(Reading time: 14 - 28 minutes)

ன்ன சஹானா இது எதெதுல விளையாடுறதுநு இல்ல..கார்த்திக் பாவம் இன்னைக்கு மட்டும்தான் லீவ் அதையும் இப்படி ஸ்பாயில் பண்ணி விடுற..ரொம்ப தப்பு மொதல்ல அவர்ட்ட சாரி கேளு என சற்று கடுமையாய் பேச அவள் முகம் வாடிவிட்டது..அவனுக்கோ என்னவோ போல் ஆகிவிட்டது..

சாரி..என முகத்தை தூக்கி வைத்து கொண்டு அவள் கேட்க அவனுக்கோ சிரிப்பாயிருந்தது..

பரவால்லங்க..சார் நீங்க எதுவும் சொல்லாதீங்க..விளையாட்டா ஏதோ பண்ணிட்டாங்க..

இல்ல கார்த்திக் இவளுக்கு மட்டும் சப்போர்ட் பண்ணாதீங்க..இவளபத்தி தெரியாது..கொஞ்சம் விட்டு புடிக்கலாம்நு நினைச்சீங்க இவளலா புடிக்கவே முடியாது என தன் பங்கிற்கு துளசி அர்ச்சனை செய்ய அவனுக்குதான் சங்கடமாக இருந்தது..

ஏய் எங்க போகனும்னு சொல்லு அப்பா கூட்டிட்டு போவாரு..

சுத்தம் நா என்ன கோவில் குளம்நு சுத்தவா கம்பனி கேட்டேன்..நீ வேணா அப்பாவ கூட்டிட்டு காசி ராமேஸ்வரம்நு போய்ட்டு வா..

அடிக் கழுத பேச்சை பாரு..அப்படி எங்கதாண்டீ போணும் உனக்கு..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

அம்மா..எனக்கு இங்க மால் எங்கேயாவது போணும் அப்பறம் பிஸினஸ்ல இப்போ என்ன ட்ரெண்ட்நு நிறைய தெரிஞ்சுக்கனும்..நா சென்னைல ஒரு பொடிக் ஆரம்பிக்கலாம்நு இருக்கேன்..இதுக்குலா கார்த்திக் தான் கரெக்ட் இன்னோவேடிவ்வா நிறைய ஐடியா சொல்லுவாரு..நா என்ன அவரு வேலைய கெடுத்துட்டா என்கூட வர சொல்றேன் சண்டேதான அதுகூட மேக்ஸிமம் ஒரு த்ரீ அவர்ஸ் தான..எனக்கு சிவாவவிட்டா யாரத் தெரியும்..அவனும் இன்னும் 10 டேஸ்க்கு பிஸிநு சொல்லிட்டான்..என பாவமாய் கூற..அவனுக்கே சற்று இளகிதான் போனது..

சார் உங்களுக்கு ப்ராப்ளம் இல்லனா நா கூட்டிட்டு போறேன் சார்..என்னாலயும் எப்போதும் வர முடியாது கிடைக்குற டைம்ல என்னால முடிஞ்ச சின்ன ஹெல்ப்..இந்த வயசுலயே சொந்தமா பிஸினஸ் பண்ணணும்நு நெனைக்குறது பெரிய விஷயம் சார்…என பக்குவமாய் கூறினான்..

உன்கூட அனுப்ப எனக்கு என்னப்பா ப்ராப்ளம்..உனக்கு வீண் சிரமமேநு தான் யோசிச்சேன்..மத்தபடி ஒண்ணுமில்ல..நீ போய்ட்டு வா சஹானா..-சேகர்..

ஹே..ஜாலி…தங்க் யூப்பா..வாங்க கார்த்திக் அடுத்து எங்கம்மா எதாவது ஆரம்பிக்குறதுக்குள்ள எஸ்கேப் ஆய்டலாம் என துள்ளி குதித்து அவள் ஓட அவன் பின் தொடர்ந்தான்..

காரிலேயே போலாம் என்று அவன் கூற ஓ.கே இந்தாங்க என சாவியை அவனிடம் கொடுத்து விட்டு பக்கத்து கதவை திறக்க நின்றாள்..ஏனோ பைக்கில் அழைத்து செல்ல அவனுக்கு சிரமமாய் இருந்தது இதுவரை அவன் அம்மா தங்கையை தவிர வேறு எந்த பெண்ணையும் ஏற்றியதில்லை..அதுவும் போக யாரும் பார்த்து தவறாக எதாவது கூறிவிட்டால் சேகர் சாரை எதிர் கொள்வது மிகவும் கடினம் என்று தோன்றியதும் ஒரு காரணம்..

கார் கிளம்பியதிலிருந்து வாய் ஓயாமல் பேசி கொண்டு வந்தாள்..கார்த்திக்கிற்கு தலையே சுத்தி விடும் போலிருந்தது..அது வாயா இல்ல பத்தமடை பாயா..இந்த பேச்சு பேசுறாளே ஆண்டவா என்ன ஏன் இப்படி சோதிக்குற என மனதினுள் குமுறியவாறே அந்த மிக பெரிய மாலின் முன் காரை பார்க் செய்துவிட்டு இருவரும் இறங்கினர்..

தொடரும்

Ninnai saranadainthen - 02

{kunena_discuss:1097}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.