(Reading time: 14 - 28 minutes)

02. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ

கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு

சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு

டாடி மம்மி என்ன பேரு இவளுக்கு வச்சாங்க

அட என கேட்டா கொடச்சலுன்னு பேர் வைப்பேங்க

 

கப்பல் வாங்க வந்திருப்பாளோ செப்பல் வாங்க வந்திருப்பாளோ

உசுர வாங்க வந்திருப்பாளோ ஒண்ணும் புரியலையே

ட்ரைலர் போல முடிந்திடுவாளோ ட்ரைன போல நீண்டுடுவாளோ

எப்ப இவன இவ விடுவாளோ ஒண்ணும் தெரியலையே

அப்பாவி போலத்தான் தப்பாக நெனச்சானே

ஐநூறு கேள்வி கேட்டு கேடு ஆளக் கொல்றாளே

இவ இவ வந்தபோது வந்த கோபம் இப்போ இல்லையடா

இவள் நேர்த்து வைத்த சந்தேகங்கள்

ந்த மாலின் அழகை ரசித்தவாறே வந்தவள் கார்த்திக் எதாவது சாப்ட்டு போலாமா??ரொம்ப பசிக்குது..ப்ளீஸ்..

வாங்க போலாம் அதுக்கு ஏன் ப்ளீஸ்நு சொல்றீங்க..என்றவாறு புட் கோட்டிற்கு சென்று வேண்டியதை ஆர்டர் செய்து வாங்கிவிட்டு அமர்ந்தனர்..சென்னை ரொம்பவே மாறிடுச்சுல என்றாள் உணவை ருசித்தவாறே..நீங்க ப்ரெண்ட்ஸ்ஸோட எங்கேயாவது போலாம்நு இருந்துருப்பீங்க டிஸ்டர்ப் பண்ணிட்டேன்ல..

அதெல்லாம் ஒண்ணுமில்லங்க..எனக்கு நிறைய ப்ரெண்ட்ஸ்லா கிடையாது..ரெண்டு மூணு பேர்தான்..அவங்களும் இப்போ அப்ராட்ல இருக்காங்க..சோ சண்டே புல்லா வீட்டுலதான்..

ஓ..நைஸ்..அக்சுவலி நா வளர்ந்தது புல்லாவே பெங்களுர்தான்..அப்பா பர்ஸ்ட் அங்கதான் வொர்க் பண்ணிட்டு இருந்தாரு..பிஸினஸ்காக தான் இங்க வந்தது ஒரு 7 8 வருஷம் முன்னாடி.. அப்போ நா அங்கயிருந்து வரமாட்டேன்னு சொல்லிட்டேன்..அங்க என் சித்தி வீடு இருக்கு அங்கயிருந்து தான் ஸ்கூல் காலேஜ் எல்லாமே..இங்க அப்பப்போதான் வருவேன்..சோ புல் டைம் அப்பா அம்மா கூடதான்..பட் உங்களபத்தி அப்பா நிறைய சொல்லிருக்காரு அதனாலதான் உங்ககிட்ட ப்ரெண்ட்லியா பழக முடிஞ்சுது இல்லநா நா கொஞ்சம் ரிசவ்ர்டட் டைப்தான் என்றாள் மெதுவாய்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

சற்று பற்கள் தெரியவே சிரித்தவன்,நீங்க ரிசஸர்வ்ர்ட் டைப்பா நம்ப முடிலயே..

அடப்பாவி நல்லவாருமாறி உக்காந்து எல்லாத்தையூம் கேட்டுட்டு இப்போ கவ்ண்டர் குடுக்குறீங்களா..உங்கள போய் எங்கப்பா நல்லவன்னு சொல்றாரே என்று முறைக்க அதற்கும் சிரிப்பே பதிலாய் அவனிடம்..

சரி சொல்லுங்க உங்க பிஸினஸ் ஐடியாவ பத்தி எந்த அளவு யோசிச்ருக்கீங்க??

