(Reading time: 25 - 49 minutes)

வன் என்னிடம் இப்படி பேசுவதை என்னால் ஏற்கவும் முடியவில்லை என நினைத்த கவிழையாவிற்கு தலை வலிக்க ஆரம்பித்தது . முதலில் வீட்டிற்குப் போனால் சரி, என்று நினைத்துக்கொண்டு முகம் கழுவச் சென்றாள. மாறிமாறி தோன்றும் அவள் கண் மற்றும் முகத்தின் பாவங்களையும் ரெஸ்ட்ரூமிற்கு அவள் போகும்வரை பார்த்துக் கொண்டே இருந்தான்.

மகிந்தனுக்கே அவன் செயலும் பேச்சும் ஆச்சரியமாக இருந்தது. இதுவரை அவன் தங்கை மதுரவைத் தவிர யாரையும் சமாதானப்படுத்தும் விதத்தில் பேசியதில்லை இந்த பொண்ணுங்களை சமாளிப்பது ரொம்ப கஷ்ட்டமான விஷயம் என்று நினைத்தவன் ,இனி ஐஸ்வர்யாவுடன் தனக்கு நடக்கும் கல்யாண ஏற்பாடுகள் பற்றி மீடியா மூலம் ழையாவிற்கு தெரியவந்தால் எப்படி சமாளிப்பது என்று எரிச்சலாக வந்தது.

அந்த எரிச்சல் ழையா வெளியில் வந்ததும் அவளைபார்த்து காணாமல் போனது . ஆவலுடன் சுமூகமாக இருக்க ஆசை வந்தது .ழையா அவனுடைய மனைவி என்ற உரிமையுடன் அவள் கைகோர்த்து தன்னுடன் சேர்த்து அணைக்க ஆசை வந்தது .

ஆனால் கவிழையா தன் துப்பட்டாவை தன் மேல் சரியாக போட்டுக்கொண்டே வந்தவள் திடீர் என்று மஹிந்தனின் அணைப்பில் சிக்கியதும் தன்னை காத்துக் கொள்ளும் நோக்குடன் தன் பலம் முழுவதுவும் திரட்டி மஹிந்தனை தள்ளி விட்டாள் .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

அவளின் அச்செயலை அப்பொழுது எதிர் பார்க்காத மஹிந்தன் தடுமாறி விழாமல் நின்றவன் கோபத்துடன் ழையாவைப் பார்த்தான் .

அவள் அங்கு சாப்பாட்டு மேஜையின் மேல் உள்ள கத்தியை எடுத்து தன் கை மணிகட்டிள் வைத்திருந்தால், கண்கள் கோபத்தில் ஜொலித்துக்கொண்டு இருந்தது .

என் பக்கத்தில் வந்தாள் இந்த கத்தியால் நான் என் நரம்பை அறுத்து செத்துப்போவேன் .என்று ஆங்காரமாக கத்தினாள் அவள் நின்ற நிலை சொன்னதைச் செய்வேன் என்று கூறும் படி இருந்தது .

மஹிந்தன் விறுவிறு என்று கோபத்துடன் கதவை நோக்கிச்சென்றான் பின்னாலேயே கத்தியுடன் வெளியே வந்தவள் உமா பார்க்காதவாறு கத்தியை மறைத்து தன் பேக் ஐ எடுத்துக் கொண்டு மஹிந்தனுடன் சென்று காரில் ஏறினாள்.

மகிந்தனுக்கு பெறும் அவமானமாக இருந்தது ,அவனை இதுவரை எந்த பெண்ணும் கவிழையவைப்போல் சலனப்படுத்தியதுமில்லை. அவனிடன் நெருங்கி பழகிய பெண்கள் தான் தொடுவதை மறுத்ததும் இல்லை.

விருப்பம் இல்லாத யாரையும் இதுவரை நான் நெருங்கியதில்லை ஆனால் இவள் என்னை வெறுத்தாலும் இவளை பார்த்தாள் என்னால் இவளை விட்டு விலகிச்செல்ல முடியவில்லை என்று கோபம், வருத்தம், ஆதங்கம் நிறைந்த மனதுடன் ட்ரைவரை தவிர்த்து தானே புயல் வேகத்தில் காரை செலுத்தினான்.

கார் வேகமாக போவதால் பயத்துடன் கண்களை மூடிக்கொண்டு சீட்டின் கைப்பிடியை கெட்டியாக பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த கவிழையாவைப் பார்த்தவன் தன் வேகத்தை குறைத்து அந்த இருக்கமான சூழ்நிலையை மாற்ற காரில் உள்ள எப்.எம் ரேடியோவை ஆன் செய்தான் .அதில் மஹிந்தனின் மனதை கவிழையா விற்கு உணர்த்தும் விதமாக பாடல் வந்தது.

ஏன் பெண் என்று பிறந்தாய்

ஏன் என் கண்ணில் விழுந்தாய்

ஏன் ஒரு பாதி சிரித்தாய் ,

என் உயிர்பூவைப் பறித்தாய்.

அந்த வரிகளை கேட்கும் போது முதலில் மாலில் ழையா வை பார்க்கும் போது, அவள் தோழியிடம் எதோ சொல்லி சிரித்தாள் மஹிந்தனுக்கு அந்த காட்சி கண்ணில் தோன்றியது .

முதல்நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய் .

முறையா என்றேன் கண்கள் பறித்தாய்.

அன்று இரவு அவன் தூங்க முடியாமல் தவித்து தன் நண்பன் கதிருக்கு போன்செய்த ஞாபகம் வந்து ஓர் விரக்தி சிரிப்பு ஒன்று அவன் உதட்டில் பூத்தது

என் வலி தீர ஒரு வழி என்ன

என் பனிப்பூவே மீண்டும் பார்த்தாள் என்ன

அவனுக்கு தன் மனதின் ஓசையை அந்த பாடல் கவிழையா விற்கு சொல்வதுபோல் தோன்றியது அவன் அர்த்தத்துடன் அவளை பார்த்துக் கொண்டே காரை மிதமான் வேகத்தில் ஓட்டிக்கொண்டு வந்தான் ,

ஆனால் கவிழையாவிற்கு அவன் செயல் எரிச்சலைத் தந்தது , அவளுக்கு .அவனின் முக பாவத்தை பார்க்க விரும்பாமல் எட்டி ரேடியோவை ஆப் பண்ணினாள்.

ஏன் ழையா ஆப் பண்ணினாய்? என்று கேட்டான். அதற்கு ழையா சகிக்கலை அதுதான் ஆப் பண்ணினேன் என்றாள் .நைஸ் சாங் என்று கூறி மீண்டும் ஆன் செய்தான் .

நீ சூடும் ஒரு பூ தந்தால்

என் ஆஸ்த்தி எல்லாம் தருவேன்.

என்ற வரியை கேட்டதும் அவளை பார்த்து தன் இமை மூடி ஆமாம் என சைகை செய்தான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.