(Reading time: 25 - 49 minutes)

வர் கூறியதைகேட்ட கவி ,அப்பா இப்பொழுது எதுவும் மனதில்போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள் எங்களுடைய பலமே நீங்கள் தான் நீங்கள் எங்கள் பக்கத்தில் இருந்தால் எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் எங்களால் எதிர்த்து நிற்க முடியும். எனவே நீங்கள் தைரியமாக மருத்துவத்திற்கு ஒத்துழைப்புக் கொடுத்து சரியாகி வீட்டிற்கு வாருங்கள் என்றாள்.

மகளிடம் மனம் விட்டு பேசியதால் ஈஸவரனுக்கு தன் மனச்சுமை குறைந்ததுடன் தன் மகளுக்கு தான் பக்க பலமாக இருப்பதற்கு உயிருடனிருக்க முயலவேண்டும் என்ற எண்ணம் வலுப்பட்டது.

ஐ.சி.யூவில் ஓரத்தில் இருந்த செவிலியர் பேசன்ட்டிற்கு மருந்து கொடுக்கும் நேரம் வந்துவிட்டதாலும் நிறைய நேரம் பேசி தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்றும் கூறி மூவரையும் வெளியேற்றினாள்.

வெளியில் வந்ததும் தன் அம்மாவும் தம்பியும் அவளிடம் கேள்விகளை தொடுக்க முனைவதை பார்த்தவள் . இருவருக்கும் பொதுவாக என்னை இப்பொழுது எதுவும் கேட்காதீர்கள். எனக்கு சற்று தனிமையும், ஓய்வும் வேண்டும் என்று கூறினாள் .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

தன் பேக்கை எடுத்தவள், நான் வீட்டிற்க்குச்சென்று கொஞ்சம் ரெப்ரஷ் ஆகி வருகிறேன் என்றும் அதுவரை தன் தம்பியை அம்மாவின் உதவிக்கு இருக்கும் படி கூறி வெளியேறினாள்.

அவள் அறையை விட்டு வெளியில் வருவதைப்பார்த்த கதிர் வேகமாக வந்து நான் கதிர் மஹிந்தனின் நண்பன், விசுவாசி,வேலைக்காரன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அவனின் வித்தியாசமான அறிமுகத்தில் சற்று நின்று அவனைப் பார்த்தவள் தன் அப்பா கூறிய கதிர் இவன்தான் என்று நினைத்துகொண்டாள்.

அவள் தன்னைப்பார்த்து எதுவோ யோசித்துக் கொண்டிருப்தைப் பார்த்தவன் எதுவும் வேண்டுமா சிஸ்டர் என்று கேட்டான் .

அதற்கு கவிழையா இன்னும் உங்கள் மஹிந்தன் என்னை வைத்து என்னென்ன கேம் விளையாடப்போகிறார்? என்று எனக்குச் சொல்ல முடியுமா என்று கேட்டாள்.

அவள் அவ்வாறு கேட்டதும் கதிருக்கு ஒரு நிமிடம் அவளின் நிலமையைப் பார்க்க பாவமாக இருந்தது. மறு நிமிடம் தான் மஹிந்தனின் நண்பன் என்ற காரணத்திர்க்காக என் வாழ்க்கையை வளமாக மாற்றியவன், அவனின் காதல் கிடைக்கப்பெற்ற இந்தப்பெண் எப்படி பாவமானவள் ஆவாள்? இவள அதிர்ஷ்டமானவள். என்று தனக்குள்ளே கூறிக்கொண்டான்.

வெளியில் அவளைப்பார்த்து சிரித்துக்கொண்டு என் நண்பனின் அன்புக்குச் சொந்தமான உன்னை என் தங்கை என்று நான் நினைத்து சொல்கிறேன், என் நண்பன் அவனுடைய வாழ்க்கையாக உன்னை நினைப்பது உன் அதிர்ஷ்டம் என்றான்.