கார்த்திக் நா சும்மா அம்மாவ சமாளிக்குறதுக்காக சொன்னேன் மத்தபடி ஜாலியா ஊர் சுத்தி பாக்குறதுதான் என் ப்ளான்..நோ நோ தப்பா நினைச்சுராதீங்க ஒரு த்ரீ மந்த்ஸ்க்கு அப்பறமா பிஸினஸ் பத்தி யோசிக்கலாம்நு இருக்கேன் இப்போதைக்கு விட்டுருங்களேன்..

அடுத்து அவர்கள் அங்கிருந்த புத்தக கடை,மியூசிக் ஷாப் என்று நுழைந்து சஹானா தனக்கு வேண்டியவைகளை எடுத்து கொண்டாள்..இப்போது பார்க்கும் இவளா அன்று வீட்டில் அத்தனை வால்தனம் செய்தது எனுமளவிற்கு இருந்தது அவளின் விருப்பங்கள்..அதுவும் அவனுக்கு மிகவும் பிடித்த புத்தகங்களை அவள் ஆவலாய் எடுத்தது அவனுக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்தது..

என்ன கார்த்திக் வீட்டுல அவ்ளோ ஆட்டம் போடுறவ இங்க என்னடானா பாரதியார்,சாண்டில்யன்னு சுத்துறாளேநு பாக்குறீங்களா??

ம்ம் கொஞ்சம் கம்மி ஷாக் தான்..அன்னைக்கு நா உங்க வீட்டுக்கு வந்தப்போ நின்னை சரணடைந்தேன் சாங் போய்ட்டுருந்ததே..அப்போவே கொஞ்சம் ஷாக் ஆய்ட்டேன்..பட் எனக்கு ரொம்ப பிடிச்ச சாங் அது..

ஹே சூப்பர் ஜி..அப்போ உங்ககிட்ட நிறைய புக்ஸ் இருக்கா..ஹே ப்ளீஸ் எனக்கு நெக்ஸ்ட் டைம் வரப்போ குடுங்க படிச்சுட்டு தரேன்..

கண்டிப்பா தரேன்..பட் இவ்ளோ டாக்கட்டிவ்வா இருந்துட்டு எப்படி பொறுமையா புக்ஸ் படிக்குறீங்க..??

ஹலோ என்ன வாயாடிநு டீஸெண்ட்டா சொல்றீங்களா??

இவ்வாறாக ஒரு வழியாய் அனைத்தையும் முடித்து அவளை அவள் வீட்டில் இறக்கிவிட்டு தன் வண்டியை எடுத்து கொண்டு கிளம்ப போனவனை தடுத்தாள்..ஒரு நிமிஷம்..இந்தாங்க என தான் வாங்கிய புத்தகத்தில் ஒன்றை அவனிடம் கொடுத்தாள்..என்னவென்று ஏறிட்டவனை,நீங்களும் புக்ஸ் படிப்பேன்னு சொன்னீங்களே சோ உங்க டைம்ம எனக்காக ஸ்பெண்ட் பண்ணதுக்கு என்னோட ஒரு சின்ன கிப்ட்..

இந்த புக் நா ஆல்ரெடி வச்சுருக்கேன் சஹானா..இன்பக்ட் நீங்க வாங்கின நாலுமே நா ஆல்ரெடி படிச்சுட்டேன்..தப்பா எடுத்துகாதீங்க..நீங்க படிங்க ரொம்ப நல்லாயிருக்கும்..ஒரு நொடி முகம் வாடியவள் சட்டென ஏதோ தோன்ற தன் பையிலிருந்து ஒரு பேனாவையெடுத்து ஒரு புத்தகத்தின் முதல்பக்கத்தில் தன் கையெழுத்திட்டு அவனிடம் கொடுத்தாள்..இப்போ நீங்க மறுக்க முடியாது புக் உங்ககிட்ட இருக்கலாம் பட் என் ஆட்டோக்ராப் இதுலதான் இருக்கு சோ இது ஸ்பெஷல்தான்..என்று கண்சிமிட்டி சிரிக்க அவனும் மறுக்காமல் பெற்று கொண்டான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.