(Reading time: 25 - 49 minutes)

வர் கேட்டதும் இதை வெளியில் யாரிடமும் சொல்ல யோசனையாகத்தான் இருந்தது ஆனால் உன்னிடம் சொல்வதால் என் மகளுக்கு ஏதாவது நல்லது நடக்க்கலாம் என்பதால் உன்னிடம் இதைச்சொல்கிறேன் என்றார்.

பின் சிறிது யோசனைக்குப்பிறகு கவிழையா வேலையில் சேர்ந்ததிலிருந்து தங்கள் வீட்டை ரெஜிஸ்டர் ஆபீசில் கவிழையா மஹிந்தன் இருவர் பெயரிலும் தான் மாற்றிக் கொடுத்ததுவரை அனைத்தையும் கூறினார் .

அவர் கூறி முடிக்கவும், இப்படியுமா நடக்கும்! நீ மஹிந்தன் என்று கூறுவது எஸ்.வி.என்.மோட்டார்ஸ்ன் வாரிசு மஹிந்தனைத்தானே? என்று கேட்டார் .

அதற்கு “ஆம்” என்று ஈஸவரன் கூறவும் அவர்கள் எவ்வளவு பெரிய செல்வாக்கும் பணபலமும் உள்ளவர்கள் அவர்களிடம் போய் இப்படி மாடிக்கொண்டாயே! என்று வருத்தப்பட்டவர் நான் என் மகன் தனுஷ்சிடம் பேசி ஏதாவது நம்மால் செய்யமுடியுமா என்று பார்க்கிறேன் என்றார் .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அடுப்படியில் இருந்து வந்த பார்வதி அவர்கள் இருவரும் எதுவோ தீவிரமாக பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தவள் திரும்ப அடுப்படிக்குச்சென்று சீனிவாசனுக்கு குடிக்க தேநீர் தயாரித்து எடுத்துக்கொண்டு அவர்களிடம் வந்தவள், வாருங்கள் அண்ணா, இந்த டீயை சாப்பிட்டுக்கொண்டே பேசலாம் என்றும் வீட்டில் எல்ல்லோரும் நலமாக இருக்கிறார்களா? என்று கேட்டுவிட்டு கொஞ்சம் தள்ளிநின்று கொண்டு அவர்கள் பேசியதை கவனித்துக்கொண்டு இருந்தாள் .

தன் மகனிடம் பேசுவதாக சீனிவாசன் கூறவும் அண்ணா நான் உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் என்ற பார்வதி சற்று தயங்கி நீங்கள் என்பெண்ணின் மேல் எதுவும் குற்றம் இருக்கும் என்று நினைகிறீர்களா? என்று கேட்டாள் .

உடனே சீனிவாசன் என் நண்பனின் வளர்ப்பு பற்றியும் கவிழையாவின் குணத்தையும் அறிந்ததால் தான் நான் என் மகனுக்கு உங்கள் பெண்னை கேட்டேன். நான் எப்படி கவியைபற்றி தவறாக நினைப்பேன் என்றார்.

அப்படி என்றால் உங்களிடம் நான் ஒரு உதவி கேட்கிறேன் தயவுசெய்து எனக்கு உதவுங்கள் அண்ணா என்று கூறினாள்

இவரது வங்கியிருப்பு இப்பொழுது மருத்துவத்திற்கு செலவழித்தது போக ஒரு நார்பத்திஐந்து லட்சம் இருக்கிறது என் மகளின் கல்யாணத்திற்காக நாங்கள் எம்பது பவுன் வரை சேர்த்துவைத்துள்ளோம்

அதில் ஐம்பது பவுனை விற்று வரும் பணத்துடன் வாங்கில் உள்ள தொகையை சேர்த்து கவிழையாவை முதலில் வேலையில் இருந்து நிறுத்துவதற்கு அவள் அலுவலகத்தில் கொடுத்துவிடுவோம்.

