா.

எங்கிருந்து தான் வந்ததோ சரேலென நீர் சேர்ந்துக்கொண்டது இந்துவின் கண்களில். அதை பார்த்த விஷ்வாவின் குரல் இரு மடங்காக உயர்ந்தது. ஏதோ அவளை புவனாவிடமிருந்து காப்பற்றிகொண்டு செல்வதைப்போல் ஒரு வேகம்...

'நோ.. டாக்டர்... அவ சீக்கிரமே நடப்பா... ஷீ வில் டான்ஸ்!!! ஐ வில் மேக் ஹர் டான்ஸ்..' 

'தென் டூ இட்!!! என்னை எதுக்கு விஷ்வா கூப்பிட்டே. நீ அவளுக்கு சர்ஜரி பண்ணு இல்லை  அவளை கல்யாணமே பண்ணு. தட்ஸ் நாட் மை ஹெட்டேக்..... ஐ யாம் மூவிங் அவுட் நவ்..'

'யெஸ் டாக்டர்... நான்தான் சர்ஜரியும் பண்ண போறேன். நான்தான் அவளை கல்யாணமும் பண்ண போறேன் ... போதுமா??? யூ ப்ளீஸ் கேரி ஆன்...' இரண்டு மூன்று நாட்களாக அழுத்தி அடக்கிய உணர்வுகள் இன்று அப்படியே வெடித்து வெளியே வந்து விழுந்தன. 

இந்து அவன் வார்த்தைகளில் திகைத்து விக்கித்துப்போனாள். நடப்பதை புரிந்தும் புரியாமலும் பார்த்திருந்தனர் அங்கே இருந்த மற்ற மூவரும். யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இன்னமும் அவர்கள் மூவரையும் கவனிக்கவில்லை விஷ்வா.

'அதானே பார்த்தேன். அப்படி தெளிவா கல்யாணம் பண்ண போறேன்னு சொல்லு...'   மறுபடியும் புவனாவேதான்.

'எஸ்... டாக்டர்... கல்யாணம்தான் பண்ண போறேன்.. இதுவரைக்கும் நீங்க செஞ்ச ஹெல்ப்க்கு ரொம்ப தேங்க்ஸ்... யூ ப்ளீஸ் கேரி ஆன்..' இன்னமும் கோபத்திலிருந்து வெளிவரவில்லை விஷ்வா.

இப்போது புவனா இந்துவின் அம்மாவின் பக்கம் திரும்பினாள்

'பார்த்துக்கோங்கமா. இவர்தான் உங்க மாப்பிள்ளை. உங்க பொண்ணை கல்யாணம் பண்ண போறாராம். பையன் நல்ல பையன்தான். என்ன ஏதுன்னு பார்த்து நல்ல படியா முடிங்க ..' புவனா சொல்ல மொத்தமாக திடுக்கிட்டு குலுங்கி அவர்களின் பக்கம் திரும்பினான் விஷ்வா.

'யார் இவர்கள் எல்லாம்???'

இதழோரம் குடியேறியிருந்த சின்ன சிரிப்புடன் விஷ்வாவை ஏற இறங்க பார்த்துவிட்டு அறையை விட்டு வெளி ஏறினாள் புவனா.

'திடீரென இப்படி ஒரு கோபம் எங்கிருந்து வந்தது எனக்கு???? என்ன செய்து வைத்திருக்கிறேன் நான்???' அவனுக்கே புரியவில்லை. சில நொடிகள் யாரையும் நிமிர்ந்து பார்க்க கூட தோன்றாமல் அங்கிருந்த நாற்காலியில் அப்படியே அமர்ந்தான் விஷ்வா.

இப்போது ஒரு அவஸ்தையான மௌனம் குடி ஏறி இருந்தது அந்த அறைக்குள்ளே. விஷ்வாவை பார்த்தபடியே இருந்தாள் இந்து.

இங்கே நடந்ததை எப்படி எடுத்துக்கொள்ள??? அவளுக்கு புரிபடவே இல்லை. இரண்டு நிமிடங்கள் கழித்து அவள் பக்கம் அவன் திரும்பிய போதுதான் அந்த சூழ்நிலை அவன் தலைக்கு ஏறியது. சட்டென எழுந்தான் அவன்.

அவள் அருகில் வந்து நின்றிருந்த அவளது அம்மாவை பார்த்து கேட்டான் 'நீங்கதான் இந்து அம்மாவா???".

'ஆமாம் டாக்டர்..' என்றார் அவர் மெதுவாக. 'இவங்க என் வீட்டுக்காரரோட அண்ணனும், அண்ணியும்..'

ஒரு திடுக்கிடலோடுதான் அவர்கள் இருவரையும் பார்த்தான் விஷ்வா 'அப்படி என்றால் இவர்கள்தான் அருண் அம்மாவும் அப்பாவுமா??? எல்லார் முன்னிலையிலும் உளறி வைத்திருக்கிறேனா நான்??? எதை செய்ய வேண்டாமென நினைத்தேனோ அதையே செய்து வைத்திருக்கிறேனே!!!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.