(Reading time: 25 - 49 minutes)

08. பெண்ணே என்மேல் பிழை!!! - தீபாஸ்

PEMP
 

ருத்துவமனையில் ஐ.சி யு வில் ஈஸவரன் மருத்துவத்தின் உதவியால் கொஞ்சம் பேசும் நிலைக்கு வந்தார் அஞ்சியோவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது .

தனக்கு சிகிச்சையை ஆரம்பிக்கும் முன் தன் மனைவி பிள்ளைகளுடன் சிறிது தனித்து பேசவேண்டும் என்று டாக்டரிடம் கேட்டுக்கொண்டார் .எனவே டாக்டர் கவிழையா மற்றும் அவள் அம்மா தம்பியை அழைத்து, பேசும்போது அவருக்கு டென்சன் ஏற்படாதவாறு பேசும்படி கூறினார்

ஈஸவரன் தன் மனைவியைப் பார்த்து பார்வதி நான் இப்பொழுது சொல்லும் விஷயம் உனக்கு அதிர்ச்சியாக இருக்கும் ஆனால் எனக்கு எதுவும் ஆகிவிட்டால் வீட்டின் சூழ்நிலை தெரியாமல் நீ ஸ்தம்பித்துப் போய் விடக்கூடாது. உனக்கு எல்லாம் தெரிந்திருக்கவேண்டும் என்பதால் நடந்ததை நான் கூறுகிறேன் என்றார்.

அவர் அவ்வாறு கூறவும் பதறிய பார்வதி உங்களுக்கு எதுவும் ஆகாது நீங்கள் நல்லபடி குணமாகி வீட்டிற்கு வந்துவிடுவீர்கள் என்றாள்.

நான் என் மகள் கவிக்கு விளக்கம் சொல்லும் நிலையில் இருக்கிறேன். அவள் என் உடல் நிலை காரணமாக இப்பொழுது என்னிடம் கேள்வி கேட்காமல் இருக்கலாம் ஆனால் என்னால் நான் ஏன் அப்படி செய்தேன்? என்று சொல்லாமல் இருக்க முடியாது என்றார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "நின்னை சரணடைந்தேன்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவர் மனமும் உடலும் கஷ்ட்டப்படுவதை பார்க்க முடியாமல் கவிழையா கூறினாள், அப்பா உங்களைப் பற்றி எனக்குத் தெரியும் நீங்கள் எனக்கு நல்லதை மட்டும்தான் செய்வீர்கள். நீங்கள் எதுவும் பேசவேண்டாம். குணமாகி வீடு வந்ததும் மற்றதைப் பற்றி யோசிப்போம் என்றாள்.

அவள் கூறியதற்கு மறுப்பாகத் தலையை அசைத்தவர் அருகில் கவியை உட்காரச்சொல்லி சன்னமான குரலில் சொல்ல ஆரம்பித்தார் .

என் அருகில் நேற்று ஒருவர் ரெஜிஸ்டர் ஆபீஸ்ல் இருந்தாரே அவர் பெயர் மணிகண்டன். நான் வேலை பார்க்கும் வங்கியில் அவர் மில் கட்டுவதர்க்கு என்று இரண்டு கோடி ரூபாய் கடன்பெற்றுள்ளார் அதற்கு சூரிட்டி எதுவும் இல்லாமல் நாம் கையெழுத்திட்டு அவருக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளதாக உள்ளது.

ஆனால் அது எப்படி என்று தெரியவில்லை கவி. நான் லோன் சேங்சன் ஆவதற்கு கையெழுத்துபோடும் போது , கிளர்க் டாக்குமென்ட் எல்லாம் சரியாக இருப்பதாக காட்டியதாகத்தான் எனக்கு நினைவிலுள்ளது.

ஆனால் கடன் வாங்கியதில் இருந்து அவர் ஒரு மாதம்கூட கட்டவேண்டிய பணத்தை கட்டாததால், நோட்டீஸ் விட பார்க்கும் போது தான் எனக்கு இந்த விபரம் தெரியவந்தது என்றார்.