மீதம் உள்ள முப்பது பவுனுடன் என்னிடம் உள்ள கழுத்தில் உள்ள கையில் உள்ள நகையுடன் சேர்த்து நாற்பது பவுன் போட்டு உங்கள் மகனுக்கு என் மகளை உடனே கல்யாணம் முடித்து அமெரிக்கா அனுப்பிவிட்டால் அந்த மஹிந்தனின் பிடியில் இருந்து என் மகளை காப்பாற்றி விடலாம் .

ஒரு பெண்னை காப்பாற்றிய புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும் தயவு செய்தது உங்கள் மகனிடம், இங்கே உள்ள நிலைமையை கூறி கல்யாணத்திற்கு சம்மதத்தை கேளுங்கள் அண்ணா .இந்த உதவியை எங்களுக்கு நீங்கள் செய்தால், காலம் முழுவதுவும் உங்களுக்கு நன்றி உள்ளவர்களாக எங்கள் குடும்பம் இருக்கும் என்று கூறினாள்.

பார்வதி கூறியதைக் கேட்டவர், தன் மகனிடம் பேசிவிட்டு கூறுவதாகச் சொன்னவர், ஈஸ்வரனை தைரியமசக இருக்கும்படி கூறி விடைபெற்றுச் சென்றார் .

அங்கு கவிழையாவின் ஆபீசில்.... மஹிந்தன் இல்லாததால் கவிழையா சற்று நிம்மதியாக இருந்தால். அவன் இருந்தால் அடிக்கடி ஏதாவது காரணத்தைச்சொல்லி ழையா என்று கூப்பிடுவதை அருக்கில் அவளை வைத்துக்கொள்வதை வாடிக்கையாக வைத்திருப்பான்,

மற்றவர்கள் அறியாமல் அவளை பேச்சாலும் செயலாலும் சீண்டிக் கொண்டே இருப்பான். அவன் ரசனையாக தன்னை பார்க்கும் போது அவளுக்கு அங்கு முள்ளின் மேல் நிற்பதைப்போல் இருக்கும் தப்பிக்க வழியில்லாமல் தவித்துப்போவாள்.

அவளின் தவிப்பு அவனை மேலும் உசுப்பேற்றுவதை பாவம் கவிழையா அறியவில்லை. அன்று மஹிந்தன் வராததால் சற்று சுதந்திரமாக இருந்தாள். .அவள் ரெஸ்ட் ரூம் சென்றபோது அவளைப்பற்றிய அலுவலகத்தில் பணிபுரியும் இரண்டு பெண்கள் பேசியதைக் கேட்டவள் அதிர்ச்சியடைந்தாள்.

அதில் ஒருத்தி “நம்ம எம்.டிக்கு கல்யாணம் வேறு ஒருத்தியுடன் நடக்கபோவதைத் தெரிந்தும், செக்ரட்டரி கவிழையா அவள் அழகால் எம்.டி யை தன் பக்கம் வளைத்து வைத்திருக்கிறாள், பாவம் அந்த ஐஸ்வர்யா” என்று கூறினாள் .

அதற்கு மற்றவள் பணக்காரர்களின் வாழ்கையில் இதுபோல் இரட்டை சவாரி வழக்கமானதுதான் .நம்மளுக்கு ஏன் இந்த வேண்டாத ஆராய்ச்சி. நம் ஆபிஸ்ல கவிழையா மேடத்தின் செல்வாக்கைத் தெரிந்தும் நீ இப்படி பேசலாமா ? யாராவது கேட்டாள் உன் வேலை கோவிந்தா , இது போல் வேறு யாரிடமும் உளறி வைக்காதே என்று கூறியபடி திரும்பிப் பார்த்தால் கவிழையா நின்று கொண்டிருந்தாள்.

அவளை பார்த்ததும் இரண்டு பேறும் அதிர்ச்சியாகி பின் தாங்கள் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு வெளியேறினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.