(Reading time: 14 - 28 minutes)

வனை முறைத்துவிட்டு கார்த்திக்கிடம் திரும்பியவள் ப்ரெண்ட்ஸ் என கைநீட்ட ஒரு நொடி யோசித்தவன் பின் மரியாதைக்காக கை குலுக்கினான்..எனக்கு இங்க ப்ரெண்ட்ஸ் ரொம்ப கம்மி,இவனோட தான் ஊர் சுத்துவேன் இப்போ இவனும் வக்கீல் ஆய்ட்டான்னு ரொம்ப சீன் போடுறான்..சோ நீங்க ப்ரீயா இருக்குறப்போலா எனக்கு ஊர் சுத்தி காட்றீங்க ஓ.கே..??

ஐ அம் வெரி சாரி கார்த்திக் மிஸ்டர் 7:30 உங்க தோள் மேல உக்காந்து குத்து டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டாரு..என் ஆழ்ந்த அனுதாபங்கள்..-சிவா,

ரெண்டு பேரும் கொஞ்சம் வாய மூடுங்கடா..அவன போட்டு படுத்தி எடுக்குறீங்க..போய் வேற வேலயிருந்தா பாருங்க என துளசி அதட்ட..இருவரும் வாயை மூடிக் கொண்டனர்..ஒரு வழியாக வெளியே வந்து தன் வண்டியை உயிர்பித்தவனுக்கு உள்ளே சிவாவின் அலறல் சத்தம் கேட்டது..சிரித்து கொண்டே வண்டியை எடுத்தவன் தன் வீட்டை அடைந்தான்..

உள்ளே நுழைந்தவனை ஏதோ ஏலியனை போல் பார்த்தனர் அவன் அம்மாவும் தம்பி தங்கையும்..சோர்வாய் டைனிங் டேபிளில் அமர்ந்தவன் அம்மா சூடா காபி தரீயா என்றவாறு நிமிர அப்போது தான் அவர்களின் ரியாக்ஷனை கவனித்தான்..என்னம்மா அப்படி பாக்குற??

இல்ல காலைல நீ இந்த ட்ரெஸ் போட்டுட்டு போலையே..??

அப்போதுதான் அதை கவனித்தவன் அத ஏன்ம்மா கேக்குற சேகர் சார் வீட்டுக்கு போய்ருந்தேன் என அங்கு நடந்த அனைத்தையும் கூற ஷரவனும் ஷரவந்தியும் விழுந்து விழுத்து சிரிக்க,கீதாவே கஷ்டபட்டு தான் சிரிப்பை அடக்கி கொண்டிருந்தார்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

நம்ம ஷரவந்தியே பரவால்லநு தோணிச்சும்மா..அப்படி ஒரு கேரக்டர்,சிவா கரெக்ட்டான பேர்தான் வச்சுருக்காரு குட்டி சாத்தான்னு..நல்ல வேளை கூட பொறந்த அண்ணண்லா இல்ல டெய்லி அவகிட்ட போராடியே வாழ்க்கைய வெறுத்துருப்பான்..ஐயோ அவ கதைய பேசுறதுல என் வேலைய மறந்திருவேன் போல அம்மா காபி குடு நா சீக்கிரமா கிளம்பனும் முரளி சார்கிட்ட அப்பாய்மெண்ட் இருக்கு..என குடுத்த காபியை ஏதோ தண்ணீரை போல் குடித்துவிட்டு செல்லும் மகனை வாஞ்சையாய் பார்த்தார் கீதா..பாவம் காபி கூட குடிக்க நேரமில்லாம இப்படி ஓடுறானே..ம்ம் என்னவோ அவன் வயசுல ஒவ்வொரு பையனும் எப்படி ஜாலியா இருக்காங்க இவன் மட்டும் ஏன் தான் இப்படி வேல வேலநு போறானோ தெரில..ஷரவன் ஷரவந்திக்குமே அம்மா கூறுவதன் உண்மை புரிந்தது என்ன தான் சிரித்து பேசி தங்களோடு மகிழ்ந்தாலும் அதையும் மீறி பொறுப்பே அதிகமாய் தெரியும் அவனிடம்..ஷரவன் டிகிரி முடித்துவிட்டு போட்டோகிராபி தான் இன்ட்ரெஸ்ட்நு சொன்ன போது அனைவருமே குடும்ப சூழ்நிலை காட்டி அதை எதிர்க்க கார்த்திக் தான் அவனை உற்சாகபடுத்தினான்..அப்பா இஷ்டபட்ட வேலைய செஞ்சாதான்ப்பா மனசு நிம்மதியா இருக்கும்..சீக்கிரம் முன்னேறவும் முடியும் அவனுக்கு எது பிடிச்சுருக்கோ அதையே பண்ணட்டும் என்று கூறிவிட்டான்..அப்பாவுமே கார்த்திக்சொன்னா சரியா தான் இருக்கும் என்று நினைப்பவர்..அவன் மீது அத்தனை நம்பிக்கை..21 வயதில் டிகிரி முடித்த கையோடு ஒரு கம்பனியில் வேலையில் சேர்த்து பார்ட் டைமாக சி ஏ முடித்து தனி ஒருவனாய் நின்று தனக்கென ஒரு அங்கிகாரத்தோடு இருக்கிறான்..எப்போதுமே தம்பி தங்கைகளுக்காகவே அதிகம் யோசிப்பவன்..அதுவும் தங்கையென்றால் அவனுக்கு மிகவும் செல்லம்..தம்பியை கூட கடிந்து பேசுவான் ஆனால் தங்கையின் முன் தவறி கூட கோப படமாட்டான்..(என்னங்க பண்றது ஹீரோ இப்படி ஹீரோயின் அப்படி ம்ம்ம் கொஞ்சம் கஷ்டம்தான் இருந்தாலும் சேர்த்து வைப்போம்..)

அன்று விடுமுறை என்பதால் சற்று நேரம் கழித்துதான் விழிப்பான் கார்த்திக்..அவன் உறங்குவதே அதிசயம் அது பொறுக்கமாட்டாமல் அலறியது அவனின் கைப்பேசி..பாதி கண்களை திறந்து யாரென்று பார்க்க சேகர் அழைத்திருந்தார்..அதை அட்டெண்ட் செய்தவன்,ஹலோ சொல்லுங்க சார் என்ன காலைலயே கால் பண்ணிருகீங்க??

சாரி கார்த்திக் சண்டே அதுவுமா உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டேன்..

பரவால்ல சார் சொல்லுங்க..

இன்னைக்கு ப்ரீநா கொஞ்சம் வீட்டுக்கு வரியாப்பா??

சற்று யோசித்தவன்,சரி சார் ஒரு ஒன் அவர்ல வரேன் என்று கூறி அதே யோசனையோடு போனை வைத்தான்..இருப்பினும் தாமதிக்காமல் கிளம்பி சென்றான்..

என்னப்பா இன்னைக்கு கூட வேலையா??-கீதா

இல்லமா சேகர் சார் கூப்டாரு என்னனு தெரில கேட்டுட்டு வந்துரேன்ம்மா..

அங்கு சேகர் ஹாலில் அமர்ந்து டீவி பார்த்து கொண்டிருந்தார்..கார்த்திக்கை பார்த்ததும் வாப்பா கார்த்திக் என்ன காலைலேயே வந்துருக்க ஏதாவது முக்கியமான விஷயமா??

சார் நீங்க தான கால் பண்ணி வர சொன்னீங்க இப்போ என்ன கேக்குறீங்க..

என்னப்பா சொல்ற காலைலயிருந்து என் போன் பக்கமே போலையே..

என்னவென்று குழம்பியவனை மேலும் குழப்பாமல் அங்கு ஆஜரானாள் நம்ம ஹீரோவோட குட்டீடி சாத்தான்..ஹாய் கார்த்திக் வாங்க போலாமா என அசால்ட்டாய் தன் தோள் பையை நோண்டியவாறு வந்தவளை பார்க்க ஏதோ புரிவதாயிருந்தது..

நீங்கதான் கால் பண்ணீங்களா??தயக்கமாய் கேட்டான்..சேகர் என்ன நினைப்பாரோவென்று வேறு இருந்தது..

ஆமா பின்ன ப்ரெண்ட்ஸ்நு கை குலுக்கினா மட்டும் பத்தாது சொன்ன வாக்க காப்பாத்தனும் இன்னைக்கு உங்களுக்கு லீவ் தான அப்போ சொன்னபடி என்ன வெளில கூட்டிட்டு போனும் தான..போன் நம்பர் கூட தரல அதான் இந்த பனிஷ்மெண்ட்..அப்பா கூப்டாதான ஓடி வருவீங்க..என்று புருவங்களை மேலும் கீழுமாய் அசைத்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.