அதனால் அந்த கடனுக்கு நான் கவனக்குறைவாக கையெழுத்திட்டு வழங்க ஒப்புதல் கொடுத்த காரணத்திற்க்காக, நான் தான் அந்த இரண்டுகோடி பணத்தை கட்ட வேண்டும் அல்லது சிறை செல்லவேண்டும் என்று என் ஹெட் ஆபீசில் இருந்து எனக்கு நோட்டீஸ் வழங்கியிருக்கிறார்கள்.

எனவே லோன் வாங்கிய மணிகண்டனைப் பார்த்து பணத்தைக் கட்டச் சொன்னேன். அதற்கு அவர் தன்னால் கட்ட முடியாத் நிலமையில் உள்ளதாகவும் தன் மில்லை விற்கும் நிலைக்கு திடீர் என்று வந்துவிட்டதாகவும் கூறினார்.

மேலும் தன்னுடைய மில்லை ஒருவர் விலைக்கு வாங்க முன் வருவதாகவும் அவரிடம் பணம் பெற்று தரமுடியமா என்று பார்பதாகக் கூறினார்.

எனக்கு வங்கியில் நெருக்கடி கொடுத்த காரணத்தினால் நான் சரி இப்பொழுதே வாருங்கள் அவரைபோய் பார்க்கலாம் என்று கூறினேன் .

கதிர் என்பவரிடம் என்னை கூட்டிப்போனார், .அவர் தன் நண்பனுக்கு அந்த மில்லை வாங்கப்போவதாகக் கூறினார் . மில்லை ரெஜிஸ்டர் பண்ணிய உடன் வங்கி லோன் தொகை முழுவதுவும் அடைக்கப்போவதாக கதிர் கூறினார்.

மேலும் நான் உன்னை வேலையிலிருந்து ரிலீவ் செய்வதற்காக ஐம்பதுலட்சம் பணத்திற்கு வீட்டை விலைபேசியதையும் அந்த கதிர் என்பவன் தெரிந்துவைத்திருந்தான்.

அவன் நண்பனுக்காக அந்த வீட்டையும் என்னிடம் இருந்து விலைபேசினார், எனக்கு அப்பொழுது இருந்த நெருக்கடியான சுழலில் சரியென்று ஒத்துக்கொண்டேன் .பின் நேற்று காலையில் என்னை தொடர்பு கொண்டு ரெஜிஸ்டர் அலுவலகத்திற்கு வீட்டுப்பத்திரத்துடன் வரச்சொன்னார்.

அங்கு போனப்பிறகுதான் தெரிந்தது அந்த கதிர் உன் எம்.டீ. மஹிந்தனின் நண்பன் என்று தெரிந்தது என்றவர் சிறிது நேரம் அமைதியாகி மீண்டும் பேச ஆரம்பித்தார் .

கதிர் கூறினான், ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு கவியும் வரவேண்டும் என்றும், நம் வீட்டை உன்பெயரிலும் மஹிந்தன் பெயரிலும் ஜாய்ன்ட் ஆக நான் மாற்றிக்கொடுக்க வேண்டும் என்றும் அதற்கு ஒத்துக்கொண்டால் மட்டுமே மில்லை வாங்குவதாகவும் வங்கிலோனை கிளியர் பண்ணுவதாகவும் கூறினார் .

எனக்கு அப்பொழுது என் வங்கியில் இருந்த நெருக்கடியில் எங்கே ஜெயிலில் என்னை போட்டு விடுவார்களோ? உங்கள் மூவரையும் நான் தெருவில் நிற்க வைத்துவிடுவேனோ? என்று பயந்து அவர்கள் கேட்டதற்கு சரியென்று ஒத்துக்கொண்டேன் என்றார்.

ஆனால் உன்னுடன் அந்த மஹிந்தன் ரெஜிஸ்டர் ஆபீஸில் வந்து இறங்கியதைப் பார்த்ததும் உனக்கு நான் துரோகம் செய்துவிட்டோம் என்றும் உனக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டிய நானே உன்னை அடுத்தவனின் பிடியில் சிக்கக் காரணமாகிவிட்டேனே! என்று குற்றஉணர்வில் தவிக்கிறேன் என்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.