(Reading time: 24 - 48 minutes)

தே நேரத்தில் சொன்ன எதையும் இனி மாற்ற முடியப்போவதில்லை என்றும் புரிந்தது விஷ்வாவுக்கு. அறுவை சிகிச்சைக்கான நேரம் வேறு நெருங்கி விட்டிருந்தது. ஒரு ஆழமான மூச்சை எடுத்துக்கொண்டு அவளது அம்மாவை பார்த்து சொன்னான் அவன்.

'நீங்க கவலை படாதீங்க உங்க பொண்ணுக்கு ஒண்ணுமில்லை. அவளை நான் பார்த்துக்கறேன்..'

'நிஜமா ஒண்ணுமில்லை இல்லையா டாக்டர்..' கேட்ட அவர் முகத்தை பார்க்க நிஜமாகவே பாவமாக இருந்தது அவனுக்கு

'ஒண்ணுமில்லமா. அவளுக்கு இனிமே நான் பொறுப்பு தைரியமா இருங்க..' அவன் உறுதியான குரலில் சொல்ல அவர் மெல்ல தலையசைக்க ஒரு சின்ன புன்னகை மலர்ந்தது அருண் அப்பா, அம்மா இதழ்களில்.

அடுத்து விஷ்வா இந்துவின் பக்கம் திரும்பினான். பளீர் புன்னகை ஓடி வந்து சேர்ந்தது அவன் இதழ்களை.

'நத்திங் ..' என்றான் அவள் கண்களை பார்த்தபடியே. அவள் கை பற்றி அழுத்திக்கொடுத்தான் விஷ்வா.

'பயப்படற அளவுக்கு ஒண்ணுமே இல்லைடா. நான் பார்த்துக்கறேன்... டோன்ட் வொர்ரி..' அவன் சொல்ல இத்தனை நேரம் அவளை சூழ்ந்திருந்த பயங்கள் எல்லாம் எங்கோ பறந்தே போனதப்போல் தோன்றியது அவளுக்கு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

'இந்துவுக்கும் அவனை பிடித்துத்தான் இருக்கிறதோ???' அவள் முக பாவத்தை படித்தபடியே இருந்தனர் அருணின் பெற்றோர்.

'தைரியமா இரு. இதோ வந்திடறேன்..' அவளை பார்த்து கண்சிமிட்டி விட்டு அவளது ரிபோர்ட்டுகளை எடுத்துக்கொண்டு நகர்ந்தான் அவன்.. சில நிமிடங்கள் கடக்க மருத்துவமனைக்கு  வந்து சேர்ந்தான் அருண்!!!

பரேஷன் தியேட்டருக்குள் அவள் அழைத்து செல்லப்பட பரபரவென அவனை தேடின அவள் கண்கள். அவன் அணிந்திருந்த தியேட்டர் மாஸ்கை தாண்டி அவளை பார்த்து சிமிட்டி சிரித்தன அவன் கண்கள்.

'நான் இருக்கேன். டோன்ட் வொர்ரி...' சொன்னவனின் விரல்களை யாருமறியாமல் பற்றிக்கொண்டாள் அவள். புதிதாய் ஒரு சந்தோஷம் அவளுக்குள். அவளுக்கு மயக்க மருந்து செலுத்தப்பட அவனை பார்த்தபடியே புன்னகையுடன் அப்படியே மயங்கினாள் இந்துஜா. ஒரு மருத்துவனாக இயங்க துவங்கினான் அவன்.

அங்கே வெளியே இங்கமங்கும் அலைந்துக்கொண்டே இருந்தான் அருண்.

'இந்துக்கு ஒண்ணுமில்லைலமா .. கொஞ்சம் பயமா தான் இருக்கு...'

ஒண்ணுமில்லைடா... அது யாரோ டாக்டர் விஷ்வாவாமே... அவளை பத்திரமா பார்த்துக்கறார்' புன்னைகை மின்ன சொன்னார் அம்மா.

'விஷ்வாவா???' வியப்புடன் கேட்டான் அருண்.

'ஆமாம்டா..' என்று சற்றுமுன் நடந்ததை அவனுக்கு விளக்கிகொண்டிருந்தார் அவன் அம்மா. அவனுக்கே வியப்பாக இருந்தது. நேற்று என் பேச்சை பட்டென கத்தரித்துவிட்டு போன விஷ்வாதானா இது???

'மா... ' இந்த விஷ்வா யாரு தெரியுமா. 'உனக்கு என்னோட வேலை பார்க்கிற அபர்ணா தெரியுமில்ல அவளோட சொந்த அத்தை பையன். சரி இந்துவுக்கு அவரை பிடிச்சிருக்கா???'

'பிடிச்சிருக்கும் போலே தான் இருக்கு..' அம்மா சொல்ல அவன் மனம் ஏதேதோ கணக்குகள் போட ஆரம்பித்தது.

கிட்டதட்ட இரண்டு மணி நேரங்கள் கடந்திருக்க அறுவை சிகச்சையை வெற்றிகரமாக முடித்து விட்டு வெளியே வந்தான் விஷ்வா. தனது அறைக்கு சென்று சற்றே ஆயாசமாக காபியை பருகிக்கொண்டிருந்த போதுதான் அவன் அறைக்கதவை தட்டினாள் புவனா.

'ப்ளீஸ்... கம் இன் டாக்டர்...' இருக்கையிலிருந்து எழுந்தான் விஷ்வா. புன்னகையுடன் உள்ளே வந்தாள் விஷ்வா.

'சாரி விஷ்வா. உன்னை ரொம்ப கடுப்பாக்கிட்டேனோ???'

'ஓ நத்திங் டாக்டர் ... அதெல்லாம் ஒண்ணுமே இல்லை. நான் தான் கொஞ்சம்...

''விஷ்வா...' என்றாள் புவனா. 'அது என்னனென்னு தெரியலை உன் மேலே ஆரம்பத்தில் இருந்தே எனக்கு கொஞ்சம் பாசம் உண்டு!!! .எப்பவும் உன்னை பார்த்தா செத்து போன என் தம்பியை பார்க்கிறா மாதிரி ஒரு ஃபீல்.!!!' அவள் சொல்ல வியப்பில் உயர்ந்தன விஷ்வாவின் புருவங்கள்.

'உனக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு தோணிச்சு... உனக்கு இந்துவை  பிடிச்சிருக்குன்னு புரிஞ்சது. லவ் பண்ண பொண்ணுக்கு கூட சர்ஜரி பண்ண முடியலன்னா நீ டாக்டருக்கு படிச்சு என்ன புண்ணியம் சொல்லு..'

அழகாய் சிரித்தான் விஷ்வா.

'அதான் உனக்கு 'விஷ்வா..'ன்னு மெசேஜ் அனுப்பினேன். நீ ஓடி வந்தே. உன்னை கொஞ்சம் கோபப்படுத்தினேன். கடைசியிலே அது நல்ல படியாவே முடிஞ்சதுன்னு நினைக்கிறேன். சீக்கிரம் அவளை கல்யாணம் பண்ணிட்டு ஹாப்பியா செட்டில் ஆகு விஷ்வா...' இதமாக சொன்னாள் புவனா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.