(Reading time: 25 - 49 minutes)

மேலும் எக்காரணத்தையும் கொண்டும் இக்கல்யாணத்தின் மூலம் வரும் சொத்தையும், மரியாதையும் இழக்க அவள் தயாராகயில்லை. கல்யாணம் முடியும் வரை இனி அவன் முன்னால் பணிந்துபோவதுபோல் நடிக்க நினைத்தாள். கல்யாணம் முடிந்ததும் எல்லாவற்றிற்கும் சேர்த்து மஹிந்தனை பழிவாங்க முடிவுசெய்தாள்.

கவிழையா, மஹிந்த்னின் காரில் ஏற மறுக்கத்தான் முதலில் நினைத்தாள். ஆனால் கதிர் மற்றும் டிரைவர் மூர்த்தியுடன் மேலும் அன்று ஹோட்டலில் பார்த்த மஹிந்தனின் வேலையாட்கள் என்ற பெயரில் வந்த இரண்டு தடியன்கள் தூரமாக் நின்று தன்னை பார்ப்பதை கண்டவள் இத்தனை பேரை மீறி என்னால் செல்லமுடியாது என்பதை அறிந்தவள் பேசாமல் காரில் ஏறி அமர்ந்தாள் .

கார் செல்லச்செல்ல கவிழையாவிற்கு தன்னை பல நினைவுகள் சூழ, தன் அப்பா, வீடு மட்டுந்தான் மஹிந்தன் தன்னுடன் ஜாய்ன்டாக ரெஜிஸ்டர் பண்ணியிருப்பதாக நினைத்து கையெழுத்து போட்டிருக்கிறார் .

பாவம்! அவருக்குத்தெரியாமல் தன் மகளின் கல்யாணத்திற்கும் சேர்த்து சாட்சி கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள் என்று தெரிந்தால் உயிரையே விட்டிருப்பார், நான் மீளமுடியாத பந்தத்தில் சிக்கயிருக்கிறேன் என்பது அவருக்குத் தெரியாது

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

.இப்பொழுது நான் என்னசெய்வது என்று குழம்பிப்போனாள். தன்னால் மஹிந்தனை மாதிரி குணம் உடயவனுடன் வாழ முடியாது. ஆனால் அவனைவிட்டு இனி வேறு ஒருவனை கல்யாணம் செய்ய முடியவும் முடியாது என்று நினைத்தாள். .

மஹிந்தன் நல்லவனாக தனக்கு அறிமுகம் ஆகியிருக்கக்கூடாதா என்று அவள் மனதில் ஏக்கம் பிறந்தது. பின் “சே” அவனைப்பற்றி நான் எப்படி இப்படி நினைக்க முடிகிறது என்று அவள் மேலேயே அவளுக்கு கோபம் வந்தது .

என் சம்மதம் இல்லாமல் எனக்கே தெரியாமல் என்னை கல்யாணம் செய்தவனுடன் நான் எப்படி வாழ முடியும். பெண்கள் என்றாள் கிள்ளுக்கீரையாக நினைத்துவிட்டானா? .என்று அவன் மேல் கோபமும் வெறுப்பும் கொண்டாள் .

சில நாட்கள் கழித்து.... கவிழையாவின் அப்பா ஈஸவரனுக்கு இதயக் குழாயின் அடைப்புக்கு சென்ட் வைத்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துவிட்டனர் .அவர் வீட்டிற்கு வரும் முன்பிருந்தே கவியை ஆபீஸ்ற்கு வரச்சொல்லி மெசேஜ் வந்ததால் ழையா வேலைக்கு வந்துவிட்டாள்.

புதிதாக ஆரம்பித்த ப்ராஜெக்டின் அனைத்துப் பொறுப்பும் கவிழையாவிடம் இருந்தது. அவள் உத்தரவு இல்லாமல் எதுவும் நடக்காது என்பதை மற்றவர்களை உணரவைக்கும்படி மஹிந்தன் கவிழையாவை முன் நிறுத்தி பின்னால் இயக்கிக்கொண்டிருந்தான்

வீட்டில் ஈஸவரன் சற்று உடல் தேறி வந்தாலும் மனதளவில் கவலைபட்டுக்கொண்டிருந்தார் தன் மகள் இன்னும் மஹிந்தனிடம் வேலைக்குச் செல்வதை தான்னால் தடுக்க முடியாமல் இருப்பதைப் பார்த்து அவருக்கு வருத்தமாக இருந்தது .

அன்று காலை உணவை முடித்தவிட்டு யோசனையாக உட்கார்ந்திருந்தார் ஈஸ்வரன். அப்பொழுது அவரின் நண்பன் சீனிவாசன் தன் நண்பனைப் பார்க்க வந்தார் .

அவரைப்பார்த்ததும் வாப்பா சீனிவாசா! என்று புன்னகையுடன் வரவேற்றார். தன் நண்பனின் புன்னகையை மீறி முகத்தில் கவலை தெரிவதைப் பார்த்தவர் எப்படிஇருக்கிறாய் ஈஸ்வரா என்று கேட்டார்.

நீ எப்பொழுது அமெரிக்காவில் இருந்து வந்தாய் உன் பிள்ளைகளுடன் அங்கு போயிருப்பதாக சொன்னார்கள் என்றார்.

அதற்கு, நம்மால் எல்லாம் அங்கு ஒரு மாதத்திற்கு மேல் இருக்கமுடியாது எப்போதுதான் இந்தியா வருவோம் என்று ஆகிவிட்டது என்றவர்.

என் மகன் தனுஷ் தான் கல்யாணப் பேச்செடுத்தாலே ஏதாவது காரணத்தைச்சொல்லி நலுவிகொண்டிருந்தவன் உன் பெண்னை பார்த்ததும் தான், தானாகவே கல்யாணத்தை பற்றிய பேச்செடுத்தான்.

ஆனால் நீ தான் பிடி கொடுத்து பேசமாட்டேன் என்கிறாய் என்றவர், சரி இப்ப எதெற்கு அந்தப் பேச்சு உன் உடம்புக்கு திடீர் என்று என்ன ஆச்சு என்று கேட்டார் .

மனுஷனுக்கு கவலை வந்துவிட்டால் உடலில் தானாகவே நோயும் குடிவந்துவிடுகிறது என்றார் ஈஸவரன்.

அவர் அவ்வாறு சொன்னதும் உனக்கு என்ன கவலை ஈஸ்வரா, உன் பெண்ணின் அழகுக்கும் குணத்திற்கும் நீ, நான் என்று மாப்பிள்ளை போட்டிபோட்டுக் கொண்டு வருவார்கள், உன்மகனும் நல்ல புத்திசாலிப் பைய்யன் நீயும் உனக்கு ஏற்றார் போல் சேர்த்துவைத்துள்ளாய் என்றார் . நானும் அப்படித்தான் நினைத்திருந்ததேன் சீனிவாசா, ஆனால் இப்பொழுது என்ன செய்து என் மகளை காப்பாற்ற என்று முழித்துக்கொண்டு இருக்கிறேன் என்றார்.

நீ உன் மகன் தனுஷ்க்கு என் மகளை கேட்டபோதே நான் கல்யாணத்திற்கு சரி சொல்லியிருந்தால் என் மகள் இந்த பிரச்சனையில் சிக்காமல் இருந்திருப்பாள் என்றார்.

என்னப்பா சொல்லுற உம்மகளுக்கு இப்போது என்ன பிரச்சனை என்று கேட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.