(Reading time: 25 - 49 minutes)

வர்கள் போனதும் அவர்கள் பேசிய வார்ர்த்தைகளைத் தாங்க முடியாமல் அழுது தீர்த்தாள். .பின் மஹிந்தனின் மேல் தன் ஒட்டு மொத்த கோபத்தையும் கொண்டுவந்தாள்.

தன்னை இதுவரை தப்பாக பார்க்கும் படி கூட தான் நடந்து கொண்டதில்லை ஆனால் தவறு செய்யாமலேயே தன்னை தப்பானவளாக இந்த உலகிற்கு மஹிந்தனால் அடையாளம் காட்டப்படுவதை கவிழையாவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அவளால் தன்னுடைய வேலைகளை அதற்குமேல் கவனத்துடன் செய்யமுடியவில்லை யாரைப்பார்த்தாலும் தன்னை மோசமான பெண் என்று ஏலனத்துடன் பார்பதுபோல் இருந்தது .

எப்போதுதான் வீட்டிற்குப் போவோம் என்று தோன்றியது வீட்டிக்குப் போனதும் தனக்கு இன்னும் ஒரு அதிர்ச்சி காத்திருப்பதை அறியாமல் வீட்டிற்கு போய் தன் அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்து ஆறுதல் அடைய நினைத்தாள் .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

அவள் கொதிப்புடன் இருப்பதை அறியாமல் எப்பொழுதும் போல் அலுவலகத்திற்குள் வந்த மஹிந்தன் கவிழையாவின் அருகில் சத்தம் எழுப்பாமல் வந்து நின்றான் .

அவள் கோபத்தின் காரணமாக தன் பக்கத்தில் இருந்த நோட்பேட்டில் தன் ஆத்திரம் முழுவதையும் காண்பித்து கைக்கு வந்ததுபோல் கிறுக்கிக்கொண்டு இருந்தாள்.

அவளின் பின்னால் நின்ற மஹிந்தன் அவள் செயலைபார்த்து என்ன செய்கிறாய் ழையா? என்று கேட்டான்

அவனின் குரலைகேட்டு கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தைப் பார்த்தவன் எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்தான் .அங்கு உமா இருப்பதைப் பார்த்தவன் கவிழையுடன் இப்பொழுது பேசினால் காரசாரமான் விவாதத்தில் முடியும் என நினைத்தவன். உமாவின் முன் அதை விரும்பாத் என்னத்தில், பேபி வா ரூமிற்கு என்று கூறி முன்னாள் நடந்தான்.

அவன் ரூமிர்க்கு கூப்பிட்டதும் கோபம் தலைக்கு ஏற உமா இருப்பதையும் பொருட்படுத்தாமல் ஏன் என்னை ரூமிற்கு கூப்பீடு மிச்சம் மீதி இருக்கும் என் கௌரவத்திற்கும் வேட்டுவைக்கப் போகிறீர்களா? என்று கேட்டவள் .இனி என்னால் அலுவலக வேலையை இங்கு இருந்துதான் பார்க்க முடியும், சொல்லும் வேலைகளை இங்கேயே சொல்லுங்கள் என்று கோபத்தில் உதடுதுடிக்க கண்கள் சீற்றத்தில் பளபளக்கக் கூறினாள் .

அவள் கூறிய தோரணையும் கண்களின் சீற்றத்தையும் அந்த நேரத்திலும் மஹிந்தனுக்கு ரசிக்கவே தோன்றியது .இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் உமாவின் முன் கெத்தாக பேச முடிவேடுத்து ழையா என்னை கோபப்பட வைக்காதே எதுவாக இருந்தாலும் உள்ளே வந்து பேசு என்று கூறி அவளின் அருகில் வந்தவன் ழையாவின் கைபிடித்து தரதர என்றுஇழுத்துக்கொண்டு தன் அறையினுள் அவளைத் தள்ளிவிட்டு கதவை அடைத்தான்.