அவன் கூறியதைகேட்டவள் இவன் விசுவாசத்திற்கு “கோல்டு மெடல்” கொடுக்கலாம் என்று மனதிற்குள் நினைத்தவள், வெளியே அவனிடம் இப்பொழுது உங்களுக்கு என்ன தெரியனும்? நானெங்கே போகிறேன் என்று தானே? , நான் என் வீட்டிற்கு போகிறேன் என்றாள்.

அவள் கூறியதும் போனில் டிரைவரை கூப்பிட்டு வாசலுக்கு காரை கொண்டுவரச் சொல்லி அவளை முன்னால் நடக்கவிட்டு பின்னால் சென்றான்.

கவிழையா மருத்துவமனையின் வாசலில் படியிறங்கும் போது அங்கு ஐஸ்வர்யா டாக்டரை பார்ப்பதற்கு படிஏறினால் இருவரும் ஒருவரை ஒருவர் பாத்ததும் ஐஸ்வர்யாவின் முகம் ஒரு நிமிடம் கொடூரமாக மாறி, பின் பின்னால் வந்த கதிரைப் பார்த்தவள் தன் முகத்தை சிரித்தது போல் வைத்துக்கொண்டாள்.

இங்கே நீங்கள் யாரைப்பார்க்க வந்திருக்கிறீர்கள் கவிழையா? என்று கேட்டாள் .ஒரு நிமிடம் ஐஸ்வர்யாவைப் பார்த்து இவளுக்கு நான் சட்டப்படியான மஹிந்தனின் மனைவி என்று தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவாள் என்று நினைத்து கவலை மற்றும் தான் செய்யாத குற்றத்திற்கு அவளின் முன் குற்றவாளி போல் நிற்பதை உணர்ந்தாள்.

உங்கள் போன் நம்பர் கொடுங்கள் ஐஸ்வர்யா எனக்கு உங்களிடம் முக்கியமான விஷயம் பேசவேண்டியுள்ளது என்று கேட்டாள் கவிழையா .

அவள் அவ்வாறு கேட்டதும், ஆகா தானா மாட்டிக்கொள்கிறாள். இருடி உன்னிடம் பேசி உன்னை என்ன செயயப்போகிறேன் பார்? என்று மனதிற்குள் நினைத்தபடி தன் மொபைல் நம்பரை சொல்லபோகும் போது அவர்கள் அருகில் வந்த கதிர் ஐஸ்வர்யாவைப் பார்த்து தன் போனை காண்பித்து மஹிந்தன் இதில் உங்களுடன் பேச வெயிட் பண்ணுகிறான் என்று கூறி தன் கையிலிருந்த மொபைலை அவளிடம் கொடுத்தான்.

அந்தப்பக்கம் இருந்து மஹிந்தன் ஐஸ்வர்யா நீ இப்பொழுது ழையாவுடன் எந்த பேச்சும் வைத்துக்கொள்ளாமல் அந்த இடத்தைவிட்டு, இல்லையில்லை..... அந்த மருத்துவமனையை விட்டே உன் காரில் ஏறிச்செல்வதை கதிர் என்னிடம் சொல்லவேண்டும்.

இல்லை, அப்படியெல்லாம் நான் போகமாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டு ழையாவுடன் பேசி பிரச்சனை செய்ய நினைத்தால் இப்பவே கல்யாணப் பேச்சை நிறுத்திடுவேன் .அதுமட்டும் செய்யமாட்டேன் சொல்லாத பலவற்றையும் செய்வேன் என்றான்.

அவனின் குரலின் கட்டளையையும் கடுமையும் கேட்க்கும் யாராலும் மீறிச் செயல்பட அச்சம் எழாமல் இருக்காது .எனவே அவன் சொன்னதை செயல்படுத்த ஐஸ்வர்யா காரை நோக்கிச் போய்விட்டாள்.

ஐஸ்வர்யாவிற்கு முதலில் அவனின் கட்டளையைக் கேட்க கோபம் தான் வந்தது. இருந்தாலும் தான் இங்கு வந்து டாக்டரை பார்க்க வந்த காரணம் என்னவென்பதை மஹிந்தனுக்கு தெரியக்கூடாது என்று நினைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.