வெளியில் கோபமாக பேசிய ழையா அவன் தன்னை கைபிடித்து இழுத்து கதவை அடைத்ததும் அவனை தடுக்க முடியாத தன் நிலைமையை பார்த்து அழுகை வந்தது.

மஹிந்தனுக்கு அவள் கோபமாக பேசும்போது எதிர்த்து நின்று அவளை மிரட்ட முடிந்தவனுக்கு அவள் அழுவதைப் பார்த்ததும் தாங்கமுடியாமல் கெஞ்ச ஆரம்பித்தான்.

ப்ளீஸ் ழையா.. அழாதே என்னால் நீ அழுவதைப் பார்க்க முடியவில்லை என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும். நான் அழுகவேண்டும். அதைப்பார்த்து ரசிக்க வேண்டும். என்று எல்லாம் செய்துவிட்டு இப்பொழுது எதுக்கு ப்ளீஸ் என்று சொல்லி நடிக்கிறீர்கள் என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதும் யார் உன்னை என்ன சொன்னார்கள்? உன் மனதை கஷ்ட்டப்படுத்தும் யாரையும் நான் சும்மா விடப்போவதில்லை யார் என்ன சொன்னார்கள் என்று சொல் என்றான்.

அவன் அவ்வாறு கூறவும் “ஆமாம்” என் மனதை உங்களைத்தவிர மற்ற யாரும் கஷ்டப்படுத்தக்கூடாது அதற்கு முழு பொறுப்பையும் நீங்கள் தானே எடுத்துக்கொண்டீர்கள் என்ற கவிழையா

நான் இதுவரை யாரும் என் கேரக்டரை தவறாக ஒரு சொல் சொல்லும்படி நடந்து கொண்டதில்லை

ஆனால் இப்பொழுது என்னைப்பார்த்து நான் உங்களின் கீப் என்கிற மாதிரி என்னை மற்றவர்கள் பேசும் படியும் .உங்கள் வருங்கால மனைவி ஐஸ்வர்யாவிற்கு துரோகம் செய்யும் ஒருத்தியாக கேவலமான நிலையில் என்னை நிறுத்திய நீங்கள், நான் அழுவதை பார்க்கமுடியவில்லை என்று சொல்வது கேளிக்கூத்தாக உள்ளது என்றாள்

அவள் அவ்வாறு கூறவும் ஓய்ந்துபோய் சேரில் அமர்ந்தவன் தன் மூச்சை உள்ளிழுத்து தன் மனதில் தோன்றிய பல குழப்பத்தை கட்டுக்குள் கொண்டுவந்தவன் சிறிது இளகிய குரலில் சொல்ல ஆரம்பித்தான் .

இங்கே பார் ழையா, நீ நினைப்பதுபோல் நான் உன்னைப் பழி வாங்கவேண்டும் என்று உன்னை எனக்கு அருகில் வைத்துக்கொள்ளும் செயல்களைச் செய்யவில்லை , ஆனால் உன்னை என்னவளாக மட்டும் தான் என்னால் நினைக்க முடிகிறது .

ஒன்றை மட்டும் புரிந்து கொள். நீ இப்பொழுது என் மனைவி ஆனால் அதை பகிரங்கமாக எல்லோரிடமும் சொல்லும் சூழ்நிலை இப்பொழுது இல்லை.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் போ போய் ரெப்ரஷ் ஆகிவா நான் உன்னை உன் வீட்டில் டிரா பண்ணுகிறேன் ,மீதி வேலைகளை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி ரெஸ்ட்ரூம் இருக்கும் பக்கத்தை சுட்டிக்காட்டினான் .

அவன் கூறியதை கேட்டவள் பதில் பேச விரும்பாமல் மனதிற்குள், நம்மிடம் இவன் கோபப்பட்டு சண்டையிட்டால் திரும்ப நானும் கோபப்படலாம் ,ஆனால் என்னிடம் இவன் தாழ்ந்து பேசினால் நான் எப்படி என் கோபத்தை வெளிக்காண்பிப்பேன்